ஸ்கிர்டில் இணையதளங்களுக்கு செய்வதை ‘நெக்ஸ்ட் ஸ்டோரிஸ்’ செய்திகளுக்கு செய்கிறது.அதாவது இணையவாசிகள் படித்து கொண்டிருக்கும் செய்திகளை ஒத்திருக்கும் மற்ற செய்திகளையும் அது தேடித்தருகிறது.
இருந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் பெற முடிவது போல இந்த தளம் ஒரு இணையதளத்தில் தொடர்புடைய எல்லா செய்திகளையும் படிப்பதை சாத்தியமாக்குகிறது . மிக அழகாக புக்மார்க் சேவை மூலம் இதனை நிறைவேற்றி தருகிறது.
ஒரு செய்தியை படிக்கும் போது தொடர்புடைய பிற செய்திகளை தெரிந்து கொள்ள விரும்புவது இயல்பானது தான்.கூகுலில் தேடும் போது கூட தொடர்புடைய செய்திகளை பார்க்க முடியும்.
இதை மேலும் விரிவாக்கில் இன்னொரு படி மேலே கொண்டு செல்கிறது ‘நெக்ஸ்ட் ஸ்டோரிஸ்’ .பெயருக்கேற்பவே இது ஒரு செய்தியில் இருந்து அடுத்த செய்திகளை அடையாளம் காட்டுகிறது.
இதை பயன்படுத்துவதும் சுலபம் தான்.இந்த தளத்தில் உள்ள ‘நெக்ஸ்ட் ஸ்டோரிஸ்’என்னும் புக்மார்கிங் வசதியை அப்படியே இழுத்து கொண்டு போய் உங்கள் பிரவுசர் புக்மார்க் பகுதியில் வைத்து விட வேண்டும்.அதன் பிறகு ஒரு இணையதளத்தில் உள்ள செய்திகளை படித்து கொண்டிருக்கும் போது தொடர்புடைய அல்லது அதே போன்ற பிற செய்திகளை படிக்க விரும்பினால் நெக்ஸ்ட் ஸ்டோரிஸ் புக்மார்க்கை கிளிக் செயதால் போதும்,இணையம் முழுவதும் தேடி தொடர்புடைய செய்திகளை எடுத்து வந்து அந்த பக்கத்தில் காண்பிக்கும்.எந்த செய்தி தேவையோ அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒரே தளத்தில் உலாவி இணையம் முழுவதும் உலாவிய பயனை பெற இந்த வசதி நிச்சயம் உதவும்.செய்தி பிரியர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகளை ஒவ்வொரு தளமாக சென்று தேடாமல் ஒரே இடத்தில் ஒரே கிளிக்கில் பெற முடிவது நல்ல விஷயம் தானே!.
இணையதள முகவரி;http://www.nextstories.com/