ஊர் அறிந்த ரகசியம் தான் அது. இல்லை உலகறிந்த ரகசியம் தான். ஆனால் அதில் இப்போது, எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் இது பற்றி எச்சரிக்கை செய்யும் வகையில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இன்டெர்நெட் மூலம் தீவிரவாத இயக்கங்கள் வலை வீசி தங்களுக்கான ஆதரவாளர்களை அதாவது, பலிகடாக்களை தேர்வு செய்யும் முயற்சி தான் இப்படி அந்த இதழால் குறிப்பிடப்படுகிறது.
|
|
. | |
பயங்கரவாத நடவடிக்கைகளில் முன்னிலையில் இருக்கும் அல்கொய்தா இன்டெர்நெட்டை பயன்படுத்திக் கொள்வதிலும் முன்வரிசையில் இருப்பது தெரிந்த விஷயம் தான்.
மைய தலைமை என்று இல்லாமல் ஆங்காங்கே மறைமுக கட்டளைகள் மூலம் செயல்படுவதாக கூறப்படும் அல்கொய்தா அமைப்பினர் தங்களுக்குள் தொடர்பு கொள்ள இன்டெர்நெட்டின் பரந்து விரிந்த வலை பின்னல் அமைப்பு ஏற்றதாக அமைந்திருக்கிறது. இதனால் இணைய தளங்கள் மூலம் அல்கொய்தா இயக்கத்தின் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டு நாசவேலைக்கான உத்தரவு கள் பிறப்பிக்கப்படுகின்றன. அதோடு இந்த இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு முயற்சியும் இன்டெர்நெட் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் முயற்சி தான் என்ற போதிலும் இப்போது இதில் புதிதாக அரங்கேறி இருப்பது என்னவென்றால், அல்கொய்தா ஆதரவு இணைய தளங்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு இணையவாசிகளை கவரும் வகையில், பளீச்சென தோன்றும் வீடியோ மற்றும் கவர்ச்சிகரமான வாசகங்களோடு கண்ணை கவரும் வகையில் அமைந்திருக்கின்றன என்பது தான். வர்த்தக நிறுவனங்கள் புதிய மார்க்கெட்டிங் முயற்சியை மேற்கொள்ள, அற்புதமான இணைய தளங்களை அமைத்தால் எப்படி இருக்குமோஈராக் உள்ளிட்ட அல் கொய்தாவின் வாலாட்டும் பூமியாக விளங்கும் நாடுகளில் எடுக்கப்பட்ட கார் குண்டு வெடிப்புகள் மற்றும் இதர தாக்குதல் பற்றிய வீடியோ காட்சிகள் இந்த தளங்களில் பிரதானமாக இடம் பெற்றிருக்கின்றன. இவை சாதாரண வீடியோ காட்சியாக இல்லாமல், கண்ணை கவரக்கூடிய பாப் பாடல் ஆல்பத்தை போல நேர்த்தியாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் விரிவான பேட்டி மற்றும் வாக்குமூலங்கள் ஆகியவையும் சுவாரஸ்யமான முறையில் அளிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் புதிய தீவிரவாதிகளை ஈர்க்கும் முயற்சியாக கருதப்படுகிறது. அரேபிய மொழி மட்டுமல்லாமல் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 39 பக்க பிரத்யேக தீவிரவாத கையேடும் பெரும்பாலான தளங்களில் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட ஒரு தளம் தீவிரவாதத்தை பரப்புவதற்காக என்றே ஒரு நாவலை எழுதி இ புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. இந்த நாவலில் தீவிரவாதியாக மாறிய ஒருவர் தனது கதையை விவரிக்கிறார். இந்த தளங்களில் இடம் பெறும் வீடியோ கோப்புகள் யூடியூப் போன்ற வீடியோ பதிவு தளங்களில் தவறாமல் இடம் பெற்றுகின்றன. இவற்றின் தரம் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்டெர்நெட் மாறி வருவதற்கு ஏற்ப, அதனை பயன்படுத்தும் தீவிரவாத இயக்கமும் மாறி இருக்கிறது. அவற்றின் வழியும் மாறி இருக்கிறது. அதன் அடையாளம் இந்த நவீன இணைய தளங்கள் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த இணைய தளங்களுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கின்றன என்பதை சரியாக கணிக்க முடியவில்லை என்று அந்நாளிதழ் கூறுகிறது. ஆனால் தீவரவாதத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகள் இதற்கு பதிலடி தரும் வகையில் தங்கள் வலை முயற்சியை விரிவாக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது., அப்படி அல்கொய்தா இணைய தளங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. |