யூடியூப் வீடியோவை இப்படியும் பயன்படுத்தலாம்.

pronounce_words_video

யூடியூப் வீடியோக்களை எத்தனையோ வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.அது அவரவரது தேவையையும் விருப்பத்தையும் பொருத்தது.

யூடியூப்பில் பாட்டு கேட்கலாம்.படம் பார்க்கலாம்.காமெடி வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம்.செய்முறை காட்சிகளை கண்டு கற்கலாம். ஆனால் யூடியூப் வீடியோக்களுக்கு இன்னும் ஒரு சுவாரஸ்யமான பயன்பாடும் இருப்பது பலரும் அறியாதது. பலரும் என்ன பெரும்பாலானோர் அறியாதது.

இப்படியும் யூடியூப் வீடியோவை பயன்படுத்தலாமா என் வியப்பை ஏற்படுத்தும் அந்த வழியை லேப்னால் தளத்தில் அமீத் அகர்வால் அறிமுகம் செய்திருக்கிறார்.அந்த வழி உச்சரிக்க கடினமான சொற்களின் சரியான உச்சரிப்பை அறிந்து கொள்வது.

இந்த பிரச்சனை நடைமுறையில் அனைவரும் எதிர்கொள்வது தான்.அதாவது குறிப்பிட்ட சொல் அல்லது பெயரை எப்படி உச்சரிப்பது என தெரியாமல் திண்டாடுவது. இது போன்ற நேரங்களில் அகராதியை பார்த்து உச்சரிப்பை தெரிந்து கொள்வது ஒரு வழி .கொஞ்சம் பழைய வழி. இதற்கு பதிலாக அந்த சொல்லை கூகுலில் டைப் செய்து அதன் பொருள் மற்றும் உச்சரிப்பை தெரிந்து கொள்ளலாம்.

சில நவீன இணைய அகராதிகள் சொற்களின் உச்சரிப்பை ஒலி வடிவிலும் தருகின்றன.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்த உச்சரிப்பு அநேகமாக அமெருக்க ஆங்கிலத்திற்கானதாக இருக்கும்.அல்லது ஆங்கிலேயர்களுடையதாக் இருக்கும்.

இந்த இடத்தில் தான் யூடியூப் வருகிறது. எந்த சொல்லின் உச்சரிப்பை அறிய வேண்டுமோ அந்த சொல்லை யூடியூப் தளத்த்தில் தேடிப்பார்க்க வேண்டும்.அப்போது அந்த சொல் இடம்பெற்றுள்ள வீடியோ கோப்புகளின் பட்டியலை பார்க்கலாம். அந்த வீடியோவை கிளிக் செய்து குறிப்பிட்ட அந்த சொல்லின் உச்சரிப்பை தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

யூடியூப்பில் இருக்கும் வசதியை பயன்படுத்தி அந்த சொல் இடம்பெறும் வாசக்த்தையும் கண்டறிந்து மிகச்சரியாக அந்த வாசகம் வரும் இடத்தில் வீடியோவை பார்க்கலாம்,சொல்லின் உச்சரிப்பை கேட்கலாம்.

வீடியோ உலகின் எந்த பகுதியை சேர்ந்ததோ அந்த பகுதியின் உச்சரிப்பையும் அறிந்து கொள்ளலாம்.
————

அமித் அகர்வாலை நீங்களும் அறிந்திருக்கலாம்.அவர் இந்தியாவின் முன்னணி வலைப்பதிவர்.அவலைப்பதிவு மூலம் லடசக்கணக்கில் சம்பாதிப்பவர். லேப்னால் தளத்தில் அவர் பெரும்பாலும் இணையத்தை எப்படி பயன்படுத்துவது என எழுதி வருகிறார். பல இணையதளங்கள் மற்றும் சேவை தொடர்பானவை. சில, இந்த சேவையை போலவே அவராக பயன்படுத்தி பார்த்து கண்டறிந்து சொல்லும் அனுபவ குறிப்பு.அதனால் தான் அமீத் முன்னணி இணைய வலைப்பதிவராக இருக்கிறார்.

லேப்னாலில் நான் கண்டெடுக்கும் முத்துக்களை தொடர்ந்து பகிரலாம் என இருக்கிறேன்.

அன்புடன் சிம்மன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “யூடியூப் வீடியோவை இப்படியும் பயன்படுத்தலாம்.

  1. E.Bhu.GnaanaPragaasan

    அசத்தல்!

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *