Category: இணையதளம்

நேரம் நல்ல நேரம்

நேரம் தொடர்பான சில சுவாரஸ்யமான இணையதளங்களை பார்க்கலாம். முதலில் டைம்.இஸ் – https://time.is/ இப்போது நேரம் என்ன என்பதை இந்த தளத்தில் நுழைந்ததுமே தெரிந்து கொள்ளலாம். பயனாளியின் இருப்பிடம் அடிப்படையில், தற்போதைய நேரத்தை பெரிய எழுத்துகளில் தோன்றுவதோடு, உங்கள் கம்ப்யூட்டரில் காட்டப்படும் நேரத்திற்கும், தற்போதைய நேரத்திற்குமான வேறுபாடும் சுட்டிக்காட்டப்படுகிறது. அப்படியே இன்றைய தேதி, மாதம், கிழமை உள்ளிட்ட விவரங்களோடு, முக்கிய நகரங்களில் இப்போதைய நேரமும் சுட்டிக்காட்டப்படுகிறது. கொஞ்சம் கீழே வந்தால், உலக நகரங்களின் பெயர்கள் வரிசையாக சிதறிக்கிடக்கின்றன. […]

நேரம் தொடர்பான சில சுவாரஸ்யமான இணையதளங்களை பார்க்கலாம். முதலில் டைம்.இஸ் – https://time.is/ இப்போது நேரம் என்ன என்...

Read More »

உதவி பாலம் அமைக்கும் இணையதளம்

கொரோனா ஏற்கனவே பொருளாதாரத்தை பதம் பார்த்து பணியிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கைவசம் சேமிப்பு இல்லாதவர்கள் அல்லது இருக்கும் சேமிப்பை கரைந்து விட்டவர்கள் நிலை மிகவும் கடினம் தான். உலகில் பல நாடுகளில் இது தான் நிலை. அமெரிக்காவில், இப்படி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்களில் ஒன்று ’1 கே பிராஜெக்ட்’ – (https://www.1kproject.org/ ). கொரோனா பாதிப்பால் பணியிழப்பு அல்லது ஊதியம் குறைப்பு போன்றவற்றுக்கு உள்ளாகி உடனடியாக பொருளாதார உதவி தேவைப்படும் குடும்பங்களை கண்டறிந்து, பணம் அளிக்க […]

கொரோனா ஏற்கனவே பொருளாதாரத்தை பதம் பார்த்து பணியிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கைவசம் சேமிப்பு இல்லாதவர்கள் அல்லது இருக...

Read More »

உயிர் காக்க உதவி

நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களின் பட்டியலில் ஐபிக்ஸிட் (https://www.ifixit.com/) தளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக வெளியாகும் ஸ்மார்ட்போன்களை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து காட்சி விளக்கம் அளிக்கும் ’டியர்டவுன்’களுக்கு பெயர் பெற்ற இந்த தளம், தொழில்நுட்ப சாதனங்களை பயனாளிகளே பழுது பார்க்க வழி செய்யும் கையேடுகளை தொகுத்தளிக்கிறது. ஸ்மார்ட்போனில் இருந்து லேப்டாப் வரை பல்வேறு சாதனங்களை பழுது பார்த்துக்கொள்ள வழி காட்டும் ஐபிக்ஸிட் தளம், தொழில்நுட்ப பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. பழுது பார்ப்பது எங்கள் உரிமை […]

நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களின் பட்டியலில் ஐபிக்ஸிட் (https://www.ifixit.com/) தளத்தையும் சேர்த்துக்க...

Read More »

மே தின இணையதளம்

இன்று உழைப்பாளர் தினம். தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான மையமான சி.ஐ.டி.யூ. அமைப்பின் இணையதளத்தை பார்க்கலாம். http://citucentre.org/ கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் சவாலான சூழலில், வேலையிழப்பு எனும் வார்த்தையை அதன் எடை தெரியாமல் பலரும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், முன் எப்போதையும் விட இப்போது தான் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் தேவை உணரப்படும் சூழலில், இந்த இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்வது பொருத்தமாகவே இருக்கும். சி.ஐ.டி.யூ இணையதளம் எளிமையான […]

இன்று உழைப்பாளர் தினம். தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான மையமான சி.ஐ.டி.யூ. அமைப்பின் இணைய...

Read More »

ஜூமுக்கு மாற்றாக ஒரு இந்திய சேவை

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் செயலிக்கான மாற்று வீடியோ சந்திப்பு சேவைகளை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஆப்பிளின் பேஸ்டைம், கூகுள் மீட், புளு ஜீன்ஸ், ஸ்கைப், ஜிட்ஸி என பல்வேறு சேவைகள் இருக்கின்றன. இந்த பட்டியலில் இப்போது இந்திய சேவை ஒன்றும் சேர்ந்திருக்கிறது. சே நமஸ்தே எனும் பெயரில் இந்த சேவை அண்மையில் அறிமுகம் ஆகியுள்ளது. மேலும் அறிய, இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்… https://tinyletter.com/cybersimman

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் செயலிக்கான மாற்று வீடியோ சந்திப்பு சேவைகளை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், மைக்ரோசாப்ட் டீம...

Read More »