எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா?
இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் செய்யும் போது கூடவே தேவையில்லாத வேறு சில சாப்ட்வேர் துண்டுகள் அல்லது நீட்டிப்புகளையும் சேர்த்தே நிறுவுகின்றன. இந்த அழையா விருந்தாளிகள் தான் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்களை செய்கின்றன. உங்களை அறியாமலே பின்னணியில் கூட இவை செயல்படலாம்.
பெரும்பாலான நேரங்களில் இன்ஸ்டால் செய்யப்படும் போதே , இவை தேவையா என கேட்கப்பட்டிருக்கலாம். அவற்றை நீங்கள் கவனிக்கமாலும் இருந்திருக்கலாம். எது எப்படியோ, புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் போது அந்த சாப்ட்வேர் தவிர வேறு எந்த தேவையில்லாத சாப்ட்வேர் பயன்பாடுகளும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்படாமல் பாதுகாத்து கொள்ள விரும்பினால் அன்செக்கி சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.
சாப்டேவேர்டன் நேரடியாக அல்லது மறைமுகமாக நிறுவப்படும் தேவையில்லாத பயன்பாடுகளை கண்டறிந்து அவற்றை தடுத்து நிறுத்துவதாக அன்செக்கி உறுதி அளிக்கிறது. அதே போல ஏதேனும் உபரி சாப்ட்வேர் நிறுவப்படுவதாக் இருந்தால் அது பற்றி எச்சரிக்கையும் செய்வதாக சொல்கிறது. ஆக புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செயவதாக இருந்தால் அதற்கு முன்னர் அன்செக்கியை நிறுவிக்கொள்ளலாம். ( அன்செக்கி வேறு எதையும் நிறுவாது என நம்புவோம்).
இப்படியாக அன்செக்கி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் போது பாதுகாப்பு அளிப்பதோடு , குறிப்பிட்ட சாப்ட்வேர்கள் அப்டேட் செய்யப்படும் போது தானாகவே அந்த மேம்பாடுகளையும் செயலுக்கு கொண்டு வருகிறது.
இணையதள முகவரி: http://unchecky.com/

0 Comments on “சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி”
cheenakay
அன்பின் சிம்மன் – பயனுள்ள தகவல் – நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
நன்றி பயன்படுத்தி பார்த்து சொல்லுங்கள். சாப்ட்வேர் நிறுவும் போது கூடுதல கவன்ம் தேவை என்பது தான் செய்தி.
அன்புடன் சிம்மன்.
Velliangiri
Thanks Simman. I was searching this article for long time. Now I found here.
cybersimman
நீங்கள் தேடிக்கொண்டிருந்ததை எழுத முடிந்தது மகிச்சி அளிக்கிறது. இணையத்தின் பயன்பாட்டுத்தன்மை குறித்து எழுதுவதே எனது நோக்கம். எழுதுவது பயனுள்ளதாக இருக்கிறது என உணரும் போது மேலும் ஊக்கம் வருகிரது.
அன்புடன் சிம்மன்
Soffree Website
I amaze This post very much, thanks for posting it, it will be usefull for me..
cybersimman
மகிச்சி நண்பரே. இணைவாசிகளின் நுட்பமான பிரச்ச்னைகளை யோசித்து அதற்கான தீர்வுகளை உருவாக்கித்திரும் மென்பொருளாளர்களை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
அனுபுடன் சிம்மன்
Daripada and Software
I extremely_love This post very much, thanks for posting it, it will be usefull for me..
cybersimman
பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. உண்மையில் இந்த பாராட்டு அந்த சாப்ட்வேரை உருவாக்கிய மென்பொருளாளருக்கே சேர வேண்டும். கைகாட்டி விட்டது மட்டும் தானே நான் செய்தது.
அன்புடன் சிம்மன்
TV Online
Nice post it, it will be usefull for me..
cybersimman
looking at the number of comments this looks a hot post. thanks
Velliangiri
Its working perfectly 🙂 …. Thanks Simman Once again ..Cheers
cybersimman
nice to hear that.