Category: இணையதளம்

ஆன்லைனில் மூக்கு கண்ணாடி வாங்கலாம்!

மூக்கு கண்ணாடி வாங்க வேண்டும் என்றால் ஆப்டிகல்சை தேடி தான் போக வேண்டுமா என்ன? இப்போது வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் பொருத்தமாக கண்ணாடியை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம் தெரியுமா? குளோபல் ஐ கிளாசஸ் இணையதளம் தான் இப்படி ஆன்லைனிலேயே மூக்கு கண்ணாடிகளை வாங்கி கொள்ள வழி செய்கிறது. இது இணைய ஷாப்பிங்கின் காலம் என்றாலும் மூக்கு கண்ணாடியை இணையம் வழியே வாங்குவது என்பது கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம் தான்.அதோடு உள்ளூர் எல்லையை தாண்டி உலகலாவிய […]

மூக்கு கண்ணாடி வாங்க வேண்டும் என்றால் ஆப்டிகல்சை தேடி தான் போக வேண்டுமா என்ன? இப்போது வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் பொ...

Read More »

அதி நவீன கதை எழுதலாம் வாருங்கள்;அழைக்கும் தளங்கள்.

ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தானாம் என்ற கதை சொல்லும் பாணியில் இருந்து இலக்கியம் எப்போதோ எங்கேயோ முன்னேறி வந்துவிட்டது.சிறுகதைகளிலும் நாவல்களிலும் நேரத்தியான கதை சொல்லும் முறைகள் பின்பற்றப்பட்டு நவீன கதை சொல்லும் முறை செழுமையாகி இருக்கிறது. என்ன தான் நேர்த்தியாக நடையில் எழுதப்பட்டிருந்தாலும் தீவிர இலக்கியம் உடபட தற்போதைய கதை சொல்லும் முறையே காலாவதியாகிவிட்டது என வாதிடும் நவீன இலக்கிய விமர்சகர்களும் இருக்கின்றனர்.நமக்கு பழக்கப்பட்ட இந்த ஒற்றை கோட்டிலான (லீனியர்)கதை சொல்லலில் இருந்து விலகி நான் […]

ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தானாம் என்ற கதை சொல்லும் பாணியில் இருந்து இலக்கியம் எப்போதோ எங்கேயோ முன்னேறி வந்துவிட்டது.சி...

Read More »

தருவதற்கான இணையதளம் யாகிட்

யாகிட் இணையதளத்தை கொடுப்பதற்கான இணையதளம் என்று சொல்லலாம்.கொடுப்பது என்றால் அள்ளிக்கொடுப்பதோ,கிள்ளிக்கொடுப்பதோ அல்ல.வாரிக்கொடுப்படும் அல்ல;வீசி எறியும் பொருட்களை பிறருக்கு கொடுப்பது! வீசி எறியும் பொருட்களை பிறருக்கு தருவது கொடுப்பதாகுமா? என்று கேட்கலாம்.வீசி எறியும் பொருட்கள் என்று சொல்வதைவிட வீசி எறிய மனமில்லா பொருட்கள் என்று சொன்னால் இந்த தளத்தின் நோக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். அதாவது நமக்கு தேவையில்லாத பொருட்கள்;ஆனால் வேறு யாருக்கேனும் பயன்படக்கூடிய பொருட்கள்.இத்தகைய பொருட்களை மற்றவர்களுக்கு தருவதற்கான வழியை ஏற்படுத்தி தருவதற்காகவே உருவாக்க்ப்பட்டது இந்த தளம். […]

யாகிட் இணையதளத்தை கொடுப்பதற்கான இணையதளம் என்று சொல்லலாம்.கொடுப்பது என்றால் அள்ளிக்கொடுப்பதோ,கிள்ளிக்கொடுப்பதோ அல்ல.வாரிக...

Read More »

உலகின் பாடலை கேட்டு ரசிக்க இந்த இணையதளம்.

அமெரிக்கா என்றால் ராக் அன் ரோல்.ஜமைக்கா என்றால் ரெகே.பிரேசில் என்றால் துள்ளி குதிக்க வைக்கும் சம்பா நடன மெட்டு.கியூபா என்றால் தாளம் போட் அவைக்கும் கரிபிய இசை.இந்தியா என்றால் வடக்கே இந்துஸ்தானி,தெற்கே கர்நாடக சங்கீதம்.கூடவே நாட்டு பாடல்கள். இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு இசை மனம் உண்டு.வியட்னாமில் போனால் ஒரு வகையான சங்கீதம் கேட்கலாம்.இத்தாலியிலோ ஸ்பெயினிலோ முற்றிலும் வேறு வகையான இசையை கேட்டு மகிழலாம். உள்நாட்டு சங்கீதம் இல்லையென்றால் சர்வதேச அளவிலான பிரபலமான பாப் பாடல்களை கேட்டு […]

அமெரிக்கா என்றால் ராக் அன் ரோல்.ஜமைக்கா என்றால் ரெகே.பிரேசில் என்றால் துள்ளி குதிக்க வைக்கும் சம்பா நடன மெட்டு.கியூபா என...

Read More »

மறந்து வைத்த பொருளை தேட ஒரு இணையதளம்.

காலையில் புறப்படும் அவசரத்தில் செல்போனையோ ,கைகடிகார‌த்தையோ (செல்போன் யுகத்திலும் கைகடிகாரம் கட்டுபவர்கள் நாம் மட்டுமே)எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடும் அனுபவம் நம் எல்லோருக்குமே உண்டு.இது சிலருக்கு தினசரி அனுபவமாகவும் இருக்கலாம்.இன்னும் சில நேரங்களிலோ முக்கியமான பொருளை வைத்த இடம் தெரியாமல் எல்லா இடத்திலும் தேடிக்கொண்டிருப்போம். இப்படி இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடுவது தத்துவ நோக்கில் இல்லாவிட்டாலும் நடைமுறை வாழ்க்கையில் எல்லோருக்குமே ஏற்படுவது தான். இது போன்ற நேரங்களில் தேடும் பொருளை எங்கே வைத்தோம் […]

காலையில் புறப்படும் அவசரத்தில் செல்போனையோ ,கைகடிகார‌த்தையோ (செல்போன் யுகத்திலும் கைகடிகாரம் கட்டுபவர்கள் நாம் மட்டுமே)எங...

Read More »