முட்டையை சரியான முறையில் வேக வைப்பதற்கான நேரத்தை காட்டும் இணையதளம் இருப்பது போல கமகமக்கும் டீயை சரியாக போடவும் தேயிலையை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று சொல்வதற்காகவே ஸ்டீப்.இட் இணையதளம் இருக்கிறது.
தேயிலையை பல வகைகள் இருக்கின்றன.ஒவ்வொரு தேயிலையையும் ஒரு குறிப்பிட்ட நேரம் கொதிக்க வைத்தால் தான் அதன் சுவையை முழுமையாக உணர முடியும்.
ஸ்டீப்.இட் இணையதளம் இப்படி தேயிலையை அதன் வகைக்கு ஏற்ப முழுமையாக சுவைத்து மகிழ இரண்டு விதங்களில் உதவுகிறது.ஒன்று தேயிலையை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் அடுப்பில் தேயிலையை கொதிக்க வைத்து விட்டு இந்த தளத்தில் கடிகாரத்தில் அதற்கான நேரத்தை குறிப்பிட்டு காத்திருக்கலாம்.அந்த நேரம் முடிந்ததும் இந்த தளம் அலாரத்தின் மூலம் அதனை தெரிவிக்கிறது.
கிரின் டீயோ,மூலிகை டீயோ எவ்வளவு நேரம் கொதிக்க வைப்பது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் அதற்கான நேரத்தையும் தெரிவித்து,கொதிக்கும் போது நேரம் கணக்கிட்டு எச்சரிக்கும் சேவையையும் இந்த தளம் வழங்குகிறது.இதற்கான என்று தனியே அட்டவணையே இருக்கிறது.
டீ போட எல்லாம் கணக்கு போட ஒரு இணையதளமா என இல்லத்தலைவிகள் இளக்காரமாக பார்க்கலாம் என்றாலும் ஆண்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் இந்த தளம் கைகொடுக்கலாம்.
தவிரவும் சமையலையும் கொஞ்சம் ஹைடெக்காக மாற்றிக்கொண்டால் சுவாரஸ்யமாக தானே இருக்கும்.
இந்த தளத்தில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால்,தேயிலை கொதிப்பதற்கான நேரம் தெரியும் என்றால் அதனை தனியே டைப் செய்யகூட தேவையில்லை,பிர்வுசரில் இணையதள முகவரி டைப் செய்யும் போது,ஒரு ஸ்லேஷ் போட்டு அந்த நேரத்தையும் அடித்தால் போதும் கடிகாரம் வேலை செய்யத்துவங்கி விடும்.அதே போல இணையதள முகவரியோடு டீயின் பெயரை சேர்த்து டைப் செய்தாலும் கடிகாரம் செயல்படத்துவங்கி விடுகிறது.
இணையதள முகவரி;http://www.steep.it/
(முந்தைய முட்டை வேக வைக்கும் பதிவில் குறிப்பிட்டது போல நேரம் கணக்கிடும் தளங்கள் பற்றி எழுத துவங்கியுள்ளேன்.தேயிலை பிரியர்களுக்கான இனையதளம்,முட்டை வேக வைக்க மற்றொரு இணையதளம் மற்றும் பிற நேரம் காட்டும் தளங்களை தொடர்ந்து பார்க்கலாம்)