சைட் நெக்ஸ்ட் டோர்,சிமிலர் சைட்ஸ்,வெப்சைட்லைக் போன்ற தளங்கள் ஒரே மாதிரியான தளங்களை தேடித்தரும் சேவையை வழங்கி வருகின்றன.குறிப்பிட்ட இணையதளம் போலவே உள்ள பிற தளங்களை இவை தேடித்தருகின்றன.
இதே சேவையை ஸ்கிர்டில் இன்னும் சுவாரஸ்யமாக வழங்குகிறது.அதனால் தான் தன்னை இணையதளங்களுக்கான பான்டோரா என வர்ணித்து கொள்கிறது.
அதாவது இணையவாசிகள் தேடாமலேயே அவர்களுக்கு தேவைப்படகூடிய இணையதளங்கள் பட்டியலை இது பரிந்துரைக்கிறது.
இணைய வானொலியான பான்டோரா ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலின் அடிப்படையில் அவருக்கு பிடித்தமான பாடல்களை பரிந்துரைக்கும் சேவையாகும்.
ஸ்கிர்டில் இதே பாணியில் ஒருவர் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அடிப்படையாக வைத்து கொண்டு அதே போன்ற இணையதளங்களை பரிந்துரைக்கிறது.
பான்டோரா இசைப்பிரியர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடியது போல ஸ்கிர்டில் இணையவாசிகளை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியது.
நீங்கள் குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிட்டு கொண்டிருக்கும் போது அதே போலவே உள்ள வேறு சில தளங்களும் பிரவுசரில் எட்டிப்பார்த்தால் எப்படி இருக்கும்.இதை தான் ஸ்கிர்டில் புக்மார்கிங் வடிவில் சாத்தியமாக்குகிறது.
இதற்காக ஸ்கிர்டில் புக்மார்கை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது அப்போது பார்த்து கொண்டிருக்கும் இணையதளம் போலவே உள்ள வேறு தளங்களை தேட விரும்பினால் புக்மார்க்கை கிளிக் செய்தால் தொடர்புடைய பிற தளங்களை காட்டுகிறது.
இணையதளங்கள் அழகிய வட்டங்கள் போல பல வண்ணங்களில் வந்து விழுகின்றன.இந்த தளங்களோடு விளம்பர நோக்கில் பரிந்துரைக்கப்படும் இணையதளங்களும் இடம் பெறுகின்றன.(வருவாய்க்காக) அவற்றில் இருந்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
தளங்களில் கிளிக் செய்தால் நேராக அவற்றின் முகப்பு பக்கத்துக்கே சென்று விடலாம்.இணையதள பரிந்துரை திருப்தி அளிக்காவிட்டால் உங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது.சரியான பரிந்துரை என்றால் அதற்கு பாராட்டாகவும் செய்கை செய்யலாம்.
பரிந்துரை சரியில்லை என்று நீங்கள் சுட்டிக்காட்டிய தளங்கள் பின்னர் மீண்டும் உங்கள் பார்வைக்கு வந்து நிற்காது என்பதோடு இப்படி இணையவாசிகள் சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்ப எதிர்கால பரிந்துரைகள் பட்டை தீட்டப்படும்.
ஸ்கிர்டில் புக்மார்கை டவிண்லோடு செய்து கொண்டால் எப்போது தொடர்புடைய தளங்களை பார்வையிட வேண்டிய தேவை ஏற்படுகிறதோ அப்போது ஒரு கிளிக் செய்தால் அந்த தேவையை நிறைவேற்றி கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://skrittle.com/

0 Comments on “இணையதளங்கள் தேட புதிய வழி.”
Pingback: புதிய செய்திகளை தெரிந்து கொள்ள அசத்தலான புக்மார்க் ! | Cybersimman's Blog