Category: இணையதளம்

மற‌தியை ம‌ற‌க்க‌ ஒரு இணைய‌ த‌ள‌ம்

விழித்திருப்பது உமகக்கோ பிழைப்பு எமக்கோ விதி, என்னும் பசுவையாவின் கவிதை வரியைப்போல மறதி என்பது சிலருக்கு வியாதி பலருக்கு பழக்கம்.மறதியோடு சோம்பலும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம்.செய்ய வேண்டும் என நினைக்கும் வேலையை மறந்து விட்டு த‌விப்பது சோம்பலினாலும் தானே. உடனே செய்து முடிக்கும் பழக்கம் மற்றும் தள்ளிப்போடுவதை தவிர்க்கும் பழக்கம் இரண்டு இருந்தால் மற‌தியால் தவிக்க வேண்டியதில்லை. மறந்து விடும் வேலையை நினைவு படுத்திக்கொண்டேயிருக்கும் தந்தையோ, மனைவியோ, நண்பனோ இருப்பதும் நல்லது தான். இப்படி நல்ல […]

விழித்திருப்பது உமகக்கோ பிழைப்பு எமக்கோ விதி, என்னும் பசுவையாவின் கவிதை வரியைப்போல மறதி என்பது சிலருக்கு வியாதி பலருக்கு...

Read More »

பாலிடேவுக்கு வாருங்கள்

உங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால் அதற்கு முன் முதலில் இந்த மூன்று கேள்விக்கு பதில் அளியுங்கள்? உங்களிடம் கூடுதாலான அறை அல்லது வீடு இருக்கிறதா? உங்களுக்கு புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா? கூடுதல் வருமானம் தேவை என்ற எண்ணம் இருக்கிறதா? ஆம், ஆம், ஆம், எனில் பாலிடே இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . கார‌ண‌ம் இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் வீட்டில் த‌ங்க‌க்கூடிய‌ […]

உங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால்...

Read More »

விரும்பிய ஒலியில் பாட்டு கேட்க

இந்த தளம் நிச்சயம் இசை பிரியர்களுக்கு பட்டுமானது. அதிலும் ஒலி அமைப்பில் கவனம் செலுத்துவர்களுக்கானது. பாடல்களின் சுவையே அதன் ஒலியில் தான் அடங்கியுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களினால் சில பாடல்களின் ஒலிநயம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அது பழைய பாடல்களாக இருக்கலாம்.அல்லது மோசமான முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் ஒலி அமைப்பு சரியாக இல்லாத பாடல்களை விலவுட் தளத்தில் சம்ர்பித்தால் அவற்றை ஒலி மிக்கதாக மாற்றித்தந்து விடுகிறது இந்த தளம். எந்த‌ பாட‌லையும் அதிக‌ ஒலி மிக்க‌தாக‌ […]

இந்த தளம் நிச்சயம் இசை பிரியர்களுக்கு பட்டுமானது. அதிலும் ஒலி அமைப்பில் கவனம் செலுத்துவர்களுக்கானது. பாடல்களின் சுவையே அ...

Read More »

சங்கடமான புகைப்படங்களின் தொகுப்பு

இண்டெர்நெட்டில் த‌டுக்கி விழுந்தால் அசாத‌ர‌ண‌மான‌ புகைப்ப‌ட‌ங்க‌ளின் தொகுப்புக‌ளை பார்க்க‌லாம்.வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளுக்கும் இத்த‌கைய‌ புகைப்ப‌டங்க‌ளுக்கு இணைப்பு கொடுப்ப‌திலும் தொகுப்பாக‌ வெளியிடுவ‌திலும் பெரும் ஆர்வ‌ம் இருக்கிற‌து.அப்ப‌டியே இ‍ மெயில் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு த‌ட்டி விடுவ‌தும் ப‌ல‌ருக்கு வாடிக்கையாக‌ உள்ள‌து. ஒரு ந‌ல்ல‌ புகைப்ப‌டத்தை ர‌சிப்ப‌து ம‌கிழ்ச்சிக்கு உரிய‌தாக‌வும் ப‌டிப்ப‌தைவிட‌ பார்த்து ர‌சிப்ப‌து சுல‌ப‌மாக‌ இருப்ப‌தாலும் புகைப்ப‌ட‌ங்க‌ளுக்கு எப்போதுமே அதிக‌ வ‌ர‌வேற்பு கிடைத்துவிடுகிற‌து. புகைப்படங்கள் பல வகைப்பட்டதாக இருக்கின்றன.ஒரு சில படங்கள் பார்த்ததும் மெலிதாக புன்னகைக்க வைக்கலாம். இன்னும் சில விழுந்து விழுந்து […]

இண்டெர்நெட்டில் த‌டுக்கி விழுந்தால் அசாத‌ர‌ண‌மான‌ புகைப்ப‌ட‌ங்க‌ளின் தொகுப்புக‌ளை பார்க்க‌லாம்.வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளுக்கும...

Read More »

பொன்மொழிகளுக்கான இணையதளம்.

செல்வாக்கிற்கும் மதிப்பிற்குமான வேறுபாடு என்ன தெரியுமா? செல்வாக்கு என்பது மற்றவர்கள் உங்களைப்பற்றி அறிந்திருப்பது .மதிப்பு என்பது உங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பது. இந்த கருத்து லூயிஸ் மெக்மாஸ்டர் என்பவர் கூறிய பொன்மொழியாகும். இப்படி பிரபலங்கள் கூறிய பொன்மொழிகளை அறிய விரும்பினால் திகோட்பிளாக் தளத்திற்கு விஜயம் செய்யலாம். ——— link; http://www.thequoteblog.com/

செல்வாக்கிற்கும் மதிப்பிற்குமான வேறுபாடு என்ன தெரியுமா? செல்வாக்கு என்பது மற்றவர்கள் உங்களைப்பற்றி அறிந்திருப்பது .மதிப்...

Read More »