ப்ரிட்மேன்சேர் வியப்பில் ஆழ்த்தக்கூடிய புதிய நற்காலில்.சைம்ன் ஃப்ரிட்மேன் எனும் ஆய்வாளர் இந்த நவீன நாற்காலியை உருவாக்கியுள்ளார்.இது வரை உள்ள எந்த நாற்காலியும் சரியில்லை என்று கூறும் ஃப்ரிட்மேன் வருடக்கணக்கில் ஆய்வு செய்து இந்த புதிய நாற்காலியை உருவாக்கியுள்ளார்.நிற்கும் போது நமது முதுகு தண்டு இருக்கும் நிலையிலேயே உடகார்ந்திருக்கும் போதும் இருக்க கூடிய வகையில் அமர இந்த நாற்காலி வழி செய்கிறது.
நாற்காலியின் மறு உருவாக்கம் என்று இதை கூறலாம்.இந்த புதுமையான நாற்காலி அமர்ந்திருத்தலால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் என்று சைமன் கூறுகிறார்.
இந்த நாற்காலியை போலவே இதற்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளமும் வியப்பளிக்கிறது.
நாற்காலியின் முகப்பு பக்கத்தில் நடுவே அமர்ந்திருக்கிறது.அதன் இடது பக்கத்தில் மூன்று சின்ன வட்டங்கள். மூன்றும் நாற்காலி ஏன் உருவாக்கப்பட்டது,எதற்காக உருவாக்கப்பட்டது? எப்படி உருவாக்கப்பட்டது? எனும் கேள்விகளுக்கு வீடியோ விளக்கத்தை அளிக்கிறது. அப்படியே வலப்பக்கம் வந்தால் நாற்காலி பற்றிய வீடியோ மற்றும் அதன் வெவ்வேறு தோற்றத்துக்கான புகைப்படங்களை காணலாம். அதன் கீழே தகவல் எனும் பகுதியில் நாற்காலி பற்றிய விவரங்களை படிக்கலாம்.ஏற்கனவே வீடீயோவில் பார்த்தவற்றின் வரி வடிவம் தான் இது.
ஒரு இணையதளம் எப்படி இருக்க வேன்டும் என்பதற்கான அழகான உதாரணம் இந்த தளம்.தேவைக்கு அதிகமான விவரங்கள், அநாவசிய தற்பெருமைகள் போன்றவை இல்லாமல் மிக எளிதாக கவனத்தை சிதற விடாமல் எளிமையாக தேவையான விவரங்களை தந்து அட இந்த நாற்காலி நன்றாக இருக்கிறதே என்று சொல்ல வைக்கிறது.
http://freedmanchair.com/