Written by: "CyberSimman"

வாசிப்புக்கான வலைப்பின்னல் தளம்.

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்டுவதை குறிக்கும்.மேற்கோள் மூலம் நல்ல கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளவும் நல்ல கட்டுரைகளை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ள சேவை இது.வாசிப்புக்கான வலைப்பின்னல் என்றும் வைத்து கொள்ளலாம். வலைப்பின்னல் சேவை என்றவுடன் இன்னொரு வலைப்பின்னலா என்ற அலுப்பு ஏற்படகூடியது இயல்பானது தான்!.ஏற்கனவே இருக்கும் வலைப்பின்னல் தளங்கள் போதாதா என்ற கேள்வியும் எழலாம்! ஆனால் ஆச்சர்யப்படக்கூடிய வகையில் இந்த கேள்விகளை கோட்.எப்எம் தளமே தனது அறிமுக பகுதியில் எழுப்பியிருக்கிறது.பேஸ்புக்,டிவிட்டர் போன்றவற்றைல் […]

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்...

Read More »

டூ இன் ஒன் தேடியந்திரம்.

ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகையால் ஸ்லிக்கில் நீங்கள் தேடலாம்,தேடிக்கொண்டே உலாவலாம்.உலாவிக்கொண்டே தேடலாம்.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்யலாம்.எதற்காகவும் இணைய பக்கத்தை விட்டு வெளியே போக வேண்டியதில்லை. 21 ம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக்கொள்ளும் ஸ்லிக் உலகின் முதல் தேடல் பிரவுசர் என்று அழைத்து கொள்கிறது. இந்த அறிமுகமும் வர்ணனையும் தலையை சுற்ற வைத்தால் ஸ்லிக் தேடுவதோடு தேடல் முடிவுகளில் உலாவும் வசதியையும் தருகிறது என்று புரிந்து கொள்ளலாம். […]

ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகை...

Read More »

அழகன்குளத்திற்கு ஒரு வேண்டுகோள்!

வலைப்பதிவு செய்வதை ஊதியம் இல்லாத வேலை போலவே மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வருகிறேன்.இணையத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் டொழில்நுட்ப அற்புதங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ப‌தே இந்த வலைப்பதிவிற்கான தூண்டுதல். இந்த பதிவுகள் பலரால் படிக்கப்படுகிறது.பலரால் பகிர்ந்து கொள்ளவும் படுகிறது.உரிய இணைப்போடு பகிர்ந்து கொள்ளும் நல்லிதயங்களுக்கு நன்றி.எனது பதிவுகள் திருடப்படவும் செய்கின்றன.திருட்டு என்ன்னும் வார்த்தையை பயன்ப‌டுத்த தயக்கமாக தான் இருக்கிறது என்றாலும் அப்படியெ நகலெடுக்கப்படுவது போல பதிவுகள் வேறு தளங்களில் பயன்ப‌டுத்தப்படுவதை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் […]

வலைப்பதிவு செய்வதை ஊதியம் இல்லாத வேலை போலவே மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வருகிறேன்.இணையத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் டொழி...

Read More »

முடக்கப்பட்ட இணைய‌தளங்களை பார்க்க!

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும் சேவை.ஆனால் தடை செய்யப்பட்ட எல்லா தளங்களையும் பார்க்க முடியாது.அதற்கே வேறு சேவையை தான் நாட வேண்டும். அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது. டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அதன் வரம்பு கருதி இணையதள முகவரிகளை […]

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும்...

Read More »

சமையல் குறிப்புகளும் இனி சமூகமயம்.

ஃபுட்லி அடிப்படையில் சமையல் குறிப்புகளுக்கான தேடியந்திரம் என்றாலும் எதிர்பார்க்கும் சமையல்குறிப்புகளை தேடித்தருவதோடு மேலும் சிலவற்றை அது சாத்தியமாக்குகிறது.அதாவது சமையல் குறிப்புகளை அது சமூக மயமாக்குகிறது. சமூக மயம் என்றால் நண்பர்களின் வலைப்பின்னலுக்குள் பகிர்ந்து கொள்ளும் வசதி என்று புரிந்து கொள்ளலாம்.ஆம் ஃபுட்லி சமையல் குறிப்புகளை பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது.அப்படியே நண்பர்களின் விருப்பமான சமையல் குறிப்புகளையும் தெரிந்து கொள்ள உதவுகிறது.அந்த வகையில் சமியல் குறிப்பு தேடலை அலுப்புக்கு இடமில்லாத சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றித்தருகிறது. ஃபுட்லியில் சமையல் […]

ஃபுட்லி அடிப்படையில் சமையல் குறிப்புகளுக்கான தேடியந்திரம் என்றாலும் எதிர்பார்க்கும் சமையல்குறிப்புகளை தேடித்தருவதோடு மேல...

Read More »