எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் நிதர்சனமும் அது தான்.
எந்த துறையை எடுத்து கொண்டாலும்,எந்த சேவையை எடுத்து கொண்டாலும் அதற்கென ஒரு செயலி இருக்கிறது.பிரச்சனைகளுக்கு தீர்வு தர செயலி இருக்கிறது.நட்சத்திரங்களுக்கு செயலி இருக்கிறது.
ஐபோன்,மற்றும் ஆன்ட்ராய்டு போன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உள்ளங்கையில் இருந்தே எல்லாவற்றையும் அணுக உதவும் செயலிகளும் பிரபலமாக வருகின்றன.
இந்தியாவிலும் இப்போது விதவிதமான செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
செல்போன் செயலிகளின் முக்கியத்துவத்தையும் தேவையையும் உணர்ந்தவர்களின் பட்டியலில் திரைப்படத்துறை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகனும் சேர்ந்திருக்கிறார்.சினிமா தகவல்கள் மற்றும் செய்திகளை உள்ளங்கக்கே கொன்டு வரும் வகையில் நிகில்ஸ்சினிமா என்ற பெயரில் செல்போன் செயலியை அவர் உருவாக்கி உள்ளார்.
நிகில் மக்கள் தொடர்பாளர்களில் ஒரு நட்சத்திரமான கருதப்படுபவர்.நட்சத்திரங்களை கையாளுவதில் அவரது சுறுசுறுப்பும் செயல்திறனும் இந்த அந்தஸ்தை பெற்று தந்துள்ளது என்றாலும் தொழில்நுட்பத்தில் அவருக்கு உள்ள பரிட்சயமும் அவற்றை பயன்படுத்துவதில் உள்ள ஆர்வமும் இதற்கு முக்கிய காரணம்.
தகவல்களை தருவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக தனது காரை அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வரும் நிகில் இணையத்தின் முக்கியத்தையும் நன்கறிந்திருப்பவர்.
வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் அவருக்கென தனி சேனல் இருக்கிறது.நிகில்ஸ் சினிமா என்ற பெயரில் இணையதளமும் வைத்திருக்கிறார்.
இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் தனக்கென தனி செல்போன் செயலியை உருவாக்கியுள்ளார்.
ஆப்பிளின் ஐபோன்,ஐபாட் டச்,ஐபேட், மற்றும் ஆன்டிராய்டு வசதி கொண்ட செல்போன்களில் இந்த செயலி செயல்படக்கூடியது.
திரைப்படத்துறை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வழகும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய சினிமா செய்திகள்,திரைப்பட நட்சத்திரங்களின் புகைப்பட கேலரி,நிகழ்ச்சிகளின் நாட்காட்டி,பேட்டிகள்,முன்னோட்டங்கள் என தனித்தனி பகுதிகளை கொண்டுள்ள இந்த செயலியில் குறும்படங்களுக்கான பகுதியும் புதுமுகங்களுக்கான அறிமுக பகுதியும் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் இந்திய சாப்ட்வேர் நிறுவனமான ஒய்2ஜிஸ்மீ லேப்ஸ் நிறுவனம் இதனை உருவாக்கி தந்துள்ளது.அர்ச்சனா பட்சிராஜனை இணை நிறுவனராக கொண்ட இந்நிறுவனம் இது.
செல்போனில் திரைப்படத்துறை தகவல்களை தருவதில் முன்னோடி முயற்சியான இந்த செயலியை சமீபத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்.
இண்டெர்நெட்டே கூட செல்போன் திரைக்கு இடம் பெயர்ந்து வருவதாக கருதப்படும் காலத்தில் சினிமா செய்தி மற்றும் தகவல்களை வழங்கும் இந்த செயலி வரவேற்புக்கிறியது.
ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்டோரில் இதனை டவுண்லோடு செய்யலாம்.
———-
iPhone, iPad and iPod touch download Link – http://bit.ly/MfesRa
Android Link – http://bit.ly/NWq2yY
—————-
இணையதள முகவரி;http://nikhilscinema.com/