Written by: "CyberSimman"

பாஸ்வேர்டு விதிமுறைகளில் புதிய மாற்றம்!

  பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் அது அடிப்படையில் வலுவானதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். வலுவான பாஸ்வேர்டை உருவாக்க பல்வேறு வழிமுறைகள் முன்வைக்கப்படுவதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வழிமுறைகளில் பல மீறப்படாத விதிமுறைகள் போலவே அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விதிகள் உருவாக காரணமாக இருந்தவரே இவற்றில் சில தவறானவை என ஒப்புக்கொண்டிருப்பதை அடுத்து பாஸ்வேர்டு பாதுகாப்பிற்கான மூல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆக, இனியும் நீங்கள் பாஸ்வேர்டை அடிக்கடி […]

  பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் அது அடிப்படையில் வலுவானதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை...

Read More »

பேஸ்புக் நட்பு இலக்கணம்

திருவிளையாடல் திரைப்படத்தின் சிவபெருமான் –புலவர் தருமி உரையாடலை இணைய யுகத்திற்கு ஏற்ப அப்டேட் செய்ய வேண்டும் எனில், பேஸ்புக்கில் செய்யக்கூடிவையும், செய்யக்கூடாதவையும் என தருமி கேட்பதாக சேர்த்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு பேஸ்புக் பயன்பாட்டில் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. புதிய நட்பை தேடிக்கொள்ளவும், நண்பர்களோடு உரையாடவும் பேஸ்புக் அருமையான வழி தான். ஆனால் பேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் நட்பையும், விருப்பங்களையும் (லைக்ஸ்) மட்டும் பெற்றுத்தருவதில்லை. பல நேரங்களில் வில்லங்கத்தையும் தேடித்தரலாம். பேஸ்புக் நட்புக்கான வலைப்பின்னல் சேவை […]

திருவிளையாடல் திரைப்படத்தின் சிவபெருமான் –புலவர் தருமி உரையாடலை இணைய யுகத்திற்கு ஏற்ப அப்டேட் செய்ய வேண்டும் எனில், பேஸ்...

Read More »

நூலிழையில் மின்சக்தி உற்பத்தி; வியக்க வைக்கும் விஞ்ஞான ஆய்வு

பேட்டரி இல்லாமலே ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அமர்களமாக தான் இருக்கும், ஆனால் இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். இந்த கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் தொழில்நுட்ப உலகில் பல ஆய்வுகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகள் பல மட்டங்களில், பலவிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் பார்த்தால் பேட்டரி தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த முயன்றுக்கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் பார்த்தால், பேட்டரியே இல்லாமல் மின்சக்தியை உருவாக்கி கொள்வதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். இரண்டாம் […]

பேட்டரி இல்லாமலே ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அமர்களமாக தான் இருக்கும், ஆனால் இது எப்பட...

Read More »

நீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை […]

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய...

Read More »

கண்ணை நம்பாதே! ஒளிப்படங்கள் ஏமாற்றும்…

இனி அடுத்தமுறை இணையத்தில் ஒளிப்படங்களை பார்த்து ரசிக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அது போல கூட நீங்கள் காணும் ஒளிப்படத்தை ஆய்வு செய்யுங்கள். அதிலும் முக்கியமாக, ஒரு ஒளிப்படம் உங்களை கவர்ந்து அதை இணையவெளியில் பகிர்ந்து கொள்ளத்தோன்றும் நிலையில், அந்த படத்தை ஒருமுறைக்கு இருமுறை கூர்ந்து கவனிப்பது நல்லது. ஏனெனில், அந்த படம் போலியான ஒளிப்படமாக கூட இருக்கலாம். எனவே நீங்களும் ஏமாந்து, மற்றவர்களையும் ஏமாற செய்யக்கூடாது […]

இனி அடுத்தமுறை இணையத்தில் ஒளிப்படங்களை பார்த்து ரசிக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கண்ணில் விளக்கெண்ணெய...

Read More »