Category: இதர

கூகுளும், தமிழக தேர்தலும்- சில கேள்விகள்!

தமிழக தேர்தல் தொடர்பான உரையாடல்கள் பெரும்பாலும், சமூக ஊடகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சமூக ஊடகத்தில் பகிரப்படும் மீம்களும், குறும்பதிவுகளும், பதிவுகளுமே இதற்கான கருப்பொருளாக அமைகின்றன. இந்த பின்னணியில், கட்சிகளில் ஐடி குழுக்களும், வாக்குகளை குறி வைக்கும் நோக்கத்தோடு களமாடிக்கொண்டிருக்கின்றன. எனினும், தேர்தல் களம் தொடர்பான நிதர்சனத்தை உணர்த்த சமூக ஊடகங்கள் சரியான தளமாக இருக்குமா என்பது தெரியவில்லை. அதைவிட முக்கியமான விஷயம்,பெரும்பலானோர் தேர்தல் சார்ந்த உரையாடலில் சமூக ஊடகங்களை கவனிக்கும் அளவுக்கு தேடியந்திரமான கூகுளை கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது. […]

தமிழக தேர்தல் தொடர்பான உரையாடல்கள் பெரும்பாலும், சமூக ஊடகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சமூக ஊடகத்தில் பகிரப்படும்...

Read More »

டேவிட் போவியும், தியோடர் பாஸ்கரனும்!

தமிழ் சூழலில், முதலில் ’டேவிட் போவி’ (David Bowie ) யார் என்பதை அறிமுகம் செய்தாக வேண்டும். பிரபலமான பாப் பாடகர் எனும் வழக்கமான அறிமுகத்தை கடந்து, ரசிகர்களின் ஆன்மாவுடன் கலந்து அவரது இசை பற்றி அழுத்தமாக எழுத வேண்டும். ஆனால், இந்த பதிவில் டேவிட் போவி பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில், போவியை முறையாக அறிமுகம் செய்வதற்காக அவரைப்பற்றி இப்போது தான் தேடித்தேடி படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னமும் அவரது இசை பக்கம் போகவில்லை. அவரது இசை பற்றி எழுத […]

தமிழ் சூழலில், முதலில் ’டேவிட் போவி’ (David Bowie ) யார் என்பதை அறிமுகம் செய்தாக வேண்டும். பிரபலமான பாப் பாடகர் எனும் வழ...

Read More »

விருது பெறும் பொய் தளம் !

பொய் செய்திகளை போல, போலியான இணையதளங்களிடமும் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். முக்கியமாக, போலி தளங்களை அவை பொய்யானவை என அடையாளம் காண வேண்டும். ஆனால், ஒரு விதிவிலக்காக கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பொய்யான இணையதளத்தை பாராட்டலாம். ஏனெனில், இந்த தளம் பெருந்தொற்றின் நிழலில் சிக்கித்தவித்த பெண்களுக்கு அபயம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டது தான். கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சுகாரதார பாதிப்பு, பொருளாதார பாதிப்பு எல்லாம் வெளிப்படையானவை. ஆனால், இந்த பெருந்தொற்று கண்ணுக்குத்தெரியாத பாதிப்புகளையும் உண்டாக்கியது. பெண்கள் […]

பொய் செய்திகளை போல, போலியான இணையதளங்களிடமும் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். முக்கியமாக, போலி தளங்களை அவை பொய்யானவை...

Read More »

தாத்தா, பாட்டிகளுக்கு உயிர் கொடுக்கும் இணையதளம்

உங்கள் பழைய புகைப்பட ஆல்பத்தில் இருக்கும் தாத்தா, பாட்டிகளின் கருப்பு வெள்ளை படத்தை கொண்டு, அவர்களை வீடியோவில் உயிர் பெற வைத்தால் எப்படி இருக்கும்? டீப்நாஸ்டால்ஜியா (https://www.myheritage.com/deep-nostalgia) இணையதளம் இதை தான் செய்து வியக்க வைக்கிறது. உங்கள் வசம் உள்ள கருப்பு வெள்ளை படத்தை இந்த தளத்தில் சமர்பித்தால், அந்த ஒற்றை படத்தை உயிரோட்டமான வீடியாவாக மாற்றிக்காட்டுகிறது. புகைப்படத்தில் இருப்பவர்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை உண்டாக்குகிறது. மறைந்து போனவர்களின் நினைவுகளில் இருப்பவர்கள், இந்த வீடியோ தோற்றத்தை […]

உங்கள் பழைய புகைப்பட ஆல்பத்தில் இருக்கும் தாத்தா, பாட்டிகளின் கருப்பு வெள்ளை படத்தை கொண்டு, அவர்களை வீடியோவில் உயிர் பெற...

Read More »

வாட்ஸ் அப் பற்றி அதிகம் அறியப்படாத தகவல்கள்

வாட்ஸ் அப் சேவை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொண்டாலும், தகவல் பரமாற்றத்திற்கு இணையவாசிகள் விரும்பி நாடும் மெசேஜிங் சேவையாக இருக்கிறது. வாட்ஸ் அப் இந்த அளவு விரும்பி பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் எளிமையான இடைமுகம். வாட்ஸ் அப்பில் உறுப்பினராக இணைவது முதல், உரையாடலை துவங்குவது, குழுக்களை அமைப்பது என எல்லாவற்றையும் எளிதாக மேற்கொள்ளலாம். இந்த பயன்பாட்டு அம்சமே வாட்ஸ் அப்பை முன்னணி மெசேஜிங் சேவையாக உயர்த்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிக அளவில் பயனாளிகளை வாட்ஸ் […]

வாட்ஸ் அப் சேவை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொண்டாலும், தகவல் பரமாற்றத்திற்கு இணையவாசிகள் விரும்பி நாடும் மெசேஜிங் சேவை...

Read More »