ஒரு பேரனாகவோ பேத்தியாகவோ உங்கள் பாட்டி அல்லது தாத்தாவுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி அவர்களை யூடியூப்பில் பிரபலமாக்குவது தான்.
அமெரிக்காவின் கிறிஸ் இதனை தான் செய்திருக்கிறார். திரைப்பட இயக்குனரான கிறிஸ் தனது பாட்டி கிலாராவை படம் பிடித்து யூடியுப்பில் இடம் பெற வைத்து அவரை புகழ்பெற வைத்திரிக்கிறார்.
கிலார பாட்டிக்கு 93 வயாதாகிறது.அவரை நவீன பாட்டி அல்லது ஹைடெக் பாட்டி என்றோ அழைக்கலாம். காராணம் அவர் வலைப்பதிவு செது வருகிறார். வலைப்பின்னல் தளமான பேஸ்புக்கில் அவருக்கு சொந்தமான பக்கம் இருக்கிறது.
கிலார பாட்டி சமையல் கலையிலும் வல்லவர். அதிலும் சிக்கன சமையலில் அவர் ஸ்பெஷலிஸ்ட். மாபெரும் தேக்கநிலை என்று சொல்லப்படும் 1930 களில் அவ்ர் தன் இளமைக்காலத்தை கழித்தவர். அப்போது அமெரிக்காவில் பொருலாதார சீர்குலைவு ஏற்பட்டு சராசரி அமெரிக்கர்கள் மிகவும் திண்டாடிப்போயினர்.
அந்த காலகட்டத்தில் அமெரிக்கர்கள் சிக்கனத்தின் அருமையை தெரிந்துக்கொண்டனர் என்று சொல்லவேன்டும்
தற்போது அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வரும் பொருளாதார நெருக்கடி இந்த தேக்க நிலையோடு தான் ஒப்பிடப்படுகிறது.அமெரிக்கர்கள் தாங்கள் மறந்த்விட்ட சிக்கனப்பழக்கத்தை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிக்கன வழிகளை எடுத்துச்சொன்னால் காது கொடுத்து கேட்கின்றனர்.
மாபெரும் தேக்கநிலை காலத்தில் சமையல் கலையில் இத்தகைய பல சிக்கன வழிகளை கிலாரா பாட்டி கற்று வைத்திருக்கிறார். வெறும் எலுமிச்சை மற்றும் உருளை கிழங்கை கொண்டு அவரால் விதவிதமான சமையலை செய்யமுடியுமாம்.
இந்த நுணுக்கங்களை அவரால் சுவாரசியமாக சொல்லித்தரவும் முடியுமாம்.
சிக்கலான காலகட்டத்தில் மற்றவர்களுக்கு இவற்றை கற்றுத்தர அவர் விரும்பியதில் வியப்பில்லை.
ஏற்கனவே வலைப்பதிவு செய்பவர் என்பதால் இண்டெர்நெட் மூலம் இவற்றை அவர் பகிர்ந்துக்கொள்ள துடித்தார்.
சமையல் குறிப்பகள் என்பதால் வலைப்பதிவை விட வீடியோ பகிர்வு தளமான யூடியூப் ஏற்றது அல்லவா.ஆகவே தான் தனது சிக்கன சமையல் குறிப்புகளை யூடியூப் மூலம் பதிவேற்றி வருகிறார்.
93 வயதில் சமையல் வரலாம். வீடியோ எடுப்பதெல்லாம் வராது இல்லையா? அதனால் தான் திரைப்பட இயக்குனரான கிறிஸ் பாட்டி சமையல் சொல்லித்தருவதை படமெடுத்து யூடியூப்பில் இடம்பெற வைத்தார்.
அவர் பதிவேற்றிய முதல் வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தொடர்ந்து பாட்டி சமையலை படம் பிடித்து யூடியூப்பில் இடம்பெற வைத்து வருகிறார்.
ஒவ்வொரு கோப்பிலும் நடைமுறையில் பயன்தரக்கூடிய குறிப்புகலை கூறிவிட்டு சமையல் சொல்லித்தருகிறார்.
உங்கள் பாட்டி தாத்தாக்களிடமும் இது போன்ற திறமைகள் இருக்கத்தானே செய்யும்..
——————–
பாட்டி சமையலை பார்க்க….