ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கிறது என்று கேட்பவர்கள் ஐந்து விரல்களும் ஒன்று போலவா பயன்படுகின்றன என்று யோசித்துப்பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.ஐந்து விரல்களில் அதிகம் பயன்படுவது எது என்ற கேள்விக்கு,நமூடைய பிளெஷ்பேக்கிற்கு சென்று விரல்களை நாம் எப்படி எல்லாம் பயன்பத்துகிறோம் என யோசித்து பார்த்தால் மட்டும் போதாது.மனித குலத்தின் ஒட்டுமொத்த பிளேஷ்பேக்கும் தேவை.
மனித குலத்தின் துவக்க காலத்தில் கட்டை விரலின் ‘கை’ தான் ஓங்கியிருந்தது. கட்டை விரலை உயர்த்தி காட்டினால் வெற்றி என் பக்கம் என உணர்த்துவதாக இருந்தது. மனிதன் முதன் முதலில் அதிகமாக பயன்படுத்த துவங்கிய விரல் கட்டை விரல் தான்.
கட்டை விரல் மற்ற விரல்களுக்கு எதிரானது. இப்படி கட்டை விரலை மற்ற விரல்களுக்கு எதிராக பயன்படுத்த முடிந்ததே கல்லை எடுத்து எறிவது முதல் கிரிக்கெட் பந்தை வாகாக பிடித்து சுழலச்செய்வது வரை பலவற்றை சாத்தியமாக்குகிறது. கட்டை விரலை இயக்க முடிவதே ஆயுதமேந்த வைத்தது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றனர். இவ்வளவு ஏன் கட்டைவிரலின் முக்கியத்துவத்தை ஏகலைவன் கதையில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.
இப்படி இருந்த கட்டை விரல் தான் மனித வரலாற்றில் எப்படி எல்லாமோ ஆகி இப்போது செல்போன் யுகத்தில் மீண்டும் கோலோச்ச துவங்கியிருக்கிறது என்கிறார் எட்வர்டு டென்னர். அமெரிக்காவை சேர்ந்த டென்னர் தொழில் நுட்பத்தின் தாக்கம் பற்றி வரலாற்று நோக்கில் ஆய்வு செய்து எழுதி வருபவர்.கட்டை விரல் மீண்டும் தலை தூக்கியிருப்பது பற்றி அவர் ‘அவர் ஓன் டிவைசஸ்;தி பாஸ்ட் அன்ட் பியுச்சர் ஆப் பாடி டெக்னாலஜி எனும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.2003 ம் ஆண்டு இந்த புத்தகம் வெளியானது.
இந்த புத்தகத்தில் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே கட்டை விரல் பயன்பாட்டை ஆய்வு செய்திருக்கிறார். பியானோ மற்றும் ஆர்மோனியம் போன்றவற்றில் கட்டை விரல் பயன்பாடு முக்கியமாக இருந்தது ,ஆனால் டைப்ரைட்டர் காத்தில் ஸ்பேஸ் தட்டுவதற்கு மட்டுமே பயன்படும் அளவுக்கு கட்டை விரல் ஓரங்கட்டப்பட்டதாக டென்னர் குறிப்பிடுகிறார்.அது மட்டுமா கைகளால் செய்யப்படும் வேலைகளில் பாதி வேலைக்கு கட்டை விரல் தான் பொறுப்பென்கிறார்.
கரண்னின் கவச குண்டலம் போல இன்றைய உலகில் பலருக்கும் உள்ளங்கையில் செல்போன்கள் ஒட்டிக்கொண்டுள்ள நிலையில் கட்டை விரலின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. ஒரே கையில் செல்போனை வைத்து கொண்டு கட்டைவிரலால் விசைகளை அழுத்துவது பலருக்கும் விரல் வந்த கலையாக இருக்கிறது.இளைஞர்களும் சிறுவர்களும் இரண்டு கட்டை விரல்களை மட்டுமே கொண்டு படு ஸ்பீடாக குறுஞ்செய்தியை டைப் செய்யும் விதத்தை கொஞ்சம் கவனித்து பார்த்தால் போன தலைமுறையினருக்கு தலை சுற்றும். ஆனால் இந்த தலைமுறையோ செல்போன் திரையை கூட பார்க்காமலேயே டைப் செய்யும் ஆற்றலை இயல்பாக பெற்றிருக்கிறது.
செல்போன் சார்ந்த இத்தகைய கட்டை விரல் பயன்பாடுகளை சுட்டிக்காட்டும் டென்னர் இந்த போக்கை கட்டை விரலின் இரண்டாவது மறுவாழ்வு என தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். குறுஞ்செய்தி அனுப்புவதில் தீவிரம் காட்டிய ஜப்பானில் பலரும் காலிங் பெல் அடிப்பது ஸ்விட்ச் போடுவது போன்ற வழக்காக ஆட்காட்டி விரலை பயன்படுத்தும் செயல்களுக்கு கூட கட்டை விரலை பயன்படுத்துவதாக டென்னர் எழுதியுள்ளார்.
இன்றைய நவீன யுகத்தில் வர்த்தகம் மற்றரும் சமூக பரிமாற்றத்திற்கான முக்கிய க்ருவியாக கட்டை விரல் மாறியிருக்கிறது என்பது இந்த புத்தகம் மூலம் டென்னர் சொ

4 Comments on “கட்டை விரலுக்கு ஜே!”
K M ABUBAKKAR
வணக்கம்.
சுவரஸ்யமன , அனால் பயனுள்ள பதிவு..
வாழ்த்துக்கள் , தோழரே.
கோ.மீ.அபுபக்கர் ,
கல்லிடைக்குறிச்சி
cybersimman
தொழில்நுட்ப தாக்கம் பற்றி விவரிக்கும் இந்த புத்தகம் பற்றிய பதிவு தங்களுக்கு பிடித்திருப்படு மகிழ்ச்சி.
அன்புடன் சிம்மன்

cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டே போகும் நேரத்தில் இது மாதிரி தகவல்கள் அளிக்கும் புத்தகங்கள் அனைவரும் படிக்க வேண்டும்.- நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா