பேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்னும் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இணையத்தில் புகைப்பட பகிர்வு மற்றும் புகைப்பட சேமிப்பு என்று வரும் போது பிலிக்கர் தான் விரும்பி பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கிறது.
பிலிக்கர் என்றதுமே அதில் கொட்டிக்கிடக்கும் அழகான புகைப்படங்கள் தான் நினைவுக்கு வரும். அழகிய புகைப்படங்களை பார்த்து ரசிக்க பிலிக்கர் தான் சிறந்த வழி. அதே போல புகைப்படங்களை பகிரவும் பிலிக்கருக்கு நிகர் பிலிக்கர் தான். ஆனால் , புகைப்பட பகிர்வுக்கு மட்டும் அல்லாமல் வேறு விதங்களிலும் பிலிக்கர் சேவையை பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
அவற்றில் சில வழிகளை இப்போது பார்க்கலாம்!.
புதிய காமிரா வாங்கும் முன்!
நீங்கள் புகைப்பட பிரியராக இருந்து புதிதாக காமிரா வாங்க விரும்புகிறீகள் என வைத்து கொள்வோம். என்ன காமிரா வாங்குவது என்று தீர்மானிப்பதற்கு முன்பாக பலவிதமான காமிரா மற்றும் அவற்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்பாக பிலிக்கரில் ஆயும் செய்து கொள்ளலாம். பிலிக்கர் தளத்தில் காமிரா பைண்டர் (http://www.flickr.com/cameras ) எனும் பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் அனைத்து விதான காமிரா தொடர்பான தகவல்களையும் பார்க்கலாம். காமிராவின் மாடல், அதன் லென்ஸ் ஆற்றல், எடை,இதர வசதிகள் ஆகியவற்றோடு அந்த காமிரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பார்க்கலாம். குறிப்பிட்ட அந்த காமிராவின் விலை, பிலிக்கர் பயனாளிகள் அந்த காமிரவைல் மொத்தம் எத்தனை படங்கள் எடுத்துள்ளனர் போன்ற விவரங்களையும் கூட தெரிந்து கொள்ள முடியும். பயனாளிகளின் மதிப்பீடும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பக்கத்திலேயே பிலிக்கர் சமுகத்தில் எந்த காமிரா பிரபலமாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கேனான்,நிக்கான் ஆகிட காமிராக்களோடு ஐபோனும் புகைப்படம் எடுக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது ஆச்சர்யமான விஷயம்.
இதே போல காமிரா லென்சுகளுக்கு என்று தனி பகுதி இல்லாவிட்டாலும் கூட, உங்கள் மனதில் உள்ள் லென்ஸை குறிப்பிட்டு தேடி அது தொடர்பான தகவல்களை பெற முடியும்.
காமிராக்களுக்கு மட்டும் தான் என்றில்லை, நீங்கள் வாங்க உள்ள மற்ற பொருட்களுக்கான ஆய்வையும் கூட் இதே முறையில் மேற்கொள்ளலாம்.ஆனால் என்ன தகவல்கள் எல்லாம் புகைப்பட மயமாக இருக்கும். அவற்றில் இருந்து தேவையான விவரங்களை நீங்கள் தான் சேகரிக்க வேண்டும். உதாரணத்திற்கு புதிய சோஃபா வாங்குவதாக இருந்தால் பிலிக்கரில் சோஃபா என தேடிப்பார்த்தால் சோஃபா தொடர்புடைய புகைப்படங்களை காணலாம். சோஃபாக்களின் பல ரகங்களை பார்க்க முடிவதோடு சோஃபாக்களின் பயன்பாட்டை உள் அலங்கார நோக்கிலும் புரிந்து கொள்ளலாம். கொஞ்சம் கவனமாக தேடினால் சோஃபா தொடர்பான விலை விவரங்களையும் தேடி கண்டுபிடிக்கலாம்.
அதே போல புத்தக அலமாரி அல்லது மேஜை வாங்கும் முன் இவை தொடர்பான புகைப்படங்களை பார்த்தும் ஆயுவு செய்தா

0 Comments on “பிலிக்கர் சேவையை இப்படி எல்லாமும் பயன்படுத்தலாம்!”
Dr.M.K.Muruganandan
நான் ஒரு ப்ளிக்கர் பயனாளி
ஆனாலும் பல புதிய தகவல்களை உங்களிடம் இருந்து பெற்றேன்.
நன்றி
cybersimman
நன்றி நண்பரே. ப்ளிக்கர் சேவையை நீங்கள் பயனப்டுத்தும் விதம் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம்.
அன்புடன் சிம்மன்