பொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட்டியே வைக்கலாம் , இந்த இரண்டு இணையதளங்களில் எது மிக எளிமையாக இருக்கிறது என்று ? அந்த அளவுக்கு இரண்டு தளங்களும் நேர்த்தியான எளிமையோடு அமைந்துள்ளன.
தாட்ஜாய் , பொன்மொழி தேடியந்திரமாக வரவேற்கிறது. முகப்பு பக்கம் அத்தனை எளிமை. நடுநாயகமாக ஒரு தேடல் கட்டம். அதில் பொன்மொழிகளை தேடலாம். அதன் கீழே பொன்மொழிகளை ,மூன்று விதமான தலைப்புகளில் பட்டியலாக பார்க்கலாம். அருகிலேயே டிவிட்டர் அல்லது பேஸ்புக் மூலம் தினம் ஒரு பொன்மொழி பெறும் வசதி இருக்கிறது. அவ்வளவு தான் இந்த பொன்மொழி தளம். ஆனால் இஷ்டம் போல பொன்மொழிகளை தேடிக்கொண்டே இருக்கலாம். குறிப்பிட்ட பொன்மொழி தேவை என்றால் தேடல் கட்டத்தை பயன்படுத்தலாம் .அல்லது, பொன்மொழி வகைகள் அல்லது பொன்மொழி சொன்னவர்கள் பட்டியலை கிளிக் செய்து வரிசையாக பொன்மொழிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பொன்மொழி வகைகள் ஆங்கில அகர வரிசைப்படி அமைந்துள்ளன. ஒவ்வொரு தலைப்பாக பார்த்தால் நேரம் போவதே தெரியாது.
கோட்ஸ்பாரால் தளமும் இதே முறையில் ஆனால் கொஞ்ச்ம் மாறுபட்டு இருக்கிறது. ( http://quotes4all.net/) . இதன் முகப்பு பக்கம் வரிசையாக பொன்மொழிகளுடன் வரவேற்கிறது. அந்த பொன்மொழிகளை படித்து ரசித்த பின், கீழ் பகுதியில் கிளிக் செய்தாலும் சரி அல்லது மேலே உள்ள பகுதிக்கு சென்றாலும் சரி பொன்மொழிகளின் உலகம் அகல விரிகிறது. கீழ்ப்பகுதியில் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக உள்ள பொன்மொழி வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்து பார்க்கலாம். அதற்கும் கீழே மேலும் பொன்மொழிகளுக்கான வாயில் ஒரு கிளிக்கில் திறக்கிறது. தளத்தின் மேல் பகுதியில் பார்த்தால், ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசை கண்களை உறுத்தாத வகையில் தரப்பட்டுள்ளது. எந்த எழுத்தை கிளிக் செய்தாலும் அந்த எழுத்தியில் துவங்கும் பொன்மொழிகளை காணலாம்.
பொன்மொழிகளை மதிப்பீடு செய்யும் வசதியும் இருக்கிறது. எளிமையான அமைப்பை மீறி இந்த தளங்களில் இருககூடிய செழுமை வியப்பானது.
தினம் தினம் விஜயம் செய்ய வேண்டிய தளங்கள் இவை . காலையில் ஒரு சில நிமிடங்களையாவது செலவிடுங்கள். இல்லை, அவப்போது நேரம் கிடைக்கும் போது சென்றுப்பாருங்கள் .உங்கள் வாழ்க்கை ஊக்கம் பெறட்டும்.
———-
தினமும் பொன்மொழியுடன் துவக்க விருப்பமா? கோட்சீக்ரெட் உட்பட சிறந்த பொன்மொழி இணையதள அறிமுகங்களுக்கு : https://www.nhm.in/shop/100-00-0002-219-9.html …

4 Comments on “பொன்மொழிகளுக்கான இரண்டு இணையதளங்கள்”
Regan Jones
பல பல புதிய தளங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். நன்றி.
cybersimman
புதிய தளங்களை கண்டு கொள்வதில் எனக்கு உண்டாகும் மகிழ்ச்சி , அவற்றை அறிமுகம் செய்வதில் இரட்டிப்பாகிறது. உங்களைபோன்றவ்ர்கள் அதை சுட்டிக்காட்டி பாராட்டும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை.
அன்புடன் சிம்மன்
Tamil Nikandu
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
http://www.Nikandu.com
நிகண்டு.காம்
cybersimman
இந்த சேவையின் நோக்கம் குறித்து எனக்கு சில கேள்விகள் உள்ளன. தொடர்பு இமெயில் முகவரியை குறிப்பிடவும்.
அன்புடன் சிம்மன்