Category: தேடல்

கூகுளையா சிறந்த தேடியந்திரம் என்கிறீர்கள்?

கூகுள் சிறந்த தேடியந்திரமா? இந்த கேள்விக்கு பெரும்பலானோர், ஆம் அதிலென்ன சந்தேகம், கூகுள் தான் சிறந்த தேடியந்திரம் என பதில் அளிக்கலாம். ஒருவிதத்தில், இந்த பதிலும் சரியானது தான். கூகுள் சிறந்த தேடல் அனுபவத்தை தருகிறது. இணையத்தில் எதை தேடினாலும் உடனடியாக பொருத்தமான பதிலை அளிக்கிறது. உண்மையிலேயே கூகுள் எதை தேடினாலும், அதற்கான பதிலை அளிகிறதா? தேடல் சேவையாக கூகுள் பயனளிக்காத தருணங்கள் பல இருக்கின்றன. இவற்றை நாம் உணர்வதில்லை. கூகுளில் கிடைக்கவில்லையா? எனில் இணையத்தில் இல்லை […]

கூகுள் சிறந்த தேடியந்திரமா? இந்த கேள்விக்கு பெரும்பலானோர், ஆம் அதிலென்ன சந்தேகம், கூகுள் தான் சிறந்த தேடியந்திரம் என பதி...

Read More »

இது மரம் வளர்க்கும் தேடியந்திரம்!

இகோஷியா தேடியந்திரம் புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. மாற்று தேடியந்திரங்கள் பற்றி அறிந்தவர்கள், இதென்ன கேள்விபட்டிராத புதிய தேடியந்திரமாக இருக்கிறதே என குழப்பம் அடைய மாட்டார்கள். மற்றவர்களுக்காக இகோஷியா பற்றி சுருக்கமான அறிமுகம்: இது சுற்றுச்சூழல் நலனில் அக்கரை கொண்ட மரம் வளர்க்கும் தேடியந்திரம். கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள் தேடல் சேவையை வழங்குவதன் கோடிக்கணக்கில் வருவாயை குவிக்கின்றன. தேடல் முடிவுகள் தொடர்பான விளம்பரங்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.  பசுமை நோக்கம் கொண்ட இகோஷியா தேடியந்திரம் விளம்பரங்கள் மூலம் […]

இகோஷியா தேடியந்திரம் புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. மாற்று தேடியந்திரங்கள் பற்றி அறிந்தவர்கள், இதென்ன கேள்விபட்டிராத ப...

Read More »

புகைப்பட தேடியந்திரம் ’பிக்சர்ச்’

இணையத்தில் படங்களை தேடுவது என்று வரும் போது, பிக்சர்ச்சை (picsearch.com) தான் முன்னணி தேடியந்திரம் என்று சொல்ல வேண்டும். தகவல்களை மட்டும் அல்ல, படங்களை தேடவும் கூகுளுக்கு பழகியவர்களுக்கு இது ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. ஏனெனில், உருவப்படங்களை தேடும் நுட்பத்தை பொருத்தவரை பிக்சர்ச் முன்னோடி தேடியந்திரமாக விளங்குகிறது. புத்தாயிரமாண்டில் செயல்படத்துவங்கிய இந்த தேடியந்திரம் ஸ்வீடன் நாட்டில் உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய இதே காலத்தில் தான் கூகுள் தேடியந்திரமும் தன் பங்கிற்கு உருவப்படங்களை தேடும் […]

இணையத்தில் படங்களை தேடுவது என்று வரும் போது, பிக்சர்ச்சை (picsearch.com) தான் முன்னணி தேடியந்திரம் என்று சொல்ல வேண்டும்....

Read More »

இணையத்தில், கொரோனா தகவல்களை தேடுவது எப்படி?

மாற்று தேடியந்திரமான டக்டக்கோ பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகிறேன். கூகுள் போல விளம்பர வலை விரிக்காமல், பயனாளிகளின் தனியுரிமையை (பிரைவசி) மதிக்கும் தேடியந்திரமாக டக்டக்கோ இருப்பதே இதற்கு காரணம். இப்போது, கொரோனா அலைக்கு நடுவே, டக்டகோ செயல்பாடு எப்படி இருக்கிறது என பார்க்கலாம். டக்டகோவுக்குள் நுழைந்து, கொரோனா தொடர்பான தகவல்களை தேடலாம் என்று பார்த்தால், முகப்பு பக்கத்திலேயே, கோவிட்-19 தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள், குறிப்புகளை நாடுங்கள் என தானாக வழிகாட்டுகிறது. கோவிட்-19 பக்கத்திற்கான இணைப்பில் […]

மாற்று தேடியந்திரமான டக்டக்கோ பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகிறேன். கூகுள் போல விளம்பர வலை விரிக்காமல்,...

Read More »

டக்டக்கோவுக்கு போட்டியாக புதிய தேடியந்திரம்

இந்தியர்கள் கூகுளுக்கும், பேஸ்புக்கிற்கும் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டவர்கள் போல மாற்று தேடியந்திரங்களையோ அல்லது மாற்று சமூக வலைப்பின்னல் சேவைகளையோ கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது என தெரிவிப்பதில் எந்த பயனும் இல்லை. ஆனால் தமிழர்கள் காட்டக்கூடிய அலட்சியத்தை மீறி, ஒன்சர்ச் தேடியந்திரம் பற்றி அறிமுகம் செய்வது அவசியம் என்றே நினைக்கிறேன். ஏனெனில், வழக்கமாக புதிய தேடியந்திரங்கள் வர்ணிக்கப்படுவது போல, கூகுளுடன் ஒப்பிடப்படாமல் டக்டக்கோவுடன் இணைத்து ஒன்சர்ச் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது கவனிக்க […]

இந்தியர்கள் கூகுளுக்கும், பேஸ்புக்கிற்கும் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டவர்கள் போல மாற்று தேடியந்திரங்களையோ அல்லது ம...

Read More »