இமெயில் கலாச்சாரம் பிடிபடவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? அப்படி என்றால் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! இமெயில் தொடர்பான நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லாமல் போகலாம். எதற்கெடுத்தாலும் இமெயில் அமைப்பு என்று சொல்லும் பழக்கமும், தேவையும் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்
அப்படி இருந்தால் ஒருவிதத்தில் அது நல்லதுதான். இமெயில் விஷயங் களில் பரிட்சயம் பெற்றிருப்பது, நவீன வாழ்க்கைக்கு ஏற்றவராக உங்களை கருதப்பட வைக்கும் என்றாலும், இமெயிலுக்கென்று சில குறைகள் இருக்கவே செய்கிறது.
அந்த குறைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிதான் இப்போது இன்டர்நெட் உலகில் கவலையோடு பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
இமெயில் கலாச்சாரம், ஈடுசெய்ய முடியாத சில இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும், இது குறித்து நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். அது மட்டுமல்ல, இமெயில் அனுப்புவதை கொஞ்சம் குறைத்து கொண்டாலும் நல்லதுதான் என்கின்றனர்.
கடிதங்களுக்கு இல்லாத சவுகர்யங்களும், சுலபத்தன்மையும் இமெயிலுக்கு இருக்கலாம். ஆனால் கடிதங்களால் ஏற்பட வாய்ப்பு இல்லாத இன்னல்கள் இமெயில்களால் ஏற்படுகின்றன என்பதுதான் விஷயம்.
அலுவலக தொடர்புகளுக்கு சர்வசகஜமாக இமெயிலை பயன்படுத்துபவர்கள் இருக்கின்றனர். நண்பர்களோடு கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கும், கண்ணில்படும் தகவல்களை தட்டிவிடுவதற்கும் இமெயிலை நாடுபவர்கள் இருக்கின்றனர்.
இவ்வளவு ஏன் ஒரே அலுவலகத்தில் பக்கத்து அறையில் இருப்பவருக்கு ஒரு தகவலை சொல்ல வேண்டும் என்றால், இமெயிலை அனுப்பி வைக்கும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர். இங்கேதான் பிரச்சனை வருகிறது என்று சொல்கின்றனர். கூப்பிடும் தூரத்தில் இருக்கும் நபருக்கு தகவலை சொல்ல வேண்டும் என்றால், எழுந்து சென்றால் போயிற்று அல்லது குறைந்த பட்சம் போனை கையில் எடுத்து பேசினாலாவது பரவாயில்லை. மாறாக இருந்த இடத்தில் இருந்தே இமெயிலில் நாலு வரியை டைப் செய்வது சுலபமாக இருக்கலாம். ஆனால் பிரச்சனைக்குரியதாக மாறிவிடுகிறது. காரணம் தகவல் தொடர்பு சாதனங்களில் இமெயில் மிகவும் வறட்டுத்தனமானதாக கருதப்படுகிறது. அதாவது இமெயில் உணர்வு ரீதியான குறிப்புகளை தாங்கி செல்லும் ஆற்றல் இல்லாத வாகனமாகவே இருக்கிறது. நேரிலோ அல்லது போனிலோ சொல்லத் தயங்கும் விஷயங்களை நாம் இமெயிலில் தெரிவித்து வம்பில் மாட்டி கொள்கிறோம் என்று கூறப்பட்டு வருகிறது. அதே போல இமெயில் வாசகங்கள் நாம் எதை நினைத்து சொல்கிறோமோ அவற்றுக்கான தன்மையை உணர்த்தாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு இமெயிலில் ஒரு வாசகத்தை படிக்கும் போது, அதனை படிப்பவர் தான் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக உணரலாம். அல்லது மிகுந்த கோபத்தோடு அந்த வாசகம் எழுதப்பட்டதாக உணரலாம். சுருக்கமாக சொன்னால் இமெயில் அனுப்பியவர் குறிப்பிட விரும்பிய கருத்துக்கு மாறான எந்த விஷயத்தை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் நாம் பேசும் போது வார்த்தைகளை மட்டுமே வைத்து ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதில்லை. அது சொல்லப்படும் முறை, அப்போது நமது முகத்தில் காணப்படும் உணர்ச்சி, நம்முடைய அங்கஅசைவுகள் போன்ற பல்வேறு குறிப்புகளை வைத்தே பேசப்படும் விஷயத்தை கிரகித்து கொள்கிறோம். உண்மையாக திட்டுவதற்கும், செல்லமாக திட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? நேரில் பேசும் போது இவற்றையெல்லாம் நாம் தானாகவே புரிந்துகொண்டு விடுகிறோம். எனவே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் இமெயிலில் இப்படி இல்லை. ஒரு விஷயத்தை தவறுதலாக புரிந்துகொள்ள அனேக வாய்ப்புகள் இருக்கின்றன. இமெயில் மூலம் ஜோக்குகளை அனுப்பி வைப்பது பலருக்கு பழக்கமாக இருக்கிறதல்லவா? பொதுவாக இப்படி அனுப்பப்படும் ஜோக்குகளை பெறுபவர்கள் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்றே நினைப்பதாக ஒரு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எல்லாம் இமெயிலால் வரும் கோளாறுதான். முகத்தை பார்த்து பேசும் போது, நம்முடைய மூளை பல்வேறு குறிப்புகளை புரிந்து கொண்டு பேச்சின் தன்மையை உணர்ந்துகொள்ள வழிசெய்கிறது. இமெயில் இந்த குறிப்புகள் இல்லாமல் வெறுமையோடு வருகிறது. ஆகையால்தான் இமெயில் அனுப்புவதை விட நேரில் அல்லது குறைந்தபட்சம் போனில் பேசுவது மேலானது என்கின்றனர். |