அட, அற்புதமான யோசனையாக இருக்கிறதே. எளிமையான நாட் களுக்கு திரும்பி செல்ல இப்படி யொரு நாள் அவசியம்தான் என்று ஒருவர் சபாஷ் போட்டு சந்தோஷப் பட்டிருந்தார்..
அடுத்தவர் ஆஹா, ஒருநாள் முழுவதும் நான் ஷாப்பிங் செல்வேன்; புத்தகங்களை வாங்குவேன். பகல் எல்லாம் தூங்கி மகிழ்வேன் என்று ஆனந்தப்பட்டிருந்தார். இன்னொருவரோ குதிரை சவாரி மேற்கொள்வேன் என்றார்.
புத்தகம் படிப்பேன், ஜாக்கிங் செய்வேன், எனக்கு நானே சமைத்துக் கொள்வேன். எது செய்தாலும் என்னை சுற்றியே இருக்குமாறு பார்த்துக் கொள்வேன். இது வேறொருவருடைய எண்ணம்.
ஓவியம் வரைந்து கொண்டிருப்பேன் அல்லது பூங்காவில் நடை பயில்வேன் என்று ஒருவர் சொல்லியிருக்கிரார்.
ஒரேயொருவர் மட்டும் ஐயோ அது முடியாதே என்றார்.
இவையெல்லாம் என்னவென்று குழப்பமாக இருக்கிறதா?
கம்ப்யூட்டர் பயன் பாட்டை மையமாக வைத்து நடத்தப் பட்டு வரும் உலகம் தழுவிய பரிசோதனை முயற்சி அரிமுகமான போது அது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்தான் இவை.
கம்ப்யூட்டர்கள் பிரபலமாக தொடங்கிய காலத்தில், எங்கும் கம்ப் யூட்டர், எதிலும் கம்ப்யூட்டர் என்று சொல்வது வழக்கமாக இருந்தது. அந்த நிலையெல்லாம் தாண்டி கம்ப்யூட்டர் நமது வாழ்க்கையில் நீக்கமற நிறைந்து விட்டது.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கொஞ்சம் பின்தங்கியிருக்கும் நம் நாட்டிலே இந்நிலை என்றால் 20, 25 வருடங் களுக்கு முன்னரே கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை ஆரத்தழுவிக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுக ளில் என்ன நிலை இருக்கும் என்று சொல்ல வேண்டிய தில்லை. சகலமும் கம்ப்யூட்டர் சார்ந்தே இயங்குகிறது.
தினசரி வாழ்க்கையில் கம்ப்யூட்டர் எப்படியெல்லாம் பயன்படுகிறது, என்ன மாற்றங்களையெல்லாம் கொண்டு வந்திருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்.
கம்ப்யூட்டருக்கு நாம் பழகி விட்டது உண்மைதான் என்றாலும், ஒரு விதத்தில் அதற்கு நாம் அடிமையாகி விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
அதுதான், கம்ப்யூட்டர் இல்லாமல் ஒருநாளேனும் இருக்க முடியுமா என பரிசோதித்து பார்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஒருநாள் முழுவதும்(ஒரே ஒரு நாள் தான்) கம்ப்யூட்டரை அணைத்து விடுங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டு அதற்காக ஷட்டவுன் டே எனும் இணைய தளமும் அமைக்கப்பட்டது.
2007 ல் சோதனை முயற்சியாக துவங்கிய இந்த பரிசோதனை இன்று உலகலாவிய இயக்கமாகவே உருவெடுத்துள்ளது.
கனடாவின் டென்னிஸ் பெஸ்ட்ராவ் என்னும் வாலிபர் தான் முதன் முதலில் இதற்கான தேவையை உணர்ந்தது.மான்டிரியேல் நகரில் வசிக்கும் கம்ப்யூட்டர் புரோகிராமரான இவர் தனது குடும்பத்திரை விட கம்ப்யூட்டரோடு அதிக நேரத்தை செலவிடுவதாக உணர்ந்த போது குடும்பத்தோடு ஒரு நாளையேனும் செலவிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டானது.
இந்த ஆசை ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் பக்கம் செல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.இதை அவர் மட்டுமே செயல்படுத்தியிருக்கலாம். ஆனால் ம்ற்றவர்கள் நிலையும் இது தானே என யோசித்து பார்த்திருக்க வேன்டும்.
இந்த எண்ணம் தொடர்பாக தனது லண்டன் நண்பர் மைக்கேல் டெய்லர் மற்றும் இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் வசிக்கும் திரைப்பட கலைஞரான டேவிட் ப்ரிட்டில் ஆகியோரோடு பேசிப்பார்த்தார்.
மூவருமாக சேர்ந்து மற்றவர்களையும் சேர்த்துக்கொள்வது என தீர்மானித்தனர்.
ஒரு நாள் கம்ப்யூட்டர் இல்லாமலே இருப்பது நல்லது மற்றும் அவசியமானது என நினைத்தாலும் இது சாத்தியமா என தெரிந்து கொள்ள விரும்பினர். உடனே , உங்களால் கம்ப்யூட்டர் இல்லாமல் இருக்க முடியுமா என்னும் கேள்வியை எழுப்பினர்.முடியும் என்றால் அதற்கான உறுதி மொழியை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகோளும் விடுத்தனர்.
இதற்காக ஷட்டவுன் டே என்னும் இணையதளத்தையும் அமைத்தனர். இந்த தளத்தின் மூலம் கேட்கப்பட்ட எளிமையான கேள்விக்கு பலவிதமான பதிலகள கிடைத்ததோடு வரவேற்பு பலமாகவே இருந்தது. உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோர் இதில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
2007 ,மார்ச் 24 ம் தேதி 65 ஆயிரம் பேர் தங்கள் கம்புயுட்டர்களை மூடிவைத்தனர்.
யூடியூப்பில் வெளியிடப்பட்ட விளக்க படம் 11 லட்சம் முறை பார்க்கப்பட்டது. இண்டெர்நெட் முழுவதும் இந்த கருத்து காட்டுதீ போல பற்றிக்கொண்டது.
இதனையடுத்து இக்கருத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் உத்தேசத்தோடு அஷுடொஷ் ரஜேகர் என்னும் இந்திய நண்பரோடு பேசினார். அவரும் கம்பியூட்டரே கதி என இருப்பவர்.அதன் பாதிப்பை அறிந்தவர். இருவரும் இந்த கருத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல தீர்மானித்து கனடாவில் இதனை ஒரு தன்னார்வ அமைப்பாக பதிவு செய்து கொண்டனர்.
இன்று அளவுக்கு அதிகமான கம்ப்யுட்டர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து நோக்கத்தோடு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிற அமைப்புகளோடு இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆண்டுக்கு ஒரு நாள் கம்ப்யூட்டரை மூடிவிட்டு உங்கள் குடும்பத்தோடு சிரித்து மகிழுங்கள் என, தனது இணையதளத்தின் மூலம் அறைகூவல் விடுக்கும் இந்த அமைப்பு கம்ப்யூட்டர் மானிட்டருக்கு வெளியேவும் உலகம் இருப்பதை நினைவு படுத்துகிறது.
இந்த சமுக பரிசோதனையில் வரும் மே 2 ம் தேதி நிங்களும் பங்கேற்கலாம். ஆம் அன்று தான் இந்த ஆண்டுக்கான கம்ப்யூட்டர் இல்லா நாள்.
————-
linjk;
http://www.shutdownday.org/

0 Comments on “கம்ப்யூட்டர் இல்லாமல் ஒருநாள்”
rajanatarajan
//அதுதான், கம்ப்யூட்டர் இல்லாமல் ஒருநாளேனும் இருக்க முடியுமா என பரிசோதித்து பார்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. //
நானும் வார இறுதியில் 4 நாட்கள் முயற்சி செய்து பார்த்தேன்.கருமம் தொல்லைக்காட்சி நேரத்தையெல்லாம் முழுங்கிடுச்சு.
surya
Good Idea.. But will it work.. ????
Let us wait and search net on 2nd May 2009.
appavi
இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/
R Sathyamurthy
எங்கேந்துதான் இந்த ஐடியாக்கள் புறப்படுதோ தெரியல தல. இண்ட்ரஸ்டிங்காதான் இருக்கு.
அணைச்சிதான் பாப்பமே (சிவகுமார் குரலில்)
Nithil
What our people need is ‘a day without TV’. They should try during festival days when the channels telecast stupid special programs and take away the joy of festivals.
Nithil
cybersimman
yes there is a day for it. infact there are no car day and no shopping day too
RAGHU
yes. i agree with you…
what our people need is a “day without TV(especially a festival day)”…
but i thought , it wont be that much easy to make our people to realise its need…
thanks…