தமிழில் இது போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது சம்மரைசர் இணையதளம்.இந்த தளம் நீளமான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவுகிறது.
அதாவது நீளமான கட்டுரைகளை ஒரு சில வரிகளில் சுருக்கி தந்து விடுகிறது.அந்த சில வரிகளை படித்தால் போதும் கட்டுரையின் சாரம்சத்தை புரிந்து கொண்டு விடலாம்.
நீளமான கட்டுரையை படிக்க நேரமில்லாதவர்களுக்கான சேவை என்ற போதிலும் பத்து வரிக்கு மேல் எதையும் படிக்க பொருமை இல்லாதவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த இணையதளம் செயல்படும் விதமும் வேகமும் உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.எந்த கட்டுரையின் சுருக்கம் தேவையோ அதனை இந்த தளத்தில் சமர்பித்து சுருக்கவும் என கேட்டுக்கொண்டால் அடுத்த சில நொடிகளில் அதன் சாரம்சத்தை முன் வைக்கிறது.
கட்டுரையின் மூன்று வகையான சுருக்கத்தை கேரும் வசதி இருப்பது கூடுதல் சிறப்பு.டிவிட்டர் பிரியர்கள் 140 எழுத்துக்களுக்குள் சுருக்கத்தை பெற்று கொள்ளலாம்.அதே போல 250 எழுத்துக்கள் கொண்ட சுருக்கத்தையும் 500 எழுத்துக்கள் கொண்ட சுருக்கத்தையும் பெறலாம்..
மாணவர்கள்,ஆய்வாளர்கள்,பேராசிரியர்கள் ,வாசிப்பு சோம்பேரிகள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
நீளமான கட்டுரையை அப்படியே சுருக்கி படிக்க முடிவதை எளிதாக நிறைவேற்றி தந்தாலும் இந்த சேவையின் பின்னே உள்ள விஷயம் எளிதானதல்ல என்றே தோன்றுகிறது.
பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலையில் உள்ள மொழியியல் ,ஐடி மற்றும் சாப்ட்வேர் துறையை சேர்ந்த நிபுணர்களின் 20 ஆண்டு கால கூட்டு முயற்சியின் பயனாக இதனை சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உழைப்பின் பயனாக உருவாக்கப்பட்ட 8 கோடிக்கும் அதிகமான நிரல்களை (கோட்)கொண்டு இந்த அற்புதம் சாத்தியமாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையிலேயே இது அற்புதமான சேவை தான்.இயந்திர மொழிபெயர்ப்பில் உள்ள கஷ்டங்களை அறிந்தவர்களுக்கு இதன் மகத்துவம் புரியும்.ஒரு சொல்லுக்கான பொருள் அதை பயன்படுத்தப்பும் விதம்,இடம் ஆகியவற்றுக்கேற்ப மாறுபடும்.மனித மனம் இதனை எளிதாக கண்டு கொள்ளும்.ஆனால் சாப்ட்வேர் திணறிவிடும்.எனவே தான் இயந்திர மொழிபெயர்ப்பு பெரும்பாலும் துல்லியம் இல்லாமலும் பல நேரங்களில் சிரிப்புக்கு இடமாகவும் அமைந்து விடுகிறது.
வாசிப்பிலும் இதே நிலை தான்.ஒரு நீண்ட கட்டுரையை படிக்கும் மனிதர்கள் எளிதாக அதன் சாரம்சத்தை நாலு வரியில் சொல்லி விடுவார்கள்.ஆனால் ஒரு சாப்ட்வேர் இதனை செய்ய முற்படும் போது நிறைய சிக்கல்கள் உள்ளன.
இந்த சிக்கலுக்கான உதாரணங்களை இந்த தளமே தனது அறிமுக பகுதியில் குறிப்பிட்டுள்ளது.
காலம் ஒரு அம்பை போல பறந்தது என குறிப்பிடும் போது இது குறிக்கும் வேகத்தை சட்டென புரிந்து கொள்வது கம்ப்யூட்டருக்கு சாத்தியமா தெரியவில்லை.இது போன்ற மொழியியல் நுட்பங்களை கருத்தில் கொண்டு இவற்றை எல்லாம் உணரக்கூடிய நிரலை எழுதியுள்ள நிபுணர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக தான் இருக்க வேண்டும்.
இந்த சாப்ட்வேர் பின்னே இருக்கும் கனெக்சர் நிறுவனம் தான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறது.நோக்கியா,மோட்டரோலா போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் இந்த சாப்ட்வேரை காட்சி படுத்துவதற்கான தளமாக இது உருவாக்கப்பட்டிருக்கலாம்.
எப்படி இருந்தாலும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய சேவை தான்.
இந்த தளத்திலேயே இன்னும் இரண்டு அழகான சேவைகளுக்கான இணைப்பு இருக்கிறது.
ஒன்று குட் நியூஸ் பேட் நியூஸ்.இந்த பகுதியில் ஏதாவது நிறுவனத்தின் பெயரை டைப் செய்தால் அந்நிறுவனம் தொடர்பான செய்திகளை நல்ல செய்தி,எதிர்மரையான செய்தி என இரண்டு வகையாக பிரித்து காட்டுகிறது.
இதே போல பிராண்ட்பைட் பகுதியில் இரண்டு பிராண்டுகளை சமர்பித்தால் அவற்றுகான செய்திகளின் ஒப்பீட்டை வரைபடமாக காட்டுகிறது.
இணையதள முகவரி;http://www.summarizer.info/

0 Comments on “நீளமான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவும் இணையதளம்.”
CSK
வரிக்கு வரி பிழை !
திருத்துங்கள் அடுத்த பதிவிலாவது !
Anbudan!
cybersimman
திருத்தி விடேன் நண்பரே.
Pingback: கட்டுரைகளை சீர் தூக்கி பார்க்கும் இணையதளம். | Cybersimman's Blog
Pingback: இணையதளங்களின் சுருக்கத்தை வாசிக்க! | Cybersimman's Blog