இகாமர்ஸ் தளமான அமேசானில் நேரடியாகவே பொருட்களை வாங்கலாம். அப்படியிருக்க,இதற்கு உதவுவதற்காக தனியே ஒரு இணையதளம் தேவையா என்று கேட்கலாம்.
என்ன செய்ய அமேசான் இகாமர்ஸ் ஆலமரமாக வளார்ந்து நிற்கிறது.அதனால் தான் வழிகாட்டி தளங்கள் தேவைப்படுகின்றன.புத்தக விற்பனை தளமாக துவங்கி அமேசான் இன்று விற்பனை செய்யாத பொருட்கள் இல்லை என்று சொல்லிவிடலாம்.அதன் முகப்பு பக்கத்தை பார்த்தாலே இது தெரியும்.
டிஜிட்டல் காமிராவில் துவங்கி,செல்போன்கள்,டேப்லெட் கம்ப்யூட்டர்கள்,ஆடைகள் என சகல விதமான பொருட்களையும் வாங்கலாம்.ஆனால் விஷயம் அதுவல்ல, அமேசானில் அசத்தலான பொருட்களையும் வாங்கலாம்.
அதாவது புதுமையாக வடிவமைக்கப்பட்ட பொருட்கள்.மலிவு விலையில் கிடைக்கும் பொருட்கள். அமேசானில் விற்கப்படும் இந்த வகையான பொருட்களை முகப்பு பக்கத்தில் பார்ப்பதற்கில்லை. யாராவது அமேசானில் வாங்கியதாக சொன்னால், அப்படியா என வியக்கத்தோன்றும்.
இந்த வகையான பொருட்களை அமேசானில் வாங்க வேண்டும் என்றால் நிச்சயம் உதவி தேவை. அதை தான் செய்கிறது கேனபி.கோ.( http://canopy.co/)
கேனபி தளம் அமேசான் தளத்தில் விற்பனையாகும் ஆனால் பெரும்பாலானோர் பார்வைக்கு படாமல் போய்விடக்கூடிய பொருட்களை பட்டியலிட்டு வழிகாட்டுகிறது.
கொஞ்சம் ஆர்வமும்,அமஏசன் தளத்தில் எப்படி வலம் வருவது என்ற நெளிவு சுளிவும் தெரிந்திருந்தால் இத்தகைய அருமையான பொருட்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம். அப்படி வாங்குபவர்களின் தங்கள் கண்டுபிடிப்பை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.ஆக அமேசான் ஷாப்பிங்கில் கில்லாடிகள் இதில் தாங்கள் வாங்கிய அரிதான பொருட்களை பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் இந்த பட்டியலை பார்த்து தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
பொருட்கள் பிடித்திருக்கிறதா, இங்கிருந்தே அமேசானில் ஆர்டரும் செய்யலாம்.
அப்படியே அந்த பொருட்களை லைக் செய்யலாம்.அவை பற்றி கருத்து தெரிவிக்கலாம்.அவற்றை வாங்கும் வொருப்பம் கொண்டவர்களுக்கு இது உதவியாக் இருக்கும். அது மட்டுமா,நீங்களும் கூட அமேசானில் இப்படி வாங்கும் பொருட்களை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம்.இந்த பகிர்தல் சார்ந்த நட்பையும் உருவாக்கி கொள்ளலாம்.
குறிப்பிட்ட ஒரு அமேசான் வாடிக்கையாளர் வாங்கிய பொருட்களை மட்டும் பார்வையிடலாம்.பொருட்களை வாங்குவதில் அவரிடம் ஒரு நேர்த்தி தெரிந்தால் அவரை பின் தொடர்வும் செய்யலாம்.
இணையதள முகவரி;http://canopy.co/