Category: இணையதளம்

கல்வி கடன் பெற வழிகாட்டும் இணையதளம்

கல்விகடன் தொடர்பான தகவல்களை பெறவும், கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கவும் உதவும் இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் வழிகாட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வித்யாலக்‌ஷ்மி (https://www.vidyalakshmi.co.in) எனும் பெயரிலான இந்த இணையதளம் சுதந்திர தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை என்.எஸ்.டி.எல். இ-கவர்னன்ஸ் அமைப்பு நிறுவி பராமரிக்க உள்ளது.மாணவர்களின் கல்வி கடன் தேவை தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் அளிக்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படிப்பிற்காக கல்வி கடன் […]

கல்விகடன் தொடர்பான தகவல்களை பெறவும், கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கவும் உதவும் இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.மாணவ...

Read More »

உங்கள் லைசன்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்

உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள்ளூரில் செல்லுபடி ஆவது தவிர உலக நாடுகளில் வேறு எங்கெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது உங்களுக்குத்தெரியுமா? இது சுவாரஸ்யமான கேள்வி மட்டும் அல்ல; அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அந்த நாடுகளில் தங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் செல்லுபடியாகுமா? என தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி […]

உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள...

Read More »

இணையத்தை கலக்கும் எக்ஸ்குலிசிவ் இணையதளம்

ஒரு இணையதளத்தை பயன்படுத்திப்பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இணைய உலகை இப்போது கலக்கி கொண்டிருக்கும் மோஸ்ட் எக்ஸ்குலிசிவ் வெப்சைட் எனும் இணையதளத்தின் உள்ளே நுழையும் அனுமதிக்காக தான் இப்படி ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நீங்களும் அந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்க விரும்பினால் அதில் அனுமதி சீட்டு வாங்கி இணைய வரிசையில் நின்றாக வேண்டும். ஆச்சர்யமாக இருக்கலாம்.அப்படி அந்த இணையதளத்தில் என்ன பிரமாதமாக இருக்கிறது என்று வியப்புடன் கேட்கலாம். ஆனால் அந்த இணையதளத்தில் ஒன்றுமே கிடையாது […]

ஒரு இணையதளத்தை பயன்படுத்திப்பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இ...

Read More »

ரம்ஜான் நோண்புக்கு உதவும் கூகுள் இணையதளம்

உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் மாத நோண்பு தொடர்பான தகவல்களை எளிதாக பெறும் வகையில் கூகுள் ரம்ஜான் கம்பேனியன் எனும் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. முஸ்லீம்களுக்கு ரம்ஜான் மாதம் புனித மாதமாக அமைகிறது. இந்த மாதம் முழுவதும் அவர்கள் நோண்பு கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் முஸ்லீம்கள் சரியான நேரத்தில் நோண்பை கடைப்படித்து வருகின்றனர். இந்த புனித மாதத்தில் முஸ்லீம்களுக்கு உதவும் வகையில் கூகுள் ரம்ஜான் தொடர்பான இணையதளம் ஒன்றை அமைத்துள்ளது.ரம்ஜான் […]

உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் மாத நோண்பு தொடர்பான தகவல்களை எளிதாக பெறும் வகையில் கூகுள் ரம்ஜான் கம்பேனியன் என...

Read More »

புகைப்படம் மூலம் வயதை கணிக்கும் இணையதளம்

புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச்சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து ,வைரலாக பரவி இணையத்தின் மிகவும் பிரபலமான இணையதளமாகி இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் ஹவ் ஓல்டு.நெட் எனும் பெயரில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. மனித முகங்களை கண்டுணறக்கூடிய பேசியல் ரிகக்னேஷன் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தின் பின்னே உள்ள நுட்பம் மனித முகத்தை பார்த்து,புரிந்து கொண்டு அவர்களின் பாலினம் மற்றும் வயதை சரியாக கணித்து சொல்லக்கூடியது. சரியாக […]

புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச்சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து ,வைரலாக பரவி இணையத்தின் மி...

Read More »