Category: இணைய செய்திகள்

பேஸ்புக் தவிர நீங்கள் அறிய வேண்டிய சமூக வலைத்தளங்கள்!

நீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பேஸ்புக் முன்னணி சமூக வலைத்தளமாக இருக்கும் போது இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அநேகமாக உங்கள் இணைய காலைகள் பேஸ்புக்கிலேயே துவங்கலாம். அதன் பிறகு பேஸ்புக்கில் பதிவிடுவதும், பகிரவதும் கூட உங்கள் வேலைகளில் ஒன்றாக இருக்கலாம். பேஸ்புக் மூலம் ஆயிரக்கணக்கில் நண்பர்களை பெற்றிருக்கலாம். உங்கள் நிலைத்தகவல்களுக்கு லைக்குகளை அள்ளியிருக்கலாம். பேஸ்புக்கில் நீங்கள் கருத்துப்போராளியாக ஜொலித்திக்கொண்டிருக்கலாம். இன்னும் பலவிதங்களில் பேஸ்புகை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள், பேஸ்புக்கில் அதிக […]

நீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பேஸ்புக் முன்னணி சமூக வலைத்தளமாக இருக்கும் போது இதில் வி...

Read More »

பேஸ்புக் அனல்டிகா சர்ச்சை; உங்கள் தரவுகளை பாதுகாப்பது எப்படி?

பேஸ்புக் பயனாளிகளை பொருத்தவரை அதிக லைக்குகளை அள்ளுவதும், பதிவுகளை வைரலாக்குவதுமே இது வரை முக்கிய விஷயங்களாக இருந்து வந்திருக்கிறது. மற்றபடி பேஸ்ப்புக்கில் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்றெல்லாம் பெரும்பாலானோர் அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால், அண்மையில் வெடித்துள்ள பேஸ்புக் அனல்டிகா சர்ச்சை காரணமாக பலருக்கும் இப்போது தங்கள் தகவல்களும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது எனும் உண்மை புரிந்திருக்கிறது. பேஸ்புக் போன்ற தளங்களில் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தரவுகளாக திரட்டப்பட்டு பலவிதமாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக தனியுரிமை […]

பேஸ்புக் பயனாளிகளை பொருத்தவரை அதிக லைக்குகளை அள்ளுவதும், பதிவுகளை வைரலாக்குவதுமே இது வரை முக்கிய விஷயங்களாக இருந்து வந்த...

Read More »

உங்கள் சார்பில் பதில் அளிக்க ஒரு அரட்டை மென்பொருள்

  சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, மோல்லி எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார். கேள்வி பதில் அளிக்கும் சேவையான இந்த செயலி பயனாளிகளுக்கான தனிப்பட்ட அரட்டை மென்பொருளாக விளங்க கூடியது என்பது தான் சுவாரஸ்யமானது. நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார். மெஸினா ஸ்டார்ட் அப் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். டிவிட்டர் சேவையின் ஆரம்பகால பயனாளிகளில் ஒருவரான மெஸினா, இணைய உலகில் குறிப்பிட்ட பதிவுகளை அடையாளம் காண்பதற்கான […]

  சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, மோல்லி எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்...

Read More »

டெக் அகராதி-3 பயோ மிமிகிரி (Bio-mimicry ); இயற்கையை நகலெடுத்தல்

மிமிக்ரி எல்லோருக்கும் தெரியும். பயோ-மிமிக்ரி என ஒரு சங்கதி அறிவியல் உலகில் பிரபலமாக இருக்கிறது தெரியுமா? புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தீர்வுகளை உருவாக்குவதற்கும் இயற்கையை நகலெடுப்பதை தான் இப்படி சொல்கின்றனர். அதாவது இயற்கையில் உள்ள அமைப்புகளையும், முறைகளையும் ஊக்கமாக கொண்டு புதிய சேவைகளை உருவாக்குவது என பொருள். இயற்கை தான் எல்லாம் என்பது தான் இதன் பின்னே உள்ள நம்பிக்கை. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டது. மனித குலம் பல மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது. ஆனாலும் கூட, […]

மிமிக்ரி எல்லோருக்கும் தெரியும். பயோ-மிமிக்ரி என ஒரு சங்கதி அறிவியல் உலகில் பிரபலமாக இருக்கிறது தெரியுமா? புதிய கண்டுபிட...

Read More »

இணைய மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழி

இணையம் மூலம் பலவிதமான மோசடி வலை விரிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய மோசடி வலையில் சிக்கி ஏமாந்தவர்களின் கதைகளையும் நீங்கள் கேட்டிருக்கலாம். இணைய மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கான அடிப்படையாக சொல்லப்படும் எச்சரிக்கை வழிமுறைகளையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய விழிப்புணர்வு அவசியம் தான். ஆனால் இணைய மோசடிகளை கண்டறிவதில் போதுமான ஆற்றல் இருக்கிறது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? இந்த கேள்விக்கு நீங்கள் ஆம் என்று நம்பிக்கையுடன் பதில் சொன்னாலும் சரி, இல்லை எனத்தயக்கமாக உங்கள் நிலையை […]

இணையம் மூலம் பலவிதமான மோசடி வலை விரிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய மோசடி வலையில் சிக்கி ஏமாந்தவர்களின் கத...

Read More »