ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் சொல்லலாம். இந்த இணையதளம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ,இது மிகவும் தேவையான சேவை என்று அமோதிப்பீர்கள். அப்படி என்ன செய்கிறது என்று கேட்டால் ஓயாமல் கிளிக் செய்து படிக்க வேண்டிய இணைய பக்கங்களை ஒரே கிளிக்கில்,அதாவது ஒரே பக்கத்தில் சுலபமாக படிக்க வழி செய்கிறது பேஜ் ஜிப்பர். பெரும்பாலான இணையதளங்களில் ஒரே கட்டுரை பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொடர் பக்கங்களாக கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.பார்த்து வெறுத்திருக்கலாம். முதல் பகுதியை படித்து முடித்த உடன் அதன் கீழே உள்ள அடுத்து பகுதியை கிளிக் செய்தால் தான் அடுத்த பகுதியை படிக்க முடியும்.நீளமான கட்டுரை என்றால் அடுத்து அடுத்து என கிளிக் செய்து கொண்டே இருக்க வேண்டும். நீளமான,ஆழமான செறிவான கட்டுரை என்றால் அதனை ஒரே பக்கத்தில் தராமல் சில பகுதிகளாக பிரித்து அளிக்கப்பட்டிருப்பது புரிந்து கொள்ளகூடியது தான்.இத்தகைய கட்டுரைகளில் கூட அதனை ஒரே பக்கத்தில் படிப்பதற்கான வசதி கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பல கட்டுரைகள் தேவையில்லாமல் பல பகுதிகளாக பிரித்து தரப்பட்டிருக்கும்.இவை கிளிக் விகிதத்தை அதிகரிப்பதற்கான மலிவான உத்தியே தவிர வேறில்லை.கட்டுரைகள் மட்டும் அல்லாமல் டாப் டென் அல்லது டாப் 50 போன்ற‌ பரிந்துரை கட்டுரைகளும் இதே போல பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.
 
ஒவ்வொரு பகுதியாக கிளிக் செய்து ஒவ்வொரு பரிந்துரையாக படிக்க வேண்டும்.ஒவ்வொருவரும் பல இணையதளங்களை பறவை பார்வையாக பார்த்து வரும் போது இப்படி ஒரே கட்டுரையில் நேரத்தை செலவிடுவது வெறுப்பை ஏற்படுத்தும். இது போன்ற நேரங்களில் இணையவாசிகள் கொஞ்சம் ஆவேசமாகி இந்த கட்டுரையே வேண்டாம் என வெளியேறிவிடுவதும் உண்டு. பேஜ் ஜிப்பரை பயன்படுத்த துவங்கிவிட்டால் இப்படி கோபத்தில் வெளியேற வேண்டாம்.காரணம் இந்த சேவை பல பக்கங்களாக பிரிந்து கிடக்கும் கட்டுரைகளை ஒரே பக்கத்தில் படிக்க உதவுகிறது.உங்கள் பிரவுசருக்கான டூல்பாராக கிடைக்கும் இதனை டவுண்லோடு செய்து கொண்டுவிட்டால் போதும்,அதன் பிற‌கு எப்போதெல்லாம் தொல்லை தரும் பல பகுதி கட்டுரைகளை பார்க்கிறீர்களோ,அப்பொதெல்லாம் இந்த டூல் பாரை கிளிக் செய்தால் போதும் அது தானாக அடுத்து பகுதியில் அந்த பக்கம் விரிந்து கொண்டே போக வழி செய்து தொட்ர்சியாக படிக்க வைக்கும். மாமுலான இணைய பக்கங்கள் மட்டும் அல்லாது புகைப்பட கேலரி தளங்களையும் இந்த சேவை மூலம் பார்வையிடலாம்.அடுத்த புகைப்படத்தை கிளிக் செய்யாமலேயே வரிசையாக புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். அதே போல இணைய விவாத குழுக்களிலும் இந்த சேவையை பயன்ப‌டுத்தி அனைத்து கருத்துக்களையும் ஒரே பக்கத்தில் பார்வையிடலாம். விலம்பரங்கள் இல்லாமல் விரும்பிய வண்ணம் இணைய பக்கங்களை அச்சிட்டு கொள்ள உதவும் பிரின்ட் வாட் யூ லைக் தளத்தின் உப சேவை இந்த பயனுள்ள இணையதளம்.பயன்ப‌டுத்தி பாருங்கள். பிரின்ட் வாட் யூ லைக் சேவை எந்த இணைய பக்கத்திலும் அதில் உள்ள விளம்பரங்கள் மற்றும் தேவையில்லாத விவ‌ரங்களை தவிர்த்துவிட்டு தேவையான் பகுதிய மட்டும் அச்சிட்டு கொள்ள வழி செய்கிற‌து.இணைய பக்கங்களை அச்சிட்டு பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது.
இணையதள முகவரி;http://www.printwhatyoulike.com/pagezipper
 
] ]>

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒரு கிளிக் இணைய சேவை.

  1. அன்பின் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – பயனுள்ள தகவல் தான் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
  2. பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி!

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே.

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *