உணவு மூலம் உறவு வளர்த்து கொள்ள உதவும் வலைப்பின்னல் தளங்களை நீங்கள் அறிந்திருக்கலாம். இவற்றை உணவு பின்னல் தளங்கள் என்று வர்ணிக்கலாம்.இந்த வரிசையில் மீல்ஸ் வித் ஃபிரன்ட்ஸ் தளத்தை மிகவும் எளிமையானது என சொல்லலாம்.
ஓட்டலிலோ ரெஸ்டாரன்டிலோ நண்பர்களோடு சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டு மகிழ்வதை இந்த தளம் எளிதாக்குகிறது.அதாவது சேர்ந்து சாப்பிடுவதில் உள்ள திட்டமிடலுக்கு இந்த தளம் பொறுப்பேற்றுக்கொள்கிறது.
மிக எளிதாக இந்த சேவையை பயன்படுத்தலாம்.விருந்துக்கான ரெஸ்டாரன்டை தேர்வு செய்துவிட்டு ,சாப்பிட வருமாறு உங்களை நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.அதன பிறகு குறிப்பிட்ட நேரத்தில் அங்கு சந்தித்து கொள்ளலாம்.தனியே விருந்து சாப்பிடுவதை விட இப்படி நண்பர்களுடன் சேர்ந்து அரட்டையடித்த படி சாப்பிடுவது நல்ல விஷயம் தானே.
விருந்துக்கான செலவை ஒருவரே ஏறகலாம்.அல்லது பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல நண்பர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.அல்லது அலுவலக மேலதிகாரி,சி,இ.ஓ போன்றவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஒன்றாக விருந்தளிக்க இதை பயன்படுத்தலாம்.
அமெரிக்காவை மையமாக கொண்ட சேவை என்றாலும் இதன் கருத்தாக்கம் சமுக வலைப்பின்னல் யுகத்திற்கு பொருத்தமானது என்பதால் நாமும் தெரிந்து கொள்ளலாம் தப்பில்லை.
https://mealswithfriends.co/login
உணவு மூலம் உறவு வளர்க்கும் தளங்கள் பற்றிய எனது முந்தைய பதிவுகள்;http://cybersimman.wordpress.com/?s=%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81&submit=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95

0 Comments on “நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட அழைக்கும் தளம்”
cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – அருமையான பதிவு – தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி – அமெரிக்கா செல்லும் போது பயன் படுத்துகிறேன். அங்கிருக்கும் உறவினர்களுக்கு மடல் அனுப்புகிறேன் – பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – இரு சுட்டிகளையும் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து, வந்தேன் – பலப் பல தளங்கள் இரண்டாவது சுட்டியில் வந்தன – தகவல் பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
ஆம்,உணவு வலைபின்னல் தளங்கள் மிகவும் சுவாரஸ்யமனாவை. நானே பத்து வெவ்வேறு சேவைகள் பற்றி எழுதியுள்ளேன்.
அன்புடன் சிம்மன்