புகைப்பட இணையதளங்களில் ஒரு புரட்சி.

வீசே.காம் இணையதளத்தை புரட்சிகரமானது என வர்ணிப்பது அந்த சொல்லுக்கான நியாயமாகாது தான் என்ற போதிலும் மற்ற புகைப்பட தளங்களில் இருந்து மாறுப்பட்ட தன்மையை சுட்டிக்காட்டுவதற்காக இந்த வர்ணனையை பயன்படுத்தலாம்.

அது மட்டும் அல்லாமல் வீசே புகைப்பட வெளியீட்டில் ஒரு சமத்துவத்தை கொண்டு வருவதையும் முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதால் இப்படி வர்ணிப்பதில் தவறில்லை.

புகைப்பட பகிர்வு தளங்களில் முன்னோடியான பிலிக்கர் உட்பட அநேக புகைப்பட தளங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுலபமாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவுகின்றன.இந்த படங்களை பார்த்து ரசிக்கலாம் அவ்வளவு தான்.

ஆனால் வீசே செய்தி புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்கிற‌து.அதனால் தான் இது தன்னை செய்தி தளம் என அறிமுகம் செய்து கொள்கிறது.அதிலும் மாறுப்ப்ட்ட செய்தி தளம்.

அப்படி என்ன மாறுப்பட்ட தன்மை என்றால் செய்திகளை புரிய வைக்கும் புகைப்படங்களை தொழில் முறையிலான புகைப்பட கலைஞர்கள் மட்டும் அல்லாமல் சாமான்யர்களும் பகிர்ந்து கொள்ள வழி செய்கிற‌து.

அதனால் தான் காமிரா வைத்திருக்கும் சாமான்யர்களை அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்து புகைப்படம் எடுத்து சம‌ர்பிக்குமாறு கேட்டு கொள்கிற‌து.

இந்த புகைப்படங்கள் தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் படங்களுக்கு நிகராக வெளியிடப்படும்.உலக நிகழ்வுகளையும் நாட்டு நடப்புக்களையும் தேர்ந்த புகைப்பட கலைஞர்கள் மட்டும் தானா படம் எடுத்து வெளியிட வேண்டும்.சாதாரண மனிதர்களும் கூட இப்படி சமூக நிகழ்வுகளை புகைப்படம் வழியே பதிவு செய்யக்கூடிய சமமான வாய்ப்பை வழங்குவது தான் இந்த தளத்தின் பிரதான நோகமாக இருக்கிறது.

பெரிய பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் தொழில் முறையிலான புகைப்பட கலைஞர்கள் செய்தி வெளியிட்டில் ஆதிக்கம் செலுத்து வருவதை குறைத்து சாமானயர்க்கும் சரிசமமான வாய்ப்பு ஏறப்டுத்தி தருகிறது.

இன்று பெரும்பாலானோர் கைகளில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ இருக்கிறது.இவர்களில் நாட்டு நடப்பு மீது ஆர்வம் உள்ளவர்கள் மக்கள் புகைப்பட கலைஞராக மாறி புகைப்படங்களை எடுத்து சம‌ர்பிக்க ஊக்கம் அளிக்கிறது இந்த தளம்.

இந்த படங்கள் முகப்பு பக்கத்தில் வெளியிடப்படுவதோடு பல்வேறு புகைப்பட போட்டி நடத்தப்பட்டு அதில் பரிசு பெறும் வாய்ப்பும் பெற்றிருக்கின்றன.

உறுப்பினர்கள் முதலில் தாங்கள் எடுத்த புகைப்படத்தை தங்களுக்கான பக்கத்தில் வெளியிடலாம்.அதன் பிறகு ஆசிரியர் குழு அவற்றை பரிசிலித்து முகப்பு பகத்தில் இடம் பெற வாய்ப்பு அளிக்கப்படுகிற‌து.

பின்னர் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்கலாம்.

செய்தி,பிரபலங்கள்,விளையாட்டு என பல பிரிவுகளில் படம் எடுத்து சம்ர்பிக்கலாம்.உங்கள் சுற்றுப்புரத்தின் பிரச்ச்னைகளையும் படம் எடுத்து சமர்பிக்க‌லாம்.

மற்றவர்கள் எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசிக்கவும் செய்யலாம்.அவற்ரை பாராட்டியோ விமர்சித்தோ கருத்தும் தெரிவிக்கலாம்.

சில முக்கிய நிகழ்வுகளின் போது சாமான்யர்கள் எடுத்த புகைப்படங்கள் அரிதானதாக அமைந்து அந்த ப்டங்கள் கொண்டாடப்படுவதை அவப்போது பார்க்கிறோம்.

இனி இவை தற்செய்லாக இருக்க வேண்டியதில்லை.நீங்களும் கூட திட்டமிட்டு புகைப்படம் எடுத்து பெயர் வாங்கலாம்.

ஆக காமிராவை குறி பாருங்கள்.கிளிக் செய்யுங்கள்.கிளிக் ஆகுங்கள்.

இணையதள முகவரி;http://www.wesay.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புகைப்பட இணையதளங்களில் ஒரு புரட்சி.

  1. dashk

    very good and thank u

    Reply
  2. karuna

    Your site is interesting ,this is my first visit.keep it up.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *