கூகுலில் புதிய வசதி.

சின்ன சின்ன அற்புதங்களை அறிமுகம் செய்வதில் கூகுலுக்கு நிகராக வேறு தேடியந்திரத்தை பார்க்க முடியாது.

இப்போது கூகுல் அறிமுகம் செய்துள்ள அற்புதம் கால்குலேட்டர்.

தேடல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கூகுல் அறிமுகம் செய்யும் புதிய வசதிகள் மிக மிக எளிதான சேவையாக இருந்தாலும் அதனளவில் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.அது மட்டும் அல்ல எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இந்த கூடுதல் சேவைகள் அறிமுகமாகி நிற்கும்.

கேல்குலேட்டரும் இப்படி தான் சத்தமில்லாமல் அறிமுகமாகியிருக்கிறது.

இந்த கேல்குலேட்டரை கூகுல் முகப்பு பக்கத்தில் பார்க்க முடியாது.ஆனால் தேடல் பக்கத்தில் ஏதாவது எண்களை டைப் செய்து தேடும் போது முடிவுகளுக்கு மேலே இந்த கேல்குலேட்டர் எட்டிப்பார்க்கிறது.

34 வகையான பட்டன்களை கொண்ட இந்த கேல்குலேட்டரில் எல்லா வகையான கணக்குகளையும் போடலாம்.

இணைய கேல்குலேட்டர்களாக விளங்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன.ஆனால் தனியே கேல்குலேட்டரை தேடிப்போக வேண்டிய தேவையில்லாமல் எண்களை டைப் செய்தவுடன் கால்குலேட்டர் எட்டிப்பார்ப்பது நல்ல விஷயம் தானே.

அந்த ஆச்சர்யத்தை தான் கூகுல் அளிக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலில் புதிய வசதி.

  1. அருமையான தகவல்.

    Reply
  2. SENGOTTUVEL K

  3. நல்ல தவல் நன்றி

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *