ஃபேக்ட்ஸ்லைட்ஸ் சுவாரஸ்யமான இணையதளம்.சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைட் வடிவில் வழங்குவது தான் இதன் சிறப்பம்சம்.உதாரணத்திற்கு சிகிரெட் தொடர்பான இந்த தகவலை பாருங்கள்; ஒரு சிகிரெட்டில் 4,800 ரசாயனங்கள் இருக்கின்றன.இவற்றில் 69 புற்றுநோயை உண்டாக்க கூடியதாக அறியப்பட்டவை.இந்த திடுக்கிடும் புள்ளிவிவரத்தை அழகான ஸ்லைடாக இந்த தளம் முன்வைக்கிறது.
இது போன்ற தகவல்களை நாளிதழ் மற்று பத்திரிகைகளில் முக்கிய கட்டுரைகளுக்கு நடுவில் அல்லது தனியே பெட்டிச்செய்தியாகவோ நீங்கள் படித்திருக்கலாம்.இத்தகைய தகவல்களை அல்லது புள்ளிவிவரங்களை ஒரே இடத்தில் படிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் அதை இந்த தளம் நிறைவேற்றுகிறது.
தகவல்களை படித்தவுடன் இரண்டு விஷயங்கள் செய்யலாம்.ஒன்று அடுத்த தகவல் ஸ்லைடை கிளிக் செய்யலாம்.அதன் பிறகு ஒவ்வொரு ஸ்லைடாக் கிளிக் செய்து பார்த்து கொண்டே இருக்கலாம்.அலுத்துப்போகும் வரை.ஸ்லைடுகளை பார்க்க இன்னொரு வழியும் இருக்கிறது. தகவல்கள் பல்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளதால் விருப்பமான தலைப்பை தேர்வு செய்து தொடர்புடைய தகவல்களை பார்க்கலாம்.தகவல்களை ஸ்லைடு ஷோவாகவும் பார்க்கும் வசதி இருக்கிறது.இந்த முறையில் தகவல்கள் தோன்றும் இடைவெளியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த தகவல்களில் சில வியப்பானவை.சில நம்ப முடியாதவை.சில சிந்திக்க வைப்பவை. இவை குறித்து மேலும் விவரங்கள் தேவைப்பட்டால்,ஒவ்வொரு தகவல் ஸ்லைடு பக்கத்திலும் உள்ள மேலும் பகுதியை கிளிக் செய்தால் அத செய்திக்கான மூலத்தை தெரிந்து கொள்ளலாம்.அதாவது அந்த தகவல் பத்திரிகை செய்தியில் இருந்த எடுகப்பட்டதா,ஆய்வு முடிவா? அல்லது புத்தகத்தில் வெளீயானதா என தெரிந்து கொள்ளலாம்.அவற்றுக்கான இணைப்பில் கூடுதல் விவரங்களை அறியலாம்.
பல நேரங்களில் இந்த இணைப்புகள் சுவாரஸ்யமான தகவல்களுக்கு இட்டுச்செல்கின்றன. ஹிடலரின் காதல் பற்றிய தகவல் இதற்கு உதாரணம்.ஹிட்லரின் முதல் காதலி ஒரு யூதபெண் என்பது அந்த தகவல்.எல்லா அசட்டு காதலர்களை போலவும் ஹிட்லரும் அந்த காதலை சொல்லத்துணியாமல் இருந்துவிட்டதாகவும் அந்த தகவல் சொல்கிறது.இதற்கான ஆதாரமாக ஹிஸ்டரி இண் ஒன் ஹவர் தளத்திற்கு அழைத்து செல்கிறது .,இந்த தளத்தில் ஹிட்லர் முதல் காதல் பற்றிய கட்டுரை தொடர்புடைய புத்தகம் மற்றும் இன்ன்மு பிற வரலாற்று தகவல்களை படிக்கலாம்.எல்லாம் ஒரு மணி நேரத்தில் படிக்க கூடிய வரலாற்று புத்தகம்.
தகவல்கள் தினமும் புதிப்பிக்கப்படுகின்றனவா என தெரியவில்லை.பார்த்து சொல்லுங்களேன்!.
—————–
http://www.factslides.com/s-Hitler
http://www.historyinanhour.com/2011/02/18/hitlers-women/

4 Comments on “தகவல் உலா வாருங்கள்.”
cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – அரிய தகவல்கள் தரும் பதிவிது. ஏதேனும் சில தகவல்கள் மற்றும் பு|ள்ளி விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தேவை எனின் இத்தளங்களூக்குச் செல்லலாம். நல்ல பயனுள்ள பதிவு- நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
இணையம் தரும் ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று.இயன்றால் அதில் தரப்படும் இணைப்புகளுக்கும் சென்று பாருங்கள்.
அன்புடன் சிம்மன்.
cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – ஹிஸ்டரி இன் ஆன் ஹவர் – சுட்டியினைச் சுட்டிச் சென்று பார்த்து மகிழ்ந்தேன் – கிண்டில் புத்தகம் – இங்கிலாந்து இளவரசியாருக்கு ஆண் குழந்தை பிறந்தது பற்றிய செய்திகள். இப்படி பலப்பல . இதில் ஒன்றான புத்தகத்தைப் படிக்கும் போது அப்புத்தகத்தைப் பற்றிய முன்னுரை.
Love history? Know your stuff with History in an Hour.
Elizabeth II is the longest lived and, after Queen Victoria, second longest reigning monarch of the United Kingdom. From her coronation in 1953 to her Diamond Jubilee in 2012, Queen Elizabeth II has stood on the world stage as the figurehead for Britain.
The Queen: History in an Hour tells the story of the Queen Elizabeth II’s life and long reign, her royal duties, service during the Second World War, public perception and the transformation of the British Empire into the Commonwealth of Nations under her rule. In the Diamond Jubilee year this is essential reading for Royalists and Republicans alike.
Know your stuff: read about Queen Elizabeth II in just one hour.
PRODUCT DETAILs :
Format: Kindle Edition
File Size: 757 KB
Print Length: 88 pages
Publisher: HarperPress (29 Mar 2012)
Sold by: Amazon Media EU S.à r.l.
Language: English
ASIN: B007E3ESJU
Text-to-Speech: Enabled
புத்தகத்தின் விலையோ ஒரு பவுண்டிற்கும் குறைவான 99 பென்ஸ் தான் – இந்திய ரூபாயில் இன்றைய நிலவரத்தில் 94.38 ரூபாய் தான். இணையத்தில் இருந்து தரவிரக்கம் செய்து கிண்டிலில் படிக்கலாம். கிண்டில் வாங்க வேண்டும்..
பலப் பல தகவல்கள் – சென்று பார்த்துக் கொண்டே இருக்கலாம் – படித்து இரசித்து மகிழலாம்.
நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
ஒரு சின்ன கட்டுரை போலவே இருக்கும் பின்னூட்டம். நன்றி நண்பரே.