கூகுலுக்கு குட்பை சொல்லுங்கள்: அழைக்கும் புதிய தேடியந்திரம்

duck1இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகுலுக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் மாற்று தேடியந்திரம் என்றும் டக் டக் கோ பாராட்டப்படுகிறது.
அதற்கேற்ப இணைய தேடலுக்காக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதை விட முக்கியமாக,டக் டக் கோ தேடியந்திரம் பற்றி கேள்விபடுபவர்களில் பலரும் கூகுலை விட்டு இதற்கு மாறி விடுகின்றனர். ஏன், நீங்களும் கூட மாறலாம்.

ஆக,நீண்ட கால நோக்கில் கூகுலுக்கான உண்மையான சவால் உதயமாகியிருக்கிறது.இதன் பொருள்,கூகுலுக்கு சவால் விடக்கூடிய மாற்று தேடியந்திரம் தயாராகி விட்டது என்பது தான்.
கூகிள் கேள்வி கேட்கப்படாத நம்பர் ஒன்னாக இருக்கும் தேடல் உலகில் டக் டக் கோவின் எழுச்சி நிச்சய்ம் பெரிய செய்தி தான்.

புதிதல்ல புதுமையானது:

டக் டக் கோ புதுமையான தேடியந்திரமே தவிர புதிய தேடியந்திரம் அல்ல. ஐந்தாண்டுகளுக்கு முன்னரே அறிமுகமான இந்த மாற்று தேடியந்திரம் அதன் தனிச்சிறப்புக்களுக்காக பலரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது கூகுலுக்கு மாற்று என சொல்லக்கூடிய அளவுக்கு வெகுஜன அந்தஸ்தை பெற்றிருக்கிறது.
தேடியந்திர உலகில், கூகுலுக்கு சவாலாக சொல்லப்பட்ட மாற்று தேடியந்திரங்கள் உருவாகாமல் இல்லை.கூகுலோடு இன்றளவும் மல்லு கட்டிக்கொண்டிருக்கும் மைக்ரோசாப்டின் பிங் தேடிய‌ந்திரம் தவிர காஸ்மிக்ஸ், க்யில்,பிலெக்கோ,விவிஸ்மோ மற்றும் வால்பிராம் ஆல்பா என கணிசமான தேடியந்திரங்கள் கூகுலின் செல்வாக்கை அசைத்து பார்க்க முயன்றிருக்கின்றன.இவற்றில் மற்ற எந்த தேடியந்திரமும் எட்டாத உயரத்தை இப்போது டக் டக் கோ எட்டியிருக்கிறது.
இதற்கு காரணம் டக் டக் கோ பக்கம் வீசத்துவங்கியிருக்கும் அதிர்ஷ்டக்காற்று. அந்த காற்று தான் கூகுல் திசையில் சோதனைக்காற்றாகவும் வீசிக்கொண்டிருக்கிறது.
duck2
கூகுளைப்போல இணையவாசிகளின் அந்தரங்க தகவல்களை சேமிப்பதில்லை என்பதே டக் டக் கோவிற்கு தற்போது சாதகமாக அமைந்துள்ளது.இணைய உலகில் பெரும் விவாதமாக உருவெடுத்திருக்கும் இந்த பிரச்சனை எப்படி டக் டக் கோவிற்கு ஆதராவாக அமைந்துள்ளது என்பதை பார்க்கும் முன் ஒரு தேடியந்திரமாக டக் டக் கோவின் சிறப்புகளை பார்த்து விடலாம்.

ஜீரோ கிளிக்:

டக் டக் கோ என்னும் சற்றே விநோதமான பெயருடனும் அதற்கேற்ற நகைச்சுவையான வாத்து லோகோவுடனும் 2008‍ல் அறிமுகமான இந்த தேடிய‌ந்திரம் ,கூகுலை விட சிக்க‌ல் இல்லாத தேட‌ல் பக்க‌ம்,விள‌ம்பர இடையூறு இல்லாத தேட‌ல் முடிவுக‌ள் ,சிற‌ப்பான குறுக்கு வ‌ழிக‌ள் என பல்வேறு அம்சங்களை தனது சிறப்புகளாக பட்டியலிட்டுக்கொண்டது. இவற்றோடு பூஜ்ய கிளிக் என்னும் நெத்திய‌டியான வ‌சதியையும் பெற்றிருநது. ஜீரோ கிளிக் என குறிப்பிட‌ப்ப‌டும் இந்த வ‌ச‌தியை கிளிக் செய்யாம‌லேயே தேடுவ‌து என வர்ணிக்கலாம்.

அதெப்ப‌டி கிளிக் செய்யாம‌லேயே தேடுவ‌து சாத்திய‌ம்?

வழக்கமாக தேடும் போது என்ன செய்வோம்.கீவேர்டை டைப் செய்துவிட்டு தேடு என க‌ட்ட‌ளையிடுவ‌து போல என்ட‌ர் த‌ட்டுவோம் அல்ல‌வா?அத‌ன் பிற‌கு தேட‌ல் முடிவுக‌ள் வ‌ந்து நிற்கும் அல்ல‌வா?அதில் ஏதாவ‌து ஒன்றை கிளீக் செய்தால் தான் தேவிஅயான் த‌க‌வ‌ல்க‌ளை பெற முடியும். ஆனால் ட‌க்ட‌க்கோ தேடிய‌ந்திர‌மோ கிளிக் செய்த‌துமே தேட‌ப்ப‌டும் ப‌த‌ம் தொட‌ர்பான அறிமுக குறிப்புக‌ளாக சில த‌க‌வ‌ல்களை தானாகவே முன்வைக்கிறது.
இந்த குறிப்புக‌ள் மிக‌ச்ச‌ரியாக தேட‌ப்ப‌டும் பொருள் குறித்த ச‌ரியான அறிமுக‌மாக அமைந்து விடுகிற‌து.உதாரண‌த்திற்கு பிரெஞ்சு ஒப‌ன் என் தேடினால் பாரிசில் மே மாத‌ம் துவ‌ங்கி ந‌டைபெறும் டென்னிஸ் போட்டி என்ற அறிமுக‌ம் கிடைக்கிற‌து. பல நேர‌ஙக‌ளில் தேட‌ப்ப‌டும் பொருளை புரிந்து கொள்ள இந்த அறிமுக‌ம் உத‌வ‌லாம். சில நேர‌ங்க‌ளில் இந்த அறிமுக‌மே கூட போதுமாக இருக்க‌லாம்.புதிய பொருள் குறித்து மிக அவ‌ச‌ர‌மாக தேடும் போது அறிமுக குறிப்புகள் நிச்ச‌ய‌ம் ப‌யனுள்ள‌தாக இருக்கும்.

விக்கிபீடியா போன்ற த‌ள‌ங்க‌ளில் இருந்து எடுக்க‌ப்ப‌ட்டாலும் கூட இந்த அறிமுக‌ம் ப‌ய‌னுள்ள‌தாக‌வே இருக்கிற‌து.விரிவான தேட‌ல் தேவை என்றால் ப‌க்க‌வாட்டில் உள்ள வ‌ச‌தியை துணைக்கு அழைத்து யூடியூப் உடபட பல இட‌ங்க‌ளில் தேட முடியும்.

அதோடு தேடல் பட்டியலில் பிரஞ்சு ஓபன் போட்டிக்கான அதிகாரபூர்வ தளமே முதலில் பட்டியலிடப்பட்டுள்ளது.தொடர்ந்து பிரெஞ்சு ஓப்ன் போட்டி தொடர்பாக தகவலகளை தரக்கூடிய இணையதளங்கள் இடம் பெற்றுள்ளது.தேடியவரின் நோக்கம் பிரெஞ்சு ஓபன் என்றால், இந்த அறிமுகமும் தேடல் பட்டியலும் தகவல் விருந்தாக அமைந்திருக்கும்.
duck3
கூகுல் பற்றி:

இந்த அறிமுக வசதியை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதில் கூகுல் என்ற பதத்தை டைப் செய்து பார்க்க வேண்டும். கூகுல் பற்றி தேடும் போது , கூகுல் என்றால் பல அந்த‌த‌ம் உண்டு உங்க‌ளுக்கு எது வேண்டும் என்று கேட்க‌ப்படும் அத‌ன் கீழேயே கூகுல் என்றால் தேடிய‌ந்திர‌ம் என்ற அறிமுக‌மும் இட‌ம் பெறுகிற‌து.அதே போல கூகிள் என்றால் வினைச்சொல் என்ற அறிமுகமும் இடம் பெறுகிறது. இதன் விரிவாக்க பகுதியை கிளிக் செய்தால் கூகிள் தொடர்பான வேறு சில விளக்கங்களும் அதற்கான இணைப்புகளும் இடம் பெறுகிறது.கூகில்ஸ் என்றால் கண்ணாடி, இதே பெயரில் ஒரு சித்திரக்கதை தொடரும் உண்டு, கூக்லி என்பது கிரிக்கெட்டில் வரும் பந்து வீசும் உத்தி உள்ளிட்ட விளக்கங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

தேடலில் முழுமை:

ஆக, டக் டக் கோவின் அறிமுகம் இணைய தேடலை சுலபமாக்குவதோடு செழுமையாகவும் இருக்கிறது.வியக்க வைக்கும் இந்த வசதியை தான் சில சில ஆண்டுகள் கழித்து கூகுல் ‘நாலெட்ஜ் கிராப்’ என்னும் பெயரில் தன் பங்கிற்கு அறிமுகம் செய்தது.

அறிமுக குறிப்பின் கீழ் இடம்பெறும் தேடல் பட்டியலில் கூகிள் தேடியந்திரத்துக்கான இணைப்பில் துவங்கி கூகிள் தொடர்பான இணையபக்கங்கள் வந்து நிற்கின்றன.முதல் பக்கத்திலேயே கிட்டத்தட்ட கூகுல் தொடர்பான பெரும்பாலான இணையபக்கங்களை ‘டக் டக் கோ’ பட்டியலிட்டு விடுகிறது.சபாஷ் போட வைக்கும் அனுபவம் இது.

சச்சின் என தேடிப்பார்த்தால் சச்சின் டெண்டுல்கர் பெயரை முதலில் குறிப்பிட்டு, தொடர்ந்து சச்சின் பைலெட்,சச்சின் நடிகர் ஆகியோர் பற்றிய அறிமுக குறிப்புகளை தருகிறது.உங்கள் தேவை சச்சின் டெண்டுல்கர் என்றால், அவரைப்பற்றிய தேடல் பட்டியலை பார்க்கலாம்.சச்சினின் பேஸ்புக் பக்கம்,ட்விட்டர் முகவரி,வீடியோக்கள்,சாதனைகள் என எல்லாவற்றையும் இந்த பட்டியலில் காணலாம்.அநேகமாக முதல் பகத்தை தாண்டி அடுத்த பக்கத்திற்கு போக வேண்டிய தேவையே இருக்காது.அந்த அளவுக்கு தேடல் பட்டியல் சிறந்ததாக இருக்கிறது.

வாத்து லோகோ:

இந்த அம்ச‌த்திற்காக நிச்ச‌ய‌ம் இதை ப‌ய‌ன்ப‌டுத்தி பார்க்க‌லாம்.இதைத் த‌விர முகப்பு ப‌க்கமும் கூகிள் முகப்பு பக்கம் போலவே எளிமையாக இருக்கிறது. சொல்லப்போனால் கூகிளை விட இன்னும் தெளிவாக‌வே இருக்கிற‌து என சொல்லலாம்.நடு நாயகமாக அழகான வாத்து லோகோ அதன் கிழே தேடல் கட்டம் என முகப்பு பக்கம் தெளிவான தேடலுக்கு அழைப்பு விடுக்கிறது.

தேடல் கட்டத்தின் கீழ் டக் டக் கோவின் தனிச்சிறப்புகள் தேடல் சுவடில்லாமல் தேடுவது மற்றும் உடனடியாக தேடுவது ஆகியவை மட்டும் வாசகங்களாக இடம்பெற்றுள்ளன.வேறு இடையூறுகள் கிடையாது.

அந்தரங்கத்துக்கு ஆபத்தில்லை:
duck4

அனாமதேய தேடல் என குறிப்பிப்படும் தேடல் சுவடில்லாமல் தேடும் வசதியே இப்போது டக் டக் கோவை கொண்டாட வைத்திருக்கிறது.அதாவது கூகிள் செய்வது போல இணைவாசிகளின் தேடல் சரித்திரத்தையே அவரது அந்தரங்க தேர்வுகளையோ இந்த தேடியந்திரம் சேமித்து வைப்பதும் இல்லை,மூன்றாம் நபர்களுக்கு விற்பதும் இல்லை. இதை தான் நாங்கள் இணையவாசிகளை வேவு பார்ப்பதைல்லை என்று டக் டக் கோ பெருமையோடு குறுப்பிடுகிறது.

இணையவாசிகளை பின்தொடர்வது அதாவது அவர்களின் இணைய செயல்பாடுகளை வேவு பார்ப்பது இணைய உலகில் பரவலாக இருப்பது தான்.இணையவாசிகள் தேடலில் ஈடுபடும் போது இணைய நிறுவனங்கள் அவர்கள் கம்ப்யூட்டரில் ரகசியமாக குக்கி எனப்படும் சின்னஞ்சிறிய சாப்ட்வேரை ஒளிந்திருக்க செய்கின்றன. இந்த குக்கிகள் இணையவாசிகள் எவற்றை எல்லாம் தேடுகின்றனர், எந்த இணைய பக்கங்களை எல்லாம் பார்வையிடுகின்றனர் போன்ற விவரங்களை சேகரித்து அனுப்பி வைக்கின்றன.

இந்த தகவல்களின் அடிப்படையில் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் புரிந்து கொள்ளப்பட்டு அவற்றுக்கு ஏற்ப சேவைகள் வழங்கப்படுகின்றன.கூகிளைப்பொருத்தவரை அதற்கு வருவாயை தரும் அட்சயப்பாத்திரமாக இருக்கும் ஆட்சென்ஸ் விளம்பரங்களை இணையவாசியின் தேவைக்கேற்ப தீர்மானைக்க இந்த இணைய வேவு பார்த்தால் உதவுகிறது. வேறு பல விதங்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

சில நிறுவங்கள் இந்த தகவல்களை வேறு நிறுவங்களுக்கு விற்று விடுவதும் உண்டு. இணைய உலகில் இது பெரிய தொழிலாகவே இருக்கிறது.பல ஆண்டுகளாக இது நடைபெற்று வந்தாலும் இணையத்தில் வழங்கப்படும் இலவச சேவைக்காக கொடுக்கப்படும் விலையாகவே இவை கருதப்பட்டன.

இணையவாசிகள் தொடர்பான தகவல்களை அவர்கள் அனுமதி இல்லாமல் திரட்டுவது அந்தரங்க உரிமை மீறல் என்று பலரும் குரல் கொடுத்து வந்தாலும் பெரிதாக எதுவும் செய்து விட முடியவில்லை.

டக் டக் கோ தேடியந்திரம் அறிமுகமாகும் போதே இணையவாசிகளின் எந்த செயலையும் நாங்கள் பின்தொடர்வதில்லை,எந்த தகவலையும் சேகரிப்பதில்லை என்றே அறிவித்தது. இந்த தன்மையே அதன் தனிச்சிறப்பாகவும் கூகிளுக்கு மாற்றாக அதை பயன்படுத்துவதற்கான காரணமாக சொல்லப்பட்டது.

அந்தரங்கத்தின் அருமை அறிந்தவர்கள் இதற்காகவே டக் டக் கோ தேடியந்திரத்தை பாராட்டி வரவேற்றனர். ஆனாலும் என்ன ‘டக் டக் கோ’ ஒரு சின்ன வட்டத்தில் அறியப்பட்ட தேடியந்திரமாக மட்டுமே இருந்தது.நல்ல வேளையாக இடைப்பட்ட காலத்தில் காணாமல் போய்விடாமல் தாக்குப்பிடித்து நின்றதோடு இடையிடையே புதிய அம்சங்களோடு தனது தேடலையும் மேம்படுத்தி கொண்டது . இதன் விளைவாக இணைய உலகில் அந்த‌ரங்க மீறல் பெரும் பிரச்ச‌னையாக உருவெடுத்திருக்கும் நிலையில் டக் டக் கோவின் அருமை எல்லோருக்கும் புரியத்துவங்கியுள்ளது.

ஸ்நோடன் குண்டுக்கு பின்:

ஜூன் மாதம் எட்வர்ட் ஸ்நோடன் என்னும் அமெரிக்கர் வீசிய குண்டு தான் அந்தரங்க மீறிலின் விபரீதத்தை உலகிற்கு புரிய வைத்தது.அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய ஸ்நாடன், அமெரிக்க அரசு உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் அரசு அமைப்புகளின் இணைய செயல்பாடுகளை கண்கானித்து வருவதை அம்பலமாக்கினார்.

கூகில்,டிவிட்டர்,பேஸ்புக் போன்ற இணைய நிறுவன‌ங்கள் இணையவாசிகளிடம் இருந்து சேகரிக்கும் தகவல்களை அமெரிக்க அரசு பெறுவதை ஸ்நோடன் ஆதாரஙகளோடு வெளியிட்டார்.பேஸ்புக்,கூகிள் போன்ற தளங்களில் பகிரப்படும் தகவல்களை கண்காணிப்பதன் மூலம் அமெரிக்கா தனிநபர்களை அவர்களை அறியாமலே ஒற்று பார்ப்பது தெரிய வந்த போது உலக்மே திகைத்துப்போனது.

தேசிய பாதுக்காப்பிற்கான சில நேரங்களில் இணைய நிறுவங்களிடம் அர‌சுகள் இணையவாசிகள் தொடர்பான தகவல்களை கோருவது வழக்கம் தான். இந்த செயலே கூட விவாதத்திற்கு உரியதாக இருக்கிறது.ஆனால் அமெரிக்க திட்டமிட்டு தொடர்ச்சியாக உளவு பார்த்து வருவதும் இணைய நிறுவன‌ங்கள் அதை சாத்தியமாக்குவதும் மோசமான தனிமனித உரிமை மீறலாக கருதப்படுகிறது.

நாம் அனுப்பும் இமெயிலையும் ,பேஸ்புக் அப்டேட்டையும் வேறு யார் பார்க்கப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க இவை எல்லாவற்றையும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு எனும் பெயரில் கண்காணித்து கொண்டிருப்பது அதிர்ச்சியானது தானே.

இந்த பின்னணியில் தான் இணைய உலகில் தற்போது அந்தரங்க தகவல்களின் பாதுகாப்பு கவலையோடு விவாதிக்கப்படுகிறது.

கூகுலுக்கு மாற்று:

எனவே தான், இணையவாசிகளின் நடவடிக்கைகளை பின் தொடர்வதில்லை என்று கூறும் டக் டக் கோ தேடிய‌ந்திரம் பலரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.அதன் பயனாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.அடுத்தடுத்து தேடல் மைல்கல்களையும் கடந்து வருகிறது.சமீபத்தில், தினசரி தேடல் எண்ணிக்கை 2 மில்லலியனை தொட்டதாக அறிவித்தது.அதாவது நாள்தோறும் 20 லட்சம் முறைகளுக்கு மேல் இது தேடலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.அடுத்த எட்டு நாட்களிலேயே இந்த எண்ணிக்கை 3 மில்லியனை கடந்தததாகவும் தேடியந்திரம் அறிவித்தது.

கூகுலுக்கு மாற்று என்று சொல்லப்பட்ட எந்த தேடியந்திரமும் இத்தகைய வரவேற்பை கடந்த காலங்களில் பெற்றதில்லை.

வெகுஜன அந்தஸ்தை பெற இதுவே சரியான நேரம் என்பதை புரிந்து கொண்டுள்ள‌ டக் டக் கோ , இணைவாசிகளின் தேடல் சுவடுகள் பிந்தொடர்ப்படுவதை புரிய வைப்பதற்காகவே டோட்ட் டிராக் அஸ் அன்னும் தனிப்பக்கத்தையும் அமைத்துள்ளது.முகப்பு பக்கத்தில் உள்ள அனாமதேயமாக தேடுங்கள் வாசக்த்தை கிளிக் செய்தால் இந்த பக்கம் வருகிறது.

இந்த பக்கத்தில் வழக்கமான தேடலின் போது கூகுல் எப்படி இனையவாசிகள் பற்றிய விவரங்களை சேகரித்து அவர்களை கண்காணிப்பதை சாத்தியமாகுகிறது என விளக்கியுள்ளது. அதிக ஆர்ப்பாட்டமெ இல்லாமல் வரைபடங்களோடு மிக எளிதாக இணைய கண்காணிப்பை இந்த பக்கம் புரிய வைக்கிறது.இப்படி புரிய வைத்து, நீங்கள் கண்காணிக்கப்படுவதை தவிர்க்க கூகிள் போன்ற தேடியந்திரங்களை பயன்படுத்துவதை விட்டு விட்டு டக் டக் கோவிற்கு மாறுங்கள் என்றும் அழைப்பு விடுக்கிறது.பலரும் இதை தான் செய்து வருகின்றனர்.
————

https://duckduckgo.com/

——–
நன்றி;தமிழ் கம்ப்யூட்டர்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலுக்கு குட்பை சொல்லுங்கள்: அழைக்கும் புதிய தேடியந்திரம்

  1. Vee

    Very very important message to all and I circulated to my friends also, Thank U very much

    Reply
    1. cybersimman

      yes thats great.thanks.

      simman

      Reply
  2. அன்பின் சிம்மன் – அரிய தகவல்கள் – அருமையான் அபதிவு – அதெப்படி ஒரு கருப்பொருளை வைத்து இவ்வளவு தகவல்கள் தேடிக் கண்டு பிடித்து வாசகர்கள் மறுமொழியில் கேட்கும் முன்னரே விளக்க்கங்களை அள்ளித் தருவது என்னும் பழக்கத்தினை வைத்திருக்கிறீர்கள். திறமையினைப் பாராட்ட சொற்களே கிடையாது, நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      பாராட்டுக்கு நன்றி. எடுத்து கொண்ட தலைப்பில் இயன்ற வரை முழு தகவலகளையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் நான் செலவிடும் நேரம் உழைப்பை உணர்ந்து சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

      இருப்பினும் உங்கள் சந்தேகம்,ஆர்வத்தை கேளுங்கள்.தொடர்புடைய பதிவு எழுத முயல்கிறேன்.

      அன்புடன் சிம்மன்.

      Reply
  3. அன்பின் சிம்மன் – கூகிள் என்று தேடினேன் – எத்தனை எத்தனை பதிவுகள் – பக்கம் பக்கமாக வருகின்றன. பயன் படுத்துகிறேன். – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      ஒரு கூடுதல் தகவல் .இந்த தேடியந்திரம் பற்றி ஏற்கனவே அது அறிமுகமான போது எழுதியுள்ளேன்.இது அதன் வளர்ச்சிக்கேற்ப அப்டேட் செய்யப்பட்ட விரிவான் பதிவு.

      அன்புடன் சிம்மன்.

      ——

      கிளிக் செய்யாமலேயே தேடுவதற்கு ஒரு தேடியந்திரம்(http://cybersimman.wordpress.com/2010/05/31/search-9/)

      Reply
  4. கூகுலுக்கு மாற்றா ? ஆச்சர்யம்தான் . டக் டக் கோ முன்னரே இருப்பதை கேள்விபட்டிருந்தேன் கூகுலை மாற்ற மனமில்லாமல் இருந்தேன் உண்மை புரிய, இனி டக் டக் கோ முயற்சிக்கவேண்டும் . நிறைய தகவல்கள் விளக்கங்கள் படிக்கத்தூண்டும் நடை
    பாராட்டுக்கள் தொடருங்கள்.

    Reply
    1. cybersimman

      உண்மையிலேயே டக் ட்க கோ கூகுலுக்கு மாற்றும் என சொல்லக்கூடிய வகையில் செழுமையாக இருக்கிறது.பயன்படுத்தி பாருங்கள்.

      அன்புடன் சிம்மன்.

      Reply
  5. bas

    I did’nt try duck duck go. But your article is so good. Please continue your service.

    Reply
    1. cybersimman

      thanks. just give it a try. you may like it.

      Reply
  6. தமிழில் டைப்பிங் செய்ய முடியுமா

    Reply
    1. cybersimman

      இல்லை அந்த வசதி இல்லை என்ரே நினைக்கிறேன். ஆனால் தமிழில் டைப் செய்து அதை அப்படியே பேஸ்ட் செய்து தேட முடியும்.பார்க்க உதாரணம்…https://duckduckgo.com/?q=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D

      அன்புடன் சிம்மன்

      சைபர்சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *