திரைபகிர்வு(ஸ்கிரின் ஷேரிங்) இணைய சேவைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
இணையத்தில் ஒருவர் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அப்படியே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் தளங்களே திரை பகிர்வு சேவை என குறிப்பிடப்படுகிறது.இந்த தளங்களின் உபயத்தால் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் உங்கள் நண்பர்களும் காணச்செய்யலாம்.
ஸ்கிரின்லீப் இணையதளமும் இத்தகைய திரை பகிர்வு சேவை தான்.ஆனால் மற்ற திரை பகிர்வு சேவைகளை விட இது எளிதானதாக இருக்கிறது.காரணம் இதனை பயன்படுத்த எதையும் டவுண்லோடு செய்யவோ இன்ஸ்டால் செய்யவோ தேவையில்லை.உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும் அவசியமில்லை.(ஆனால் ஜாவா ஸ்கிரிட் வசதி தேவை)
இணையதளத்தை யாருடனாவது பகிர்ந்து கொள்ளும் தேவை ஏற்பட்டால் இந்த தளத்தில் உள்ள திரையை பகிரவும் என்னும் பட்டனை கிளிக் செய்தால் போதும் உங்களுக்கான இணைய முகவரி ஒன்று உருவாக்கி தரப்படுகிறது.அந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் அவர்களும் அதே இணையதளத்தை பார்க்க துவங்கலாம்.
இதே போலவே நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் இணையதளத்தை அவர் அனுப்பும் இணைய முகவரி மூலம் நாமும் பார்க்கலாம்.
ஒரு குழுவாக பணியாற்ற விரும்புகிறவர்கள் வேறு வேறு இடங்களில் இருந்தால் இந்த சேவை மூலம் தாங்கள் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை குழுவினரையும் பார்க்க செய்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
தொழில்நுட்ப விஷ்யங்களின் அனுபவம் இல்லாதவர்கள் தங்கள் கம்ப்யூட்டடில் ஏதேனும் பிரச்சனை என்று ஆலோசனை கேட்டால் அப்போது இந்த வசதியை பயன்படுத்தி கொண்டு இணைய பக்கத்தை பகிர்ந்த படி ஆலோசனை சொல்லலாம்.
மேலும் பலவிதங்களின் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.
உறுப்பினராகாமல் பயன்படுத்தும் எளிமை கொண்டது என்று பெருமை பட்டு கொள்ளும் ஸ்கிரின் லீப் தளம் புதிதாக ஜிமெயில் மூலம் உறுப்பினராகும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.இந்த சேவையை பயன்படுத்த இது அவசியம் இல்லை என்றாலும் உறுப்பினரானால் நண்பர்கள் பட்டியலை உருவாக்கி கொள்ளுதல் போன்ற கூடுதாலான அமசங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://www.screenleap.com/

0 Comments on “நான் பார்க்கும் இணையதளங்கள்.”
திண்டுக்கல் தனபாலன்
நல்லதொரு தளம் அறிமுகம்…
பகிர்வுக்கு நன்றி…
தொடருங்கள்…வாழ்த்துக்கள்…
“உன்னை அறிந்தால்… (பகுதி 1)”
பாரி
தங்களைப்போல் நல்ல செய்திகளை அறிமுகம் செய்பவர்களால்தான் வானம் தன் கடமையை செய்கிறது, இதுபோன்று அறிமுகம் செய்யும் தங்களைப் போன்றவர்களை அறிமுகம் செய்யுங்கள், வாழ்த்துக்கள்,
cybersimman
பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே.
senthilnathan
தொடருங்கள்…வாழ்த்துக்கள்…