Category: இணைய செய்திகள்

விக்கிபீடியாவின் சாதனை

மேரி எரிக்சனை உங்களுக்குத்தெரியுமா?நார்வே நாட்டைச்சேர்ந்த நடிகை அவர்.நார்வேயில் நன்கறிந்தவர் .மற்றபடி உலகப்புகழ் பெற்றவர் என்றெல்லாம் சொல்லமுடியாது.ஒலிம்பிக் வீராங்கனை ஒருவரின் பேத்தி உலக‌ப்போரின் போது விமானம் ஓட்டியவரின் மகள் எனப‌து அவரைப்பற்றிய கூடுதல் தகவல்கள். இருந்தாலும் இதற்காகவெல்லாம் அவரை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.அவர் இண்டெர்நெட் சரித்திரத்ததில் இடம் பெற்றிருக்கிறார். எப்படி என்றால் வீக்கிபிடியாவில் அவரைப்பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளதன் மூலம் அவர் இண்டெர்நெட் சரித்திரத்திலும் இடம் பிடித்துள்ளார். விக்கிபீடியாவில் இட‌ம்பெறுவ‌து என்ப‌து பெரிய‌ விஷ‌ய‌ம‌ல்ல‌. […]

மேரி எரிக்சனை உங்களுக்குத்தெரியுமா?நார்வே நாட்டைச்சேர்ந்த நடிகை அவர்.நார்வேயில் நன்கறிந்தவர் .மற்றபடி உலகப்புகழ் பெற்றவர...

Read More »

ஒட்டகச்சிவிங்கி வரைய வாருங்கள்

உங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி வரையத்தெரியுமா? அழ‌காக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது. வரையும் திறமையை விட ஆர்வம் இருந்தால் போதும்.அந்த‌ ஆர்வ‌ம் இருந்தால் உட‌ன‌டியாக‌ ஒரு ஒட்டகச்சிவிங்கியை வ‌ரையுங்க‌ள். வ‌ரைந்த‌தும் ஒன்மில்லியன் கிராபே என்னும் இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள். காரணம் இந்த தள‌ம் இப்படி 10 லட்சம் ஒட்டகச்சிவிங்கி ஒவியங்களை சேகரிப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது.அந்த‌ ப‌த்து ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளில் உங்க‌ள் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றாக‌ இருக்கும். எதற்கு இந்த வேலை என்று கேட்கலாம். இந்த‌ த‌ள‌த்தின் நோக்க‌ம் மிக‌வும் […]

உங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி வரையத்தெரியுமா? அழ‌காக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது. வரை...

Read More »

உலகைவிட பெரியது இண்டெர்நெட்

இண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் இண்டெர்நெட் உண்மையில் எத்தனை பெரியது என எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? இண்டெர்நெட் நாம் நினைக்ககூடியதை எல்லாம்விட பெரியதாக இருக்கிறது.உலகைவிட பெரியது என வைத்துக்கொள்ளுங்க‌ளேன். எப்படி? இண்டெர்நெட்டை அளவிடுவதற்கு உள்ள வழி இணையதளங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதாகும். அதற்கு தேடியந்திரங்கள் இருக்கவே இருக்கிறது. தேடப்படும் தகவல்களை உடனே எடுத்து தருவதற்காக கூகுல் போன்ற தேடியந்திரங்கள் இணைய உலகில் உருவாக்கப்படும் இணையதளங்களை எல்லாம் […]

இண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர...

Read More »

உங்கள் ‘பிசி’யை நீங்களே அசெம்பிள் செய்து கொள்ளலாம்.

க‌ம்ப்யூட்ட‌ர் என்று வ‌ரும் போது பிர‌ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் பிராண்ட‌ட் தாயாரிப்பு தான் வேண்டும் என‌ ப‌ல‌ரும் நினைப்ப‌தில்லை.அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட‌ரே போதும் என‌ ப‌ல‌ரும் திருப்திப‌ட்டுக்கொள்கின்ற‌ன‌ர். அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட‌ர்க‌ள் விலை குறைவாக‌ இருக்கும் என்ப‌தோடு ந‌ம்ப‌க‌மான‌தாக‌வும் இருக்கிற‌து.தெரிந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌து ந‌ண்ப‌ர்க‌ள் மூலமே வாங்க‌ப்ப‌டுவ‌தால் க‌ம்ப்யூட்ட‌ரில் பிர‌ச்ச‌னை என்றால் விற்ப‌னை செய்த‌ ந‌ப‌ரே வ‌ந்து ப‌ழுது பார்த்து த‌ரும் வாய்ப்பு அதிக‌ம் உள்ள‌து. பெரிய‌ நிறுவ‌ன‌ த‌யாரிப்பை வாங்கிவிட்டு ச‌ர்வீசுக்கு அலைவதைவிட‌ இது சிற‌ந்த‌து. நிற்க‌ அசெம்பிள் […]

க‌ம்ப்யூட்ட‌ர் என்று வ‌ரும் போது பிர‌ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் பிராண்ட‌ட் தாயாரிப்பு தான் வேண்டும் என‌ ப‌ல‌ரும் நினைப்ப‌தில்...

Read More »

பேஸ்புக்கால் வந்த காதல்

இண்டெர்நெட் மூலம் இணைந்த நெஞ்சங்கள் பற்றி எத்தனையோ சுவையான கதைகள் இருக்கின்றன.அந்த வரிசையில் அமெரிக்க இளஞ்ஜோடி ஒன்று ஃபேஸ்புக் மூலம் சந்தித்து காதல் கொண்டிருக்கிறது. வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஃபேஸ்புக் தளத்தின் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொள்ளலாம். பழைய நண்பர்களையும் கண்டுபிடிக்கலாம். நிறைய சுவார்ஸ்யத்தையும் தொடர்புகளையும் தரக்கூடியது ஃபேஸ்புக். ஃபேஸ்புக்கை பயன்படுத்த துவங்கிவிட்டால் கிட்டத்தட்ட அதற்கு அடிமையாகிவிடுவோம்.எதையாவது தேடிக்கொண்டிருக்கத்தோன்றும். ஒரு சில‌ருக்கு ஃபேஸ்புக்கில் த‌ங்க‌ள் பெய‌ரில் யார் எல்லாம் இருக்கிறார்க‌ள் என்று தேடிப்பார்க்க‌த்தோன்றும்.அவ‌ர்க‌ள் யார், அவ‌ர்க‌ளின் […]

இண்டெர்நெட் மூலம் இணைந்த நெஞ்சங்கள் பற்றி எத்தனையோ சுவையான கதைகள் இருக்கின்றன.அந்த வரிசையில் அமெரிக்க இளஞ்ஜோடி ஒன்று ஃபே...

Read More »