Category: இணையதளம்

யூடியூப் வீடியோவை இப்படியும் பயன்படுத்தலாம்.

யூடியூப் வீடியோக்களை எத்தனையோ வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.அது அவரவரது தேவையையும் விருப்பத்தையும் பொருத்தது. யூடியூப்பில் பாட்டு கேட்கலாம்.படம் பார்க்கலாம்.காமெடி வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம்.செய்முறை காட்சிகளை கண்டு கற்கலாம். ஆனால் யூடியூப் வீடியோக்களுக்கு இன்னும் ஒரு சுவாரஸ்யமான பயன்பாடும் இருப்பது பலரும் அறியாதது. பலரும் என்ன பெரும்பாலானோர் அறியாதது. இப்படியும் யூடியூப் வீடியோவை பயன்படுத்தலாமா என் வியப்பை ஏற்படுத்தும் அந்த வழியை லேப்னால் தளத்தில் அமீத் அகர்வால் அறிமுகம் செய்திருக்கிறார்.அந்த வழி உச்சரிக்க கடினமான சொற்களின் சரியான உச்சரிப்பை அறிந்து […]

யூடியூப் வீடியோக்களை எத்தனையோ வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.அது அவரவரது தேவையையும் விருப்பத்தையும் பொருத்தது. யூடியூப்...

Read More »

புகைப்படங்களை எளிதாக எடிட் செய்ய உதவும் இணையதளம்.

போட்டோஷாப் அறிந்தவர்களுக்கு புகைப்படங்களை எடிட் செய்வதெல்லாம் ஒரு விஷ‌யமே அல்ல. புகைப்படங்களில் திருத்தங்களை செய்வதையோ,பின்னணியை மாற்றுவதையோ சுலபமாக செய்து விடுவார்கள்.உங்களுக்கு போட்டோஷாப் தெரியாவிட்டாலும் இது போன்ற சில டிஜிட்டல் மாயாஜாலங்களை நீங்களும் செய்து பார்க்கலாம். இதற்காக என்றே உள்ள இணையதளங்களில் கிளிப்பிங்மேஜிக் புகைப்படங்களில் உள்ள பின்னணியை நீக்க உதவுகிறது. சில நேரங்களில் குறிப்பிட்ட புகைப்படத்தை அதன் பின்னணி இல்லாமல் பயன்படுத்தும் தேவையும் விருப்பமும் ஏற்படலாம்.அது போன்ற நேரங்களில் கிளிப்பிங்மேஜிக் தளத்திற்கு விஜயம் செய்தால் போதும் ஒரு சில […]

போட்டோஷாப் அறிந்தவர்களுக்கு புகைப்படங்களை எடிட் செய்வதெல்லாம் ஒரு விஷ‌யமே அல்ல. புகைப்படங்களில் திருத்தங்களை செய்வதையோ,ப...

Read More »

அமேசானில் பொருட்களை வாங்க உதவும் இணையதளம்.

இகாமர்ஸ் தளமான அமேசானில் நேரடியாகவே பொருட்களை வாங்கலாம். அப்படியிருக்க,இதற்கு உதவுவதற்காக தனியே ஒரு இணையதளம் தேவையா என்று கேட்கலாம். என்ன செய்ய அமேசான் இகாமர்ஸ் ஆலமரமாக வளார்ந்து நிற்கிறது.அதனால் தான் வழிகாட்டி தளங்கள் தேவைப்படுகின்றன.புத்தக‌ விற்பனை தளமாக துவங்கி அமேசான் இன்று விற்பனை செய்யாத பொருட்கள் இல்லை என்று சொல்லிவிடலாம்.அதன் முகப்பு பக்கத்தை பார்த்தாலே இது தெரியும். டிஜிட்டல் காமிராவில் துவங்கி,செல்போன்கள்,டேப்லெட் கம்ப்யூட்டர்கள்,ஆடைகள் என சகல விதமான பொருட்களையும் வாங்கலாம்.ஆனால் விஷயம் அதுவல்ல, அமேசானில் அசத்தலான‌ பொருட்களையும் […]

இகாமர்ஸ் தளமான அமேசானில் நேரடியாகவே பொருட்களை வாங்கலாம். அப்படியிருக்க,இதற்கு உதவுவதற்காக தனியே ஒரு இணையதளம் தேவையா என்ற...

Read More »

கதை கேளு! கதை கேளு!.

கதை கேட்பது என்பது உற்சாகமான விஷயம் தான். குழந்தையாக இருக்கும் போது தாத்தா பாட்டியும் ,அப்பா அம்மாவும் கதை சொல்வதை கேட்டு ரசித்திருக்கிறோம். பெரியவர்கள் சொல்லும் கதை கேட்பது சுவாரஸ்யமானது என்றால் அதை விட ஜாலியானது நாமே கதை புத்தகங்களை படித்து மகிழ்வது.   சிறுவர்களுக்கான கதை புத்தகங்களும் பத்திரிகைகளும் இருக்கின்றன. அதே போல ஆன்லைனிலும் கூட கதைகளை படித்து ரசிக்கலாம். இதற்கென்றே நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன.   முதலில் உங்களுக்கான நூலகத்தில் நுழையலாம் வாருங்கள். […]

கதை கேட்பது என்பது உற்சாகமான விஷயம் தான். குழந்தையாக இருக்கும் போது தாத்தா பாட்டியும் ,அப்பா அம்மாவும் கதை சொல்வதை கேட்ட...

Read More »

நிதியுதவி அளிக்க அழைக்கும் இணையதளம்.

இணையதளங்களில் நன்கொடை தளங்கள் என்று ஒரு வகை இருக்கிறது.நன்கொடை அளிப்பதை ஊக்குவிப்பதையும் அதற்கான வ‌ழியையும் ஏற்படுத்தி தருவது தான் இந்த தளங்களின் நோக்கம். அதாவது, தளத்திற்கு வந்தோமா,உதவுவதற்கான காரணத்தை தேர்வு செய்தோமா,ஒரு சில அல்ல சில நூறு டாலர்களை தந்தோமா( இந்த தளங்கள் பெரும்பாலும் சர்வதேச நோக்கிலானவ),நல்லதொரு காரியத்திற்கு நம்மால் இயன்ற உதவியை செய்தோமா என்று நடையை கட்டும் வகையில் உருவாக்கப்பட்ட தளங்கள் இவை. இந்த தளங்களின் சிறப்பம்சம்,நன்கொடை அளிக்கும் போது ஏற்படக்கூடிய குழப்பங்களையும் தயக்கங்களையும் சந்தேகங்களையும் […]

இணையதளங்களில் நன்கொடை தளங்கள் என்று ஒரு வகை இருக்கிறது.நன்கொடை அளிப்பதை ஊக்குவிப்பதையும் அதற்கான வ‌ழியையும் ஏற்படுத்தி த...

Read More »