நீங்கள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர் என்று வைத்துக்கொள்வோம்.அதோடு இணைய குழுக்கள மற்றும் அரட்டை அறை விவாதங்களில் பங்கேர்பவர் என்றும் வைத்துக்கொள்வோம்.
அப்படியானால் நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனை தேடல் தொடர்பான வேண்டுகோளாக இருக்கலாம்.
உங்கள் நண்பரோ அல்லது இண்டெர்நெட்டில் அறிமுகமானவரோ,தங்களுக்கு தேவைப்படும் தகவலை தேடித்தருமாறு கேட்டுக்கொள்ளலாம். உள்ளபடியே அது எளிதில் கிடைக்காத தகவல் என்றா,அல்லது உங்களுக்கு நிபுணத்துவம் உள்ள விஷயம் என்றாலோ நீங்கள் உற்சாகமாக தேடித்தரலாம்.
மாறாக அது எளிதில் கிடைக்ககூடிய தகவல் என்றால் எரிச்சலாக தானே இருக்கும்.
அதிலும் கூகுலில் தேடியவுடன் கிடைத்துவிடும் தகவல் என்றால் கூடவே கோபமும் வரும்.
இப்போது என்ன செய்வது? இத்தகைய சோம்பேறிகளுக்கு எப்படி பதில் சொல்வது?
முட்டாளே நீயே தேடிக்கொள் என்று சொல்லிவிடலாம்.ஆனால் கோபத்தை காட்டாமல் அழகாக பதிலளிக்க ஒரு வழி இருக்கிறது.
‘
‘லெட் மீ கூகுல் தட் பார் யூ’ என்னும் பெயரிலான தளம் இருக்கிறது.
இந்த தளத்திற்கு சென்றால் கூகுலில் இருப்பது போலவே தேடல் கட்டம் இருக்கும். அதில் உங்கள் நண்பர் கேட்ட கேள்வியை டைப் செய்து விட்டு தேடல் முடிவை அப்படியே அனுப்பி வைக்கலாம்.
அந்த முடிவு மாமூலான தேடல் முடிவு பட்டியல் போல இல்லாமல்,நண்பர் கேள்விக்கு பதில் தரும் ஒரே ஒரு தளத்தின் முகவரி இணைப்பை மட்டும் கொண்டிருக்கும்.
நண்பர் அதை கிளிக் செய்தால், கூகுலில் தேடும் முறையை சித்தரிக்கும் அனிமேஷன் சித்திரம் ஒன்று தோன்றும். இவ்வளவு சுலபமான தேடலை நீயே செய்து கொள்ளக்கூடாதா என கேட்காமல் கேட்பது போல இது அமையும் என்று இந்த தளம் சொல்கிறது.
எப்படியெல்லம் யோசிக்கிறார்கள் பாருங்கள்.
————–
link;http://lmgtfy.com/

0 Comments on “உனக்காக நான் கூகுலில் தேடவா?”
Bharathi
Please check for Latest IT Jobs, BPO Jobs in http://www.PrepareInterview.com
surya
Sorry சிம்மன். சிறிது நாட்களாக தங்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை.
நல்லாயிருக்கு..
cybersimman
welcome back sir .i miss you
varun
cool..