இணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படிக்க கூகிள் நியூஸ் சேவையும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகிள் வேறு பல சேவைகளையும் வழங்கி வருவதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்படி கூகிள் வழங்கும் எண்ணற்ற சேவைகளில் அதிகமாக பிரபலமாகாத ஆனால் மிகவும் பயனுள்ள சேவை என்று கூகிள் அலர்ட் சேவை வர்ணிக்கபடுகிறது. இந்த சேவை மூலம் நீங்கள் விரும்பும் துறை அல்லது தலைப்புகளில் எந்த செய்தியையும் தவறவிடாமல் இருக்கலாம்.
கூகிள் அலர்ட் ஒரு அறிமுகம்
கூகிள் அலர்ட் ஒரு தானியங்கி இணைய சேவை. இணையத்தில் குறிப்பிட்ட தலைப்பிலான சமீபத்திய செய்தி அல்லது நடவடிக்கை குறித்து இந்த சேவை இமெயில் மூலம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கும். ஒருவிதத்தில் புதிய செய்திக்கான எச்சரிக்கை சேவை என்று இதை புரிந்து கொள்ளலாம். எதற்கு இந்த எச்சரிக்கை என்று நீங்கள் கேட்கலாம். இணையத்தில் புதிய செய்திகளை தவறவிடாமல் இருக்க என்பது தான் இதற்கான பதில்.
எண்ணற்ற செய்தி தளங்களும் , தேடியந்திரங்களும் இருக்கும் போது செய்திகளை தெரிந்து கொள்வது மிகவும் சுலபமானது தான். ஆனால் செய்திகளை தெரிந்து கொள்ள எண்ணற்ற வழிகள் இருப்பதாலேயே முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிடிவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. காரணம் நீங்கள் எப்போதுமே ஆன்லைனில் இருக்க முடியாது, அப்படியே அதிக நேரம் இணையத்தில் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் செய்திகளையே பார்த்துக்கொண்டிருக்க முடியாது. உங்களுக்கு தேவையான நேரத்தில் செய்தி தளங்களுக்கு சென்று பார்ப்பீர்கள். அப்போது கண்ணில் படும் முக்கிய செய்திகளை படித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் பார்க்காத நேரத்தில் வெளியாகும் செய்திகள் உங்கள் கவனத்திற்கு வராமலே போய்விடும் அல்லவா? அவற்றில் சில உங்களுக்கு முக்கியமனதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கலாம். இப்படி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் செய்திகளை தவறவிடாமல் இருக்க கூகிள் அலர்ட் கைகொடுக்கிறது.
அலர்ட் பெறுவது எப்படி?
பொதுவாக கூகிள் அலர்ட்களை ஒருவர் தங்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ள துறைகள் சார்ந்த செய்திகள் தெரிவிக்கப்படுவதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கேற்ப குறிச்சொற்களை (கீவேர்டு) தேர்வு செய்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒருவருக்கு மென்பொருள் சார்ந்த செய்திகள் தேவை என்றால் மென்பொருள் (சாப்ட்வேர்) எனும் குறிச்சொற்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஓபன் சோர்ஸ் ஆர்வலர்கள் லினக்ஸ் எனும் குறிச்சொல்லை பயன்படுத்தலாம். விளையாட்டு பிரியர்கள் கிரிக்கெட் அல்லது கால்பந்து என தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள் நுழைவுத்தேர்வு எனும் குறிச்சொல்லை தேர்வு செய்து கொள்ளலாம். குறிச்சொற்கள் தனிநபர்கள் சார்ந்த்தாகவும் இருக்கலாம். அதாவது டெண்டுலகர் என்றோ பில் கேட்ஸ் என்றோ தேர்வு செய்து கொள்ளாலாம். குறிச்சொல்லை சமர்பித்த பின் , கூகிள் தேடியந்திரம் இந்த தலைப்பிலான செய்திகளை கவனித்துக்கொண்டே இருக்கும். எப்போது புதிய செய்தி அல்லது தகவல் வெளியானலும் உடனே உங்களுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவித்துவிடும். இமெயில் பெட்டியை திறந்து பார்க்கும் போது , இந்த எச்சரிக்கை மெயில்கள் வாயிலாக புதிய செய்தியை தெரிந்து கொள்ளலாம். அவை பயனுள்ளது என தெரிந்தால் உடனே கிளிக் செய்து மூல செய்தியை விரிவாக தெரிந்து கொள்ளலாம். இல்லை சும்மா இருந்துவிடலாம்.
பயன்படுத்துவது எப்படி?
கூகிள் அலர் சேவை

4 Comments on “கூகிள் அலர்ட் சேவை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள்.”
Regan Jones
மிகவும் பயனுள்ள தகவல். கூகிள் அலர்ட் சேவை உருவாக காரணமாக இருந்தது ஒரு இந்தியர் என்பது இப்போதுதான் தெரிந்தது. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
cybersimman
நன்றி நண்பரே. பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்களில் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் இது போதாது. இந்தியர்கள் தனியாக பேஸ்பு க் போன்ற நிறுவனங்களை துவக்க வேண்டும்.
அன்புடன் சிம்மன்
ALAGUMANI A.
very useful news. Thank you sir
cybersimman
thanks