Written by: "CyberSimman"

தேவை மக்கள் நல அல்கோரிதம்

ஜேக் விட்டன் கேட்பது போன்ற அல்கோரிதமை எந்த ஒரு சமூக ஊடக நிறுவனமும் உருவாக்கப் போவதில்லை. உருவாக்க முடியாது என்றில்லை, உருவாக்க கூடாது என அவை நினைக்கலாம் என்பதே காரணம். ஏனெனில் சமூக ஊடக நிறுவனங்கள் ஒவ்வொன்றும், தங்கள் பயனாளிகளை கூண்டு கிளிகளாக்கி தக்க வைத்துக்கொள்ளும் நோக்கிலான அல்கோரிதம்களையே உருவாக்க விரும்புகின்றன. அப்படியிருக்க, பயனாளிகளிக்கு சுதந்திரம் அளிக்கும் மக்கள் நல அல்கோரிதமை அவை ஏன் உருவாக்கப்போகின்றன. பேஸ்புக்கோ, டிக்டாக்கோ அல்லது யூடியூபோ அதன் அல்கோரிதம்கள் எல்லாமே பயனாளிகளுக்கு […]

ஜேக் விட்டன் கேட்பது போன்ற அல்கோரிதமை எந்த ஒரு சமூக ஊடக நிறுவனமும் உருவாக்கப் போவதில்லை. உருவாக்க முடியாது என்றில்லை, உர...

Read More »

அறிவியல் தான் எனது மதம்- ’அடா’வின் முழக்கம்

சார்லெஸ் பாபேஜ் கம்ப்யூட்டர்களின் தந்தை என கருதப்படலாம். ஆனால் அவரது சகாவான அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமாக கருதப்படுகிறார். பாபேஜ் உருவாக்க உத்தேசித்த அனல்டிகல் இஞ்சின் எனப்படும் முன்னோட்ட கம்ப்யூட்டர் இயந்திரத்தின் மூலம் செயல்படுத்தக்கூடிய முதல் அல்கோரிதமை எழுதியவர் என்பதே அடா லவ்லேசின் சிறப்பு. அந்த வகையில் அடா லவ்லேஸ் முன்னோடி கம்ப்யூட்டர் பெண்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். கோடிங் உலகில் பெண்களுக்கான ஊக்கமாகவும், முன்னுதாரணமாகவும் கருதப்படுகிறார். கம்ப்யூட்டர் உலகில் அடா லவ்லேஸ் பங்களிப்பை நினைவு கூறும் […]

சார்லெஸ் பாபேஜ் கம்ப்யூட்டர்களின் தந்தை என கருதப்படலாம். ஆனால் அவரது சகாவான அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமாக கருதப்ப...

Read More »

கூகுள்- பெர்ப்லக்சிடி ஒரு ஒப்பீடு!

கூகுளுக்கு மாற்று என்று சொல்லப்படும் ஏஐ தேடியந்திரம் பெர்ப்ல்க்சிடி தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் சிறிய நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னைப்பொருத்தவரை இந்த நூல் சத்திய சோதனை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதில் நான் பெர்ப்லக்சிட்டி புகழ் பாடப்போவதில்லை. அதற்காக கூகுளுக்கு கொடி பிடிக்கிறேன் என்ற பொருளும் இல்லை. தேடியந்திரமாக கூகுள் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அண்மை ஆண்டுகளாக கூகுளின் தேடல் முடிவுகளில் வெளிப்படையாக தெரியும் வர்த்தக+ விளம்பர […]

கூகுளுக்கு மாற்று என்று சொல்லப்படும் ஏஐ தேடியந்திரம் பெர்ப்ல்க்சிடி தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் சிறிய நூல்...

Read More »

மொழிபெயர்ப்பு செய்த இணைய மீனும் கூகுளின் மறதியும்!

கூகுள் தேடலில் ஈடுபடும் போது, அதன் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்காமல் சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, பல நேரங்களில் அது முன்னிறுத்தும் முதல் முடிவு எத்தனை அபத்தமானது அல்லது பொருத்தமற்றது என்பதை உணர்வதும் அவசியம்.இதற்கான காரணங்களை அறிய அல்டாவிஸ்டாவின் பேபல் பிஷ் சேவை தொடர்பாக கூகுளில் தேடிப்பார்க்கவும். பேபல் பிஷ் (Babel fish) என்பது பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட அல்டாவிஸ்டா தேடியந்திரம் சார்பில் அதற்கு முன் வழங்கப்பட்ட மொழிபெயர்ப்பு சேவை. […]

கூகுள் தேடலில் ஈடுபடும் போது, அதன் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்காமல் சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்பது மட்டும் அல்...

Read More »

இணையத்தில் உரையாடுவது என்றால் என்ன?

இணைய விவாதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பழைய அல்டாவிஸ்டா தேடியந்திரம் தொடர்பான ’ஹேக்கர்நியூஸ்’ தளத்தின் விவாத சரட்டை குறிப்பிடலாம்: https://news.ycombinator.com/item?id=19170950 ஹேக்கர்நியூஸ் தளம் பற்றி அறிந்தவர்கள், அதன் விவாத சரடுகள் அனைத்துமே உரையாடலுக்கான உதாரணம் என்று குறிப்பிட விரும்பலாம். இந்த கருத்து மிகையோ வெறும் புகழ்ச்சியோ அல்ல என்பதை ஹேக்கர் நியூஸ் தளத்தை பயன்படுத்தி பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். ஹேக்கர் நியூஸ் என்பது, சமூக ஊடக பிரிவுகளின் கீழ் வரும் செய்தி அல்லது விவாத […]

இணைய விவாதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பழைய அல்டாவிஸ்டா தேடியந்திரம் தொடர்பான ’ஹேக்கர்நியூஸ்’ தளத்தின் விவாத...

Read More »