Category: இணைய செய்திகள்

வீடியோவோடு வாருங்கள்;அழைக்கிறது விக்கிபீடியா

இணையவாசிகளின் பங்களிப்பால் உருவானது,உலகின் மிகப்பெரிய இணைய களஞ்சியம் என்றெல்லாம் எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் விக்கிபீடியாவில் மிகப்பெரிய குறை உண்டு.அந்த குறையை களையும் முயற்சியில் விக்கிபீடியா இப்போது இறங்கியுள்ளது. விக்கிபீடியாவின் குறை என்றதுமே தகவல்களின் நம்பகத்தன்மையின்மை என்று நிபுணர்கள் சொல்வதை நினைத்துக்கொள்ள வேண்டாம்.இணையவாசிகளே தகவல்களை இடம்பெற வைப்பதும்,இணையவாசிகளே அவற்றை திருத்த அனுமதிப்பதாலும் வழக்கமான கலைகளஞ்சியத்தின் நம்பகத்தன்மை விக்கிபீடியாவில் கிடையாது என்று சொல்லப்படுவதுண்டு. இதில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும் விக்கிபீடியாவின் பலமும் பலவீனமும் இணையவாசிகளின் பங்களிப்பே என்பதால் இந்த […]

இணையவாசிகளின் பங்களிப்பால் உருவானது,உலகின் மிகப்பெரிய இணைய களஞ்சியம் என்றெல்லாம் எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் விக்கிபீ...

Read More »

ஆபத்தில் உதவிய டிவிட்டர்

டிவிட்டர் சேவையை சுயபுராணத்துக்கான சாதனம் என்றோ பயனற்ற தகவல் பகிர்விற்கான வாகனம் என்றோ அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம்.டிவிட்டர் அவற்றையெல்லாம் தாண்டி பயன் மிக்கது. டிவிட்டர் எத்தனையோ விதங்களில் பயன்படும்.இவ்வளவு ஏன் ஆபத்து காலத்தில் உயிர் காக்கும் உதவி தேடிவரவும் டிவிட்டர் கைகொடுக்கும். அமெரிக்காவில் இப்படி தான் வனப்பகுதி ஒன்றில் விபத்துக்குள்ளான வீராங்கனையின் உயிர் காக்க டிவிட்டர் உதவியிருக்கிறது. லே பாஸினா என்பது அவரது பெயர்.டிரயதலான் என்று சொல்லப்படும் விளையாட்டில் ஆர்வம் மிக்க வீரங்கனையான அவர் பிலடல்பியா நகரைச்சேர்ந்தவர்.சமீபத்தில் […]

டிவிட்டர் சேவையை சுயபுராணத்துக்கான சாதனம் என்றோ பயனற்ற தகவல் பகிர்விற்கான வாகனம் என்றோ அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம்.ட...

Read More »

டிவிட்ட‌ர் முக‌வ‌ரியோடு பிற‌ந்த‌ குழ‌ந்தை.

ஞானக்குழந்தை என்று சொல்வதை போல இனாயத்தை டிவிட்டர் குழந்தை என்று வர்ணிக்கலாம்.அதாவது பிற‌ந்தவுடனேயே டிவிட்டர் செய்யத்துவங்கியிருக்கும் குழந்தை. ஆம் சமீபத்தில் தான் உலகில் அடியெடுத்து வைத்துள்ள இனாயத்திற்கு என தனியே டிவிட்டர் பக்கம் இருக்கிறது.அதன் மூலம் இனாயத் டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறாள். பிறந்த குழந்தை டிவிட்டர் செய்வது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்?இனாயத்திற்கு கிடைத்தது போல ஒரு டிவிட்டர் அம்மா இருந்தால் இது சாத்தியமே.அதாவது அம்மா டிவிட்டர் செய்பவராக இருந்தால் தனக்கு குழந்தை பிறந்ததுமே அதன் […]

ஞானக்குழந்தை என்று சொல்வதை போல இனாயத்தை டிவிட்டர் குழந்தை என்று வர்ணிக்கலாம்.அதாவது பிற‌ந்தவுடனேயே டிவிட்டர் செய்யத்துவங...

Read More »

யூடியூப் வீடியோக்களை சேர்த்து வைப்பதற்கான இணையதளம்.

ஆற‌ அம‌ர‌ இணைய‌த்தில் உலா வ‌ருவ‌தென்ப‌து வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்கு நடுவே அவசர கதியில் தான் இணையத்தில் உலாவ நேர்கிறது.அதிலும் பலர் அலுவலக நேரத்தில் தான் இண்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களாகவும் இருப்பதால் அரக்க பரக்க சமைக்கும் இல்லத்தலைவியைப்போல தான் இணையதளங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. சிலருக்கு இண்டெர்நெட்டில் உலாவுவதே வேலையாகவும் அமையலாம்.அவர்களும் கூட வேலைக்கு நடுவே தங்களுக்கு பிடித்தமான தளங்களை போகிற போக்கில் தான் மேய வேண்டும். இந்த பீடிகை எதற்காக என்றால் […]

ஆற‌ அம‌ர‌ இணைய‌த்தில் உலா வ‌ருவ‌தென்ப‌து வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்க...

Read More »

மார‌டைப்பை டிவிட்ட‌ர் செய்த‌ ம‌னித‌ர்

டிவிட்டரின் பலமே அதன் உடனடி தன்மை தான்.காலையில் டிபன் சாப்பிட்ட‌தையோ,அல்லது நாளிதழில் படித்ததையோ டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.சிலருக்கு எதையுமே உடனுக்குடன் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு விட வேண்டும் என்று கையும் மனதும் பரபர‌க்கும். எல்லாம் சரி மாரடைப்பு ஏற்படும் போது யாருக்காவது டிவிட்டரை நினைத்துப்பார்க்கத்தோன்றுமா? அமெரிக்காவைச்சேர்ந்த டாமி கிறிஸ்டோபர் என்பவர் சமீபத்தில் மார்டைப்பால் பாதிக்கப்பட்ட போது அந்த அனுபவத்தை அப்படியே டிவிட்டரில் பதிவு செய்து வியக்க வைத்திருக்கிறார். திரும‌ண‌ மேடையில் இருந்து டிவிட்ட‌ர் செய்த‌வ‌ர்க‌ள் எல்லாம் இருக்கின்ர‌ன‌ர்.விமான‌ […]

டிவிட்டரின் பலமே அதன் உடனடி தன்மை தான்.காலையில் டிபன் சாப்பிட்ட‌தையோ,அல்லது நாளிதழில் படித்ததையோ டிவிட்டரில் பகிர்ந்து க...

Read More »