இதோ இந்த நிமிடத்தில் எந்த இடத்தில் எல்லாம் காற்று வீசிக்கொண்டிருக்கிறது என்பதை அறியும் ஆர்வம் இருக்கிறதா? ஆம் எனில் இதற்காக என்றே அருமையான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பூமி காற்று வரைபடம் ( http://earth.nullschool.net/) பெயரில் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளார் காமரூன் பெக்காரியோ எனும் மென்பொருள் நிபுணர்.
இந்த தளத்தில் பூமி பந்தின் மீது இப்போது எங்கெல்லாம் காற்று விசுகிறது என்பதை பார்க்கலாம். முதலில் பார்க்கும் போது பூமி பந்தின் வரைபடம் போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் பூமி பந்தை உற்று கவனித்தால் அவற்றின் மீது பச்சை ,மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் கோடுகள் அசைந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் உற்று கவனித்தால் அந்த கோடுகள் புயல அல்லது சூறாவளியை உணர்த்தும் வரைபட சித்திரம் போல இருப்பதை உணரலாம். அவை எல்லாமே குறிப்பிட்ட அந்த இடத்தில் காற்றி வேகத்தையும் அவரி வீசும் திசையையும் குறிக்கும் சித்திரங்கள்.
ரியல் டைம் டேட்டா என்று சொல்லப்படும் இதோ இந்த நிமிடத்தில் திரட்டப்பட்ட தகவலை கொண்டு உருவாக்கப்பட்ட காற்றின் சித்திரங்கள் இவை. இந்த பூமி வரைபடத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கிளிக் செய்து அங்கு காற்று வீசுகிறதா என்று அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட இடத்தை மட்டும் பெரிதாக்கி பார்க்கும் வசதியும் இருக்கிறது. ஆக, வரைபடத்தில் கூடுவாஞ்சேரியையும் கிளிக் செய்து பார்க்கலாம். தில்லியில் காற்று வீசுகிறதா என்றும் பார்க்கலாம் . ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு மூளையில் என்ன நிலை என்றும் பார்க்கலாம்.
காற்றின் வேகத்திற்கு ஏற்ப அவற்றை குறிக்கும் கோடுகளின் வண்ணமும் மாறுபடுகிறது. காற்றும் எத்தனை மைல் வேகத்தில் வீசுகிறது போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். எல்லா விவரங்களும் அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை மையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. வானிலை மாற்றங்களை அறிய பயன்படுத்தப்படும் சூப்பர்க்ம்ப்யூட்டர் உருவாக்கித்தரும் விவரங்களின் அடிப்படையில் இந்த காற்று வீசும் பூமி வரைபடத்தை காம்ரூன் உருவாக்கியுள்ளார்.
பொதுவாக வானிலை விவரங்கள் எந்த அளவுக்கு நுணுக்கமாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அலுப்பூட்டலாம். ஆனால் இந்த விரங்களை காட்சிப்படுத்தினால் எத்தனை சுவாரஸ்யமாக இருக்கும் என்று காமரூன் இந்த தளம் மூலம் அழகாக உணத்தியுள்ளார்.
எத்தனை முறை முகத்தில் வருடியபடி தழந்து செல்லும் தென்றல் காற்றை உணர்ந்து ரசித்திருக்கிறோம். எத்தனை முறை காற்றின் சீற்றத்தை கவனித்திருக்கிறோம். எத்தனை முறை காற்றின் மவுனத்தை வெட்கையாக உணர்ந்து தவித்திருக்கிறோம். காற்றின் கோரத்தாண்டவத்தை புகைப்படமாக பார்த்திருக்கிறோம். திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். ஆனால் உலகில் எப்போதுமே ஏதாவது ஒரு இடத்தில் காற்று வீசிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த இயர்கை யதார்தத்தையும் நினைவு படுத்துகிறது இந்த இணையதளம்.
இயற்கையின் அற்புதத்தை உணரவும் இந்த தளத்தை பயன்படுததலாம். பருவநிலை தொடர்பான தகவல்களில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.
காற்று வீசிக்கொண்டே இருக்கும் இந்த பூமி பந்தை பார்க்கும் போது பலவித எண்ணங்கள் அலைமோதுவதை உணரலாம். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இதில் பூமி பந்து ஒருவிதமான வண்ணக்கலைவையில் தோன்றுவதை பார்க்கலாம். எல்லாம் காற்றின் தன்மைக்கேற்ப அமைபும் வண்ணங்கள். இந்த தளத்தில் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
புள்ளிவிவரங்களை காட்சிபடுத்துவதன் அருமையை உணர்த்தும் இந்த தளத்திற்கு முன்னுதாரணமாக விண்ட் மேப் http://hint.fm/wind/) தளத்தை குறிப்பிடலாம். அமெரிக்காவில் காற்று வீசும் வேகத்தையும் திசையையும் இந்த தளம் உணர்த்துகிறது. இந்த தளத்தில் கருப்பு வெள்ளையில் காற்றின் விவரங்களை காண்லாம்.
இந்த கருத்தாக்கத்தை அப்படியே உலகம் முழூவதற்கும் விரிவாக்கம் செய்து வண்ணமயமாக பூமி காற்று வரைபடம் இணையதளத்தை காம்ரூன் உருவாக்கியுள்ளார். அமெரிக்காவின் விண்ட் மேப் தளம் தான் இந்த தளத்திற்கு ஊக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காம்ரூன் இந்த இணைய திட்டத்திற்காக பேஸ்புக் பக்கம் ஒன்றையும் அமைத்திருக்கிறார். அதில் இந்த திட்டத்தின் சமீபத்திய தகவல்களை தெரிந்து கொள்வதோடு ஆலோசனைகள் மற்றும் யோசனைகளையும் தெரிவிக்கலாம். பாராட்டுகளையும் தான்.
இணையதள முகவரி;http://earth.nullschool.net/
பேஸ்புக் முகவரி; https://www.facebook.com/photo.php?fbid=1426224130944646&set=a.1425522031014856.1073741829.1421330998100626&type=1&theater
———————
கையேடு குறிப்புகள்
சைபர்சிம்மன் கையேடு-1 தொகுப்பு பல இணையதளங்களை தமிழில் முதல் முறையாக அறிமுகம் செய்திருப்பதாக கருதுகிறேன். உதாரணம் ; பட்பிரெஸ்ட், ஐசெக்மூவிஸ் , கோட்சீக்ரெட் … படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.
சேர்க்காமல் விடுபட்டதாக நான் நினைப்பது லைப்ரரி திங், புக்கிராசிங். இவை அடுத்த தொகுப்பில்.
—————–

4 Comments on “உலகில் காற்று வீசும் இடங்களை காண்பிக்கும் இணையதளம்.”
Narayanan
Super Sir
cybersimman
thanks
Srini Vasan
அருமை !
cybersimman
thanks