இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன் அதற்காக பல்வேறு இணையதளங்களை பார்த்து பரிசிலிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு சுவையான அனுபவம் என்றாலும் நேரத்தையும் உழைப்பயைம் கோருவது.
சில இணையதளங்கள் முதல் பார்வைக்கே கவனத்தை ஈர்க்கும். சில தளங்கள் சிறப்பாக இருக்கும். ஆனால் நம்மவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.ஒரு சில தளங்கள் அவற்றில் உறுப்பினராக பயன்படுத்தி பார்க்க வேண்டியிருக்கும். சில தளங்களை முழுவதும் அலசிப்பார்த்த பிறகே அதன் பயன் புரியும். ஒரு சில தளங்கள் அருமையாக இருந்தாலும் அவை பற்றி உடனே எழுத முடியாது.அவற்றை மனதுக்குள் ஊறப்போட்டு நேரம் அவ்ரும் போது எழுத வேண்டும்.
இது பொதுவாக வலைப்பதிவிற்காக நான் (மகிழ்ச்சியோடு) எழுத எடுத்துக்கொள்ளும் முறை.
சில நேரங்களில் பல இணையதளங்களை பார்வையிட்டும் சரியான தளத்தை தேர்வு செய்ய முடியாமல் அயற்சி ஏற்படும்.
இவற்றின் நடுவே சில தளங்கள் ,அவற்றின் பயன்பாடு புரியாமல் குழப்பத்தை எற்படுத்தும் .வழக்கமாக ஒதுக்கி தள்ளிவிடும் இத்தகைய தளங்களில் ஒன்றை இன்று ஒரு மாற்றத்திற்காக பதிவிடுகிறேன்.
இஃப்ட் என்னும் இந்த தளம்,( https://ifttt.com/) இணையத்தை உங்களுக்காக பணியாற்ற வைப்பதாக கூறினாலும் அதன் பயன்பாடு தன்மை புரியாமலே இருக்கிறது.

0 Comments on “குழப்பும் இணையதளங்கள்.”
cheenakay
அன்பின் சிம்மன் – எவ்வளவுதான் பிடித்த பயனுள்ள தளங்களை அறிமுகம் செய்தாலும் – இது மாதிரி தளங்களையும் அறிமுகம் செய்ய வேண்டும் – இவையும் திடீரென பயன் படும். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
ஆம் நண்பரே.இது போன்ற தளங்களையும் அவப்போது எழுதுகிறேன். நீங்கள் ரசித்த தளங்களையும் குறிப்பிடவும் . அல்லது நான் எழுத வேன்டும் என நீங்கள் நினைக்கும் தளங்கள் இருக்கின்றனவா?
அன்புடன் சிம்மன்