16 புகைப்படங்களில் உங்கள் வாழ்க‌கை!

இது புகைப்படங்களின் காலம்.பெரும்பாலானோரிடம் டிஜிட்டல் காமிரா இருக்கிறது.இல்லை செல்போன் கேமிரா இருக்கிறது.விளைவு எல்லா நிகழ்வுகளும் புகைப்படங்களாக பதிவாக கொண்டிருக்கின்றன.எடுக்கப்பட்ட புகைப்படங்கள் டெஸ்ட்காப்பில் போல்டர்களாக உறங்கி கொண்டிருக்கின்றன.பேஸ்புக் பக்கங்களில் புன்னகைக்கின்றன.ஐபோன் வைத்திருப்பவர்களிடம் இன்ஸ்டாகிராமில் புகைப்பட நதியாக பாய்ந்தோடுகின்றன‌.

டிஜிட்டல் வடிவில் புகைப்படங்களை சேமித்து வைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் மேலும் பல வழிகள் இருக்கவே செய்கின்றன.புகைப்படங்களை அழகிய கொலேஜாக மாற்றித்தரும் இணையதளம் இருக்கிற‌து.பிரேம் வடிவில் புகைப்படங்களை பொருத்தி தரும் சேவையும் இருக்கிற‌து.

இந்த வரிசையில் சுவாரஸ்யமும் புதுமையும் கலந்த புகைப்பட சேவையாக 16பிக்ஸ் அறிமுகமாகியிருக்கிறது.

16 வயதினேலே என்பது போல இந்த தளம் உங்கள் வாழ்க்கையையும் 16 புகைப்படங்களில் உருவாக்கி தருகிறது.வாழ்க்கையை என்று சொல்வது கொஞ்சம் மிகை தான்.ஆனால் நீங்கள் சம‌ர்பிக்கும் புகைப்படங்களில் இருந்து 16 சிறந்த புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை கொண்டு அழகான புகைப்பட கூட்டுச்சித்திரத்தை(கொலேஜ்) உருவாக்கி தருகிறது.

உங்கள் புகைப்பட ஆல்பத்தில் இந்த தளத்தின் வசம் ஒப்படைத்தால் அவற்றில் இருந்து 16 புகைப்படங்களை தானாக தேர்வு செய்து தருகிறது இந்த தளம்.

இதற்காக இந்த தளத்தில் முதலில் உறுப்பினராக வேண்டும்.அல்லது பேஸ்புக் மூலம் உள்ளே நுழைய வேண்டும்.அதன் பிறகு புகைப்பட ஆல்பத்தை சமர்பித்தால் அவற்றை 16 படங்களாக சுருக்கி கூட்டுச்சித்திரமாக்கி தருகிற‌து.டெஸ்க்டாப்,பேஸ்புக்,பிக்காசோ,போட்டோபக்கெட் என எந்த‌ இடத்தில் இருந்தும் புகைப்படங்களை சமர்பிக்கலாம்.

புகைப்படங்களின் பல்வேறு அம்சங்களை பரிசிலித்து அவர்றில் இருந்து சிற‌ந்த புகைப்படங்களை தேர்வு செய்யும் அல்கோரிதத்தின் அடிப்படையில் கூட்டுச்சித்திரம் உருவாக்கப்படுவதாக இந்த தளம் பெருமை பட்டு கொள்கிறது.

சிறந்த தேர்வு என்பது கொஞ்சம் சர்ச்சைக்குறியது தான்.இதன் சாப்ட்வேர் 16 படங்களை தேர்வு செய்து விடுகிறது.ஆனால் அவை சிறந்தவை தானா என்று சொல்வதற்கில்லை.இயந்திர தேர்வில் உள்ள குறைபாடுகள் இதிலும் உண்டு.ஆனால் சில நேரங்களில் புகைப்படங்களின் தேர்வு மணி மணியாக அமைந்து விடுகின்றன.

எப்படி இருந்தாலும் நூற்றுக்கணக்கில் புகைப்ப‌டங்களை சம்ர‌பிக்கும் போது அவற்றில் இருந்து 16 படங்கள் மட்டும் ஏதோ ஒரு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது சுவாரஸ்யமானது தான்.

ஆனால் ஒன்று இந்த தேர்வில் உடன்பாடு இல்லை என்றால் பிர்ச்ச‌னையே இல்லை சரியில்லை என நினைக்கும் புகைப்படத்தை நீக்கி விட்டு வேறு பொருத்தமான புகைப்படத்தை சேர்த்து கொள்ளலாம்.ஆக ஒன்றிரண்டு புகைப்படங்கள் பொருந்தாவிட்டாலும் மாற்றிக்கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்ட 16 புகைப்படங்களும் அழகாக கூட்டு ச்சித்திரமாக டிஜிட்டல் சடத்த்தில் பொருத்தி தரப்படுகிற‌து.இதறகான வடிவமைப்பு மற்றும் பின்னணியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

அதன் பிறகு இந்த புதிய புகைப்பட ஆல்பத்தை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் உங்கள் நண்பரக்ளோடு ஒரு கிளிக்கில் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த இணையதளம் அறிமுக நிலையில் தான் உள்ளது.எனவே இதில் எதிர்பார்க்கும் வசதி மற்றும் அம்சங்கள் குறித்து நீங்கள் வாக்களிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியூர் பயணம் அல்லது குடும்ப நிகழ்ச்சியின் போது புகைப்படங்களை கிளிக்கி தள்ளியிருந்தால் அவற்றை அப்படியே மொத்தமாக நண்பர்களிடம் காட்டி அலுப்படைய செய்வதற்கு பதிலாக 16 புகைப்படங்களை தானாக தேர்வு செய்து அழகான வடிவமைப்பில் நண்பர்களோடு ப‌கிர்ந்து கொள்வது சுவாரஸ்யம் தானே.

இணையதள முகவரி;http://16pics.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “16 புகைப்படங்களில் உங்கள் வாழ்க‌கை!

  1. எத்தனை புகைப்படங்கள் கொடுக்க வேண்டும் என்னும் அளவு (limits) தெரியவில்லை… தளம் சென்று பார்க்கிறேன்… நன்றி சார்…

    Reply
  2. siva balan

    Pls Stop your msg

    Unsubscribe pls

    Reply
    1. cybersimman

      நீங்கள் தான் அன்சப்சிகிரைப் செய்து வெளியேற வேண்டும் நண்பரே.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *