லட்சிய இணையதளமாக ‘சைன்.லே’ உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை உதவிகளுக்கான வலைப்பின்னல் என்று சொல்லலாம்.உதவி தேவைப்படுபவர்களையும் உதவிட தயாராக இருப்பவர்களையும் இணைத்து வைக்கும் பாலமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.உதவிகளால் உலகை இணைப்பதும் உலகை இணைப்பதன் மூலம் உதவுகளை சாத்தியமாக்குவதும் தான் இந்த தளத்தின் நோக்கம்.
நீங்கள் நேரடியாக கூட உதவ வேண்டும் என்றில்லை;உதவக்கூடியவர்களை பரிந்துரைத்தால் போதுமானது.உங்கள் நண்பர்கள் உதவலாம்,நண்பர்களின் நண்பர்கள் உதவலாம்.இந்த உதவி சங்கிலையை ஏற்படுத்தி தருவதன் மூலம் தேவையான உதவி கிடைக்க வழி செய்கிறது சைன்.லே.
இதையே தனது கோஷமாகவும் சைன்.லே முன் வைக்கிறது.அதாவது உதவி தேவை படுபவர்களோடு உதவ தயாராக இருப்பவர்களை இணைத்து வையுங்கள் என்கிறது.
பேஸ்புக்,கூகுல்+ உள்ளிட்ட வலைப்பின்னல் சேவைகள் மூலமாக பகிர்தல் ஒரு பழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில் அந்த பகிர்தலை உதவிகளை பெறுவதற்காக பயன்படுத்தி கொள்ளும் வகையில் சைன்.லே அமைந்துள்ளது.
உதவி தேவை படுபவர்கள் ,மற்றவர்கள் தங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதை விலக்கி அதனை கோரிக்கையாக இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு உதவி கோருவதற்காக என்று அழகான இணைய படிவமும் இருக்கிறது.’உருவாக்கு’என்ற பகுதியில் கிளிக் செய்தால் இந்த படிவம் வருகிறது.அதில் என்ன உதவி தேவை என்பதை தலைப்பு போல குறிப்பிட்டு பின்னர் உதவிக்கான் விரிவான விளக்கத்தை அளித்து பொருத்தமான புகைப்படத்தை இணைத்து சமர்பிக்க வேண்டும்.உதவியின் வகை மற்றும் குறிப்பிட்ட நகரம் சார்ந்ததா என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இப்படி உருவான உதவி கோரும் பக்கத்தை உங்கள் இணைய நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.பேஸ்புக்,கூகுல்+,டிவிட்டர்,பின்ட்ரெஸ்ட்,லின்க்டுஇன் ஆகிய வலைப்பின்னல் வாயிலாக இந்த கோரிக்கையை பகிர்ந்து கொள்ளலாம்.
இதனை பெறும் நண்பர்கள் தங்களால் உதவ முடியும் என்றால் உதவ முன்வரலாம்.உதவ தயாராக இருப்பவர்கள் நேரிடையாக பதில் அளித்து தொடர்பு கொள்ளலாம்.உதவ முடியவில்லையா,இந்த கோரிக்கையை அப்படியே அவர்களின் இணைய நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.அவர்களில் யாராவது உதவ முன் வரலாம்.இல்லை தங்கள் நட்பு வட்டத்தில் பரிந்துரைக்கலாம்.
இப்படி உதவிக்கான சங்கிலையை உருவாக்கி கொண்டே போவதன் மூலம் உதவி கிடைப்பதற்கான சாத்தியம் உண்டாகிறது.சங்கிலி பெரிதாக இருந்தால் உதவி கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.
உதவிக்கான கோரிக்கையை குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் அவர்களின் நண்பர்களிடமும் எடுத்து செல்லுங்கள் உதவி கிடைக்கும் வரை சங்கிலியை கொண்டு செல்லுங்கள் என்று ஊக்கமளிக்கிறது இந்த தளம்.
மாற்றத்துக்கான சேவையாக இது அமையும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உதவி தேவைப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.அவர்களை உதவும் மனம் கொண்டவர்களோடு இணைத்து வைப்பதன் மூலம் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதே அந்த நம்பிக்கை.குறிப்பாக வாய்ப்புகள் குறைவாக உள்ள வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு உதவி பெறும் சாத்தியத்தை ஏற்படுத்தி தரும் வையம் தழுவிய வலைப்பின்னலாக இது உருவாக வேண்டும் என இந்த தளம் விரும்புகிறது.
தொலைந்த நபர்களை தேட உதவி கோருவது,வேலை வாய்ப்புக்கான உதவி கோருவது,தொழில் துவங்க நிதி கோருவது,உயிர் காக்கும் உதவி கோருவது என எத்தனையோ விதமான உதவிகளுக்கு இந்த தளத்தை பயன்பட
ுத்தலாம்.
இணையதள முகவரி;http://chain.ly/

0 Comments on “இந்த இணையதளம் உதவி சங்கிலி!.”
Warrant Balaw - Researcher in Law, Writer
//உதவி தேவைப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களை உதவும் மனம் கொண்டவர்களோடு இணைத்து வைப்பதன் மூலம் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதே அந்த நம்பிக்கை.//
உதவி தேவைப்படுவோர் பலகோடி பேர் இருந்தாலும், உதவி செய்வதற்கு வெகு சிலரே உள்ளனர் என்பதுதான் சரியாக இருக்கும் என்பதாகவே இக்கருத்து அமைய வேண்டும்.
cybersimman
உதவ தயாராக இருப்பபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் என்று நம்புவோம் நண்பரே.
DEVARAJAN
உதவி செய்வதற்கு உதவும் இணையதளம்
cybersimman
ஆம் நண்பரே
meha nathan
நன்றி நண்பரே..