பேஸ்புக் பகிர்வுகள் சுய தம்பட்டமாகவோ அல்லது சுய செய்திகளாக தான் இருக்க வேண்டுமா என்ன?அழகான பொன்மொழிகளையும் சிந்த்தனையை தூண்டக்கூடியகருத்துக்களையும் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த பொன்மொழிகளை வழக்கமான செய்தியாக பகிர்ந்து கொள்ளாமல் அழகிய இணைய போஸ்டராக பகிர்ந்து கொள்ள முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.அதாவது அவற்றுக்கு என தனி வடிவமைப்பு மற்றும் பிரத்யேக எழுத்துருக்களோடு பொன்மொழிகளை வெளியிட முடிந்தால் எளிதாக கவனத்தை ஈர்க்கலாம்.
இன்ஸ்பிரபிள் இணையதளம் இதை தான் சாத்தியமாக்குகிறது.
மேற்கோள்களை உருவாக்கவும் என்னும் பகுதிக்கு சென்றால் வரும் கட்டத்தில் நமக்கான வாசகத்தை பூர்த்தி செய்து விட்டு கீழே பெயரையும் குறிப்பிட்டால் அந்த வாசகத்தை அழகான இணைய போஸ்டராக மாற்றித்தருகிறது.
இறுதி வடிவத்தை தேர்வு செய்யும் முன் வடிவமைப்பை மாற்றவும் வாசகத்தை மாற்றவும் வாய்ப்பு தரப்படுகிறது.
பொன்மொழிகளை அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் சிந்தனையை இப்படி மாற்றி பேஸ்புக் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த பொன்மொழிகளை பேஸ்புக்கில் மட்டும் அல்ல டிவிட்டரில் குரும்பதிவுகளாகவும் பகிர்ந்து கொள்ளலாம்.டெஸ்க்டாப்பில் ஸ்கீரின் சேவர் போலவும் செல்போன் திரையிக்காக ஸ்கீரின் சேவராகவும் கூட பகிர்ந்து கொள்ளலாம்.
வெளியிடுவதில் மட்டும் தான் ஆர்வம் என்றால் இந்த வசதியை பயன்படுத்தி பொன்மொழிகளை தயார் செய்து கொன்டு விடலாம்.இல்லை என்றால் இந்த தளத்தில் சக உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டுள்ள மொழிகளை ஆர்வத்தோடு மேயலாம்.சமீபத்திய மொழிகள்,பிரபலமான மொழிகள்,அதிகம் பகிரப்பட்டவை போன்ற தலைப்புகளில் மொழிகளை காணலாம்.
இவற்றில் விரும்பிய மொழிகளை படித்த பின் அவை பற்றி நமது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
புதிய பின்மொழிகளை தெரிந்து கொள்ள இது சுவாரஸ்யமான வழியாக இருக்கிறது.
பத்து இருவது என பொன்மொழிகளை பகிர்ந்து கொண்ட உறுப்பினர்கள் எல்லாம் இருக்கின்றனர்.ஆக உங்களுக்கும் கூட அந்த பழக்கம் தொற்றிக்கொள்ளலாம்.
பேஸ்புக்கில் நம்மூர் பொன்மொழிகளையும் பழமொழிகளையும் பகிர்ந்து கொள்ளவும் இது சிறந்த வழி.
இணையதள முகவரி;http://inspirably.com/

0 Comments on “பேஸ்புக்கில் பொன்மொழிகளை பகிர்ந்து கொள்ள!.”
திண்டுக்கல் தனபாலன்
நல்லதொரு தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார் !
almashoora
mobile phonil picture message eppadi thyaarippathu enpathu patti enakku ariaththaruveerkala please