பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் சுயபடங்களும் சேர்ந்திருக்கின்றன.
இணையத்தின் புதிய போக்கான சுயபடங்கள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் இவை செல்பி என்று குறிப்பிடப்படுகின்றன. இணையவாசி ஒருவர் தனது புகைப்படத்தை தானே எடுத்து அதை சமூகவலைப்பின்னல் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் பழக்கமே இப்படி செல்பி என்று அழைக்கப்படுகிறது. பயனாளிகள் செல்போன் அல்லது டிஜிட்டல் காமிராவை கையை நீட்டி தங்கள் முன்னால் வைத்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வது என்று விக்கிபீடியா இதற்கு விளக்கம் தருகிறது.
புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் தான் இத்தகைய சுயபட பகிர்வாளர்கள் அதிகம் உள்ளனர். பேஸ்புக் போன்ற தளங்களிலும் சுயபடங்கள் ஆர்வத்தோடு பகிரப்பட்டு வருகின்றன. பல பிரபலங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது.
இதை நம் காலத்து போக்கு என்கின்றனர். இணைய கால பாதிப்பு என்றும் சொல்கின்றனர். சுயபடங்களை பகிர்வதற்கான தேவை குறித்தும் பாதிப்புகள் குறித்த விவாதங்களும் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளன.
இந்த சுயபட பழக்கத்தை நல்ல விதமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உணர்த்தும் வகையில் பிலிப்பைன்ஸ் சூறாவளி பாதிப்புக்கான நிதி அளிக்கும் கோரிக்கைகள் சுயபடங்களுடன் வெளியாகத்துவங்கியிருக்கின்றன. இதுவும் ஒரு இயக்கமாகவே வலுப்பெற்று வருகிறது.
சூறாவளி பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தகவல் தொடர்பு வசதிகளும் நிலைகுலைந்து போயுள்ளன. பாதிப்பு மற்றும் நிவாரணப்பணி விவரங்களை பகிர்ந்து கொள்ள இண்டெர்நெட்டும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களுமே பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சூறாவளிக்கு தொடர்பு இல்லாத தகவல் அல்லது புகைபடங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பொருள் சுயபுராணங்களோ சுயபட பகிர்வுகளே வேண்டாமே ப்ளிஸ் என்பது தான். ஆனால் சுயபடங்களை சூறாவளி பாதிப்புக்கு உதவுதற்காகவே பகிர்ந்து கொண்டால் என்ன ? அதை தான் பலரும் செய்து வருகின்றனர். எப்படி என்றால், வழக்கம் போல தங்கள் சுயபடங்களை எடுத்து பகிர்ந்து கொள்கின்றனர். அந்த புகைப்படத்துடன் சூறாவளி பாதிப்புக்கு உதவுங்கள் என்னும் கோரிக்கை வாசகத்தையும் இடம் பெற வைத்து, நிதி உதவி கோரும் அமைப்புகள் பற்றிய தகவலையும் தெரிவித்துள்ளனர். இப்படி விதவிதமான சூறாவளி பாதிப்பு கோரிக்கையுடன் இணையத்தில் உலா வருகின்றன. பிலிப்பைஸ்ன் தலைநகர் மணிலாவில் உள்ள விளம்பர நிறுவனம் இந்த சுயபட கோரிக்கையை துவக்கி வைத்தது.
சுயபடங்களின் நோக்கத்தையே தலைகீழாக மாற்றும் வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட சுயபடங்கள் மூலம் கோரிக்கை வைக்கும் இத்தகைய படங்களை நீங்களும் எடுத்து சமூக வலைப்பின்னல் தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டூள்ளது.
மேலும் விவரங்களுக்கு: http://www.linkedin.com/today/post/article/20131114173241-5506908-what-if-our-selfies-were-unselfish

0 Comments on “சூறாவளிக்கு உதவ கோரும் சுயநலமில்லா படங்கள்.”
வெள்ளியங்கிரி
பயனுள்ள தகவல் . நன்றி நண்பரே 🙂
cybersimman
மகிழ்ச்சி . முடிந்தால் இந்த செய்திய தங்கள் இணைய வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன் சிம்மன்