“http://cybersimman.files.wordpress.com/2013/12/nelson-mandela-moments.jpg”>ஒரு வரலாற்று நாயகனுக்கு பொருத்தமான எல்லா அடைபொழிகளையும் நினைத்துப்பார்க்க வேண்டிய நேரம் இது. அப்படியும் கூட அடைமொழிகள் போதாமல் போகலாம். நம்பிக்கை நாயகன் ,தென்னாப்பிரிக்க விடிவெள்ளி நெல்சன் மண்டேலாவின் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆம், மண்டேலாவின் வாழ்க்கையே ஒரு போராட்டம் தானே. நிறவெறிக்கு எதிரான போராட்டம். மனிதநேயம் தழைப்பதற்கான போராட்டம். இன்னொரு மகாதமாவாக மனிதகுலத்துக்கு நம்பிக்கை அளித்த ,மண்டேலாவின் மறைவுக்காக உலகம் கண்னீர் சிந்திக்கொண்டிருக்கிறது. டிவிட்டர் வெளியிலும் அந்த மகத்தான தலைவரின் நினைவாக புகழாஞ்சலிகள் குறும்பதிவாக பெருக்கெடுத்து ஓடுகின்றன.
தேசத்தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் , கால்ப்ந்து நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் மண்டேலாவுக்காக டிவிட்டரில் உருகியுள்ளனர்.
இந்த குறும்பதிவுகள் மண்டேலா வாழ்ந்த வாழ்க்கையையும் அவரது வாழ்க்கை சொல்லும் செய்திகளையும் நினைவில் கொண்டு வருகின்றன.
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
*ஒரு நிமிடம் மவுனம் காத்து நெல்சன் மண்டேலா வாழ்ந்தார் என்பதற்காக நன்று கூறுவோம். – அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.
* மண்டேலாவால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என நினைத்தேன். ஆனால் அவர் விடுதலையாகி அதிபராகவும் ஆன பிறகு எதுவும் முடியும் என நம்புகிறேன்.- மைகேட் மூர் ,ஆவணப்பட இயக்குனர்.
*மண்டேலா உங்கள் வாழ்க்கை மற்றும் முன்னுதாரணத்துக்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்களுடன் இருப்பீர்கள். – கிறிஸ்டினா ரொனால்டோ, கால்பந்து நட்சத்திரம்.
*ஊக்கமளிக்கும் அசாதரணமான மனிதர் – ஆஷ்லே யங்,கால்பந்து நட்சத்திரம்.
மண்டேலா மகத்தான தருணங்கள்:http://mashable.com/2013/12/05/nelson-mandela-dies-dead/
மண்டேலா சார்பிலான அதிகாரபூர்வ டிவிட்டர் பதிவு: https://twitter.com/NelsonMandela