கதை கேளு! கதை கேளு!.

கதை கேட்பது என்பது உற்சாகமான விஷயம் தான். குழந்தையாக இருக்கும் போது தாத்தா பாட்டியும் ,அப்பா அம்மாவும் கதை சொல்வதை கேட்டு ரசித்திருக்கிறோம். பெரியவர்கள் சொல்லும் கதை கேட்பது சுவாரஸ்யமானது என்றால் அதை விட ஜாலியானது நாமே கதை புத்தகங்களை படித்து மகிழ்வது.

சிறுவர்களுக்கான கதை புத்தகங்களும் பத்திரிகைகளும் இருக்கின்றன. அதே போல ஆன்லைனிலும் கூட கதைகளை படித்து ரசிக்கலாம். இதற்கென்றே நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன.

முதலில் உங்களுக்கான நூலகத்தில் நுழையலாம் வாருங்கள். ஆம் சிறுவர்களுக்கு என்றே இணைய நூலகம் ஒன்று இருக்கிறது. சர்வதேச சிறுவர்கள் டிஜிட்டல் நூலகம் என்னும் அந்த தளத்தில் சிறுவர்களுக்கான கதை புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆங்கிலத்தில் இருக்கும் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்களை நாடுகளின் அடிப்படையிலும் தேடிப்பார்க்கலாம். ச‌மீபத்தில் சேர்க்கப்பட்ட புத்தகங்களையும் விருது வென்ற புத்தகங்களையும் தேர்வு செய்து படிக்கலாம்.

நமக்கு தேவையான புத்தகங்களை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.இந்த நூலக்த்தை எப்படி பயன்படுத்துவது என்று வழிகாட்டும் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.( http://en.childrenslibrary.org/books/index.shtml )

ஸ்டோரிநோரி ( http://www.storynory.com/ ) தளமும் இதே போல சுவாரஸ்யமானது. இந்த தளத்தில் கதைகளை படிக்க வேண்டாம். கேட்டு ரசிக்கலாம். ஆம் கதைகள் எல்லாம் ஆடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவதை கதைகள், பாரம்பரிய கதைகள் என பல விதமான கதைகளை கேட்கலாம் என்பதோடு ஆங்கில மொழி தொடர்பான குறிப்புகளையும் கேட்கலாம்.கல்வி சார்ந்த செயல்பாடுகளும் கூட இருக்கின்றன.

ஸ்டோரிபேர்டு( http://storybird.com/ ) இணையதளம் இன்னும் கூட சுவாரஸ்யமானது. காரணம் இந்த தளத்தில் நீங்களே கதைகளை உருவாக்கி கொள்ளலாம். உங்கள் கற்பனையில் உதிக்கும் கதைகளை இந்த தளத்தில் இடம்பெறச்செய்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். கதைகள் அழகான அனிமேஷன் போன்ற புகைப்படங்களோடு அமைகின்ற‌ன. அப்படியே மற்றவர்கள் இந்த தளத்தில் பகிர்ந்து கொண்ட கதைகளை படித்துப்பார்க்கலாம்.

இந்த தளத்தில் உள்ள கதைகள் அவற்றின் ரகங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல வயது பிரிவுகளுக்கு ஏற்பவும் கதைக‌ள் உள்ளன.சிறுவர்களை குதூகலத்தில் ஆழ்த்தக்கூடிய மேலும் பல அம்சம்ங்கள் இதில் இருக்கின்றன. 

இன்னும் நிறைய கதை சொல்லும் தளங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றனவே தமிழில் இல்லையா என்ற ஆத‌ங்கம் இருந்தால் கவலையே வேண்டாம்.தமிழிலும் கதைகளை படிக்கலாம்.

தமிழ்சிறுகதைகள் (  http://www.tamilsirukathaigal.com/)என்னும் தளத்தில் சிறுவர்களுக்கான அழகான கதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தென்னாலிராம கதைகள்,பீர்பால் கதைகள் உள்ளிட்ட கதைகளை அழகிய வண்ணப்படங்களோடு படிக்கலாம். இதே போலவே சிறுகதைகள் தள்த்திலும் சிறுவர்கள் கதைகளை படிக்கலாம். ( http://www.sirukathaigal.com/) 

இந்த தளங்களி

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கதை கேளு! கதை கேளு!.

  1. குழந்தைகள் புத்தகங்களின் தளங்கள் அறிமுகம் நன்றாகயிருக்கிறது. என் பேரன்களுக்கு காட்ட எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.
    நன்றியும், பாராட்டுக்களும்!

    Reply
    1. cybersimman

      மிக்க மகிழ்ச்சி ரஞ்சனி அவர்களே

      Reply
  2. chollukireen

    vrநீங்கள் கொடுத்திருக்கும் அறிமுக தளங்களுக்குப்போய் பார்த்தபோது, படித்தபோது,நாமே படிக்கவேண்டிய கதைகள் ரொம்ப இருக்கும்போல தோன்றியது..வயதாகிவிட்டாலும்
    குழந்தைமாதிரி கதைகள் பிடிக்கிரது. இன்னும் நிறைய படிக்கணும் என்று தோன்றியது. எப்படிதான் நல்ல,நல்ல
    தளங்களை அறிமுகம் செய்கிறீர்களோ? ஆச்சரியமாக இருக்கு. மிக்க மகிழ்ச்சி. அன்புடன்

    குழந்தை

    Reply
    1. cybersimman

      கதைகள் என்பது எல்லா காலத்திற்கும் எல்லா தரப்பின‌ருக்கும் ஏற்றது தானே

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *