Written by: "CyberSimman"

இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி.

வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு. இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு […]

வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற...

Read More »

சற்றே விலகி நில்லேன் கர்சரே !

கர்சர் படுத்தும் பாடு என்று புலம்பிய அனுபவம் உங்களுக்கு உண்டா? கர்சர் என்ரால் மவுஸ் கர்சர். இணையத்தில் அதிகம் டைப் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி இப்படி புலம்ப நேரலாம். அதாவது டைப் செய்யும் போதெல்லாம் எந்த இடத்தில் டைப் செய்கிறோமோ சரியாக அந்த இடத்தில் மவுசின் கர்சர் கோடு போலவே கைகாட்டி கொண்டிருக்கும். சுட்டிக்காட்டுவது தான் இதன் நோக்கம் என்றாலும் டைப் செய்யும் போது மட்டும் இது இடையூறாக தோன்றலாம்.டைப் செய்த எழுத்து சரியானது தானா […]

கர்சர் படுத்தும் பாடு என்று புலம்பிய அனுபவம் உங்களுக்கு உண்டா? கர்சர் என்ரால் மவுஸ் கர்சர். இணையத்தில் அதிகம் டைப் செய்ய...

Read More »

பேஸ்புக் மூலம் வேலை தேடுவது எப்படி?

பேஸ்புக் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.புகைப்பட‌ங்களையும்,சமீபத்தில் பார்த்த திரைப்படம் பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.இன்னும் பலவிதங்களில் இந்த சமுக வலைப்பின்னல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை எல்லாம் தெரிந்தது தான். பேஸ்புக் சேவையை வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? ஆம், பேஸ்புக் நட்பு வளர்கவும் ஊர் வம்பு பகிர்ந்து கொள்வதற்கான இடம் மட்டும் அல்ல: அதை பலவிதங்களில் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.வேலைக்கு வலை வீசவும் தான்!.புதிய வேலை தேடுவதாக இருந்தாலும் சரி ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் வேலையை விட சிறந்த […]

பேஸ்புக் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.புகைப்பட‌ங்களையும்,சமீபத்தில் பார்த்த திரைப்படம்...

Read More »

இதயத்துடிப்பு பாஸ்வேர்டாகும் அதிசயம்.

எதிர்காலத்தில் பாஸ்வேர்டு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் கை ரேகை பாஸ்வேர்டாகலாம்.முக குறிப்புகள் கடவுச்சொல்லாகலாம்.பாஸ்வேர்டாக ஒரு மாத்திரியை முழுங்கி கொள்ளலாம். இன்னும் என்ன என்ன ஆச்சர்யங்கள் வேண்டுமானால் நிகழலாம். இவற்றை சாத்தியமாக்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நிடுவங்கள் சார்பில்,விஞ்ஞானிகள் சார்பில் என தனித்தனியே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இவற்றுக்கு பொதுவான இலக்கு இருக்கறது. தற்போது நடைமுறையில் உள்ள பயனர்சொல் மற்றும் ரகசிய சொல் முறைக்கு மாற்றாக விளங்க கூடிய நம்பகமான பாஸ்வேர்டு முறையை உருவாக்குவது […]

எதிர்காலத்தில் பாஸ்வேர்டு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் கை ரேகை பாஸ்வேர்டாகலாம்.முக குறிப்புகள் கடவு...

Read More »

டிவிட்டர் அச்சு இயந்திரம்.

டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியக‌த்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இணைய யுகத்தில் தேவை இல்லாமல் போய்விட்ட மற்றொரு தொழில்நுட்பமான தந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டவை இவை.அந்த காலத்தில்  பங்கு சந்தை நிலவரத்தை அச்சிட  இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பங்குகளின் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்வது இன்று […]

டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன....

Read More »