புத்தகங்களை தெரிந்து கொள்ள புதிய வழி

புதிதாக படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுனர்களின் பரிந்துரை என நீளும் இந்த வழிகளில் கொஞ்சம் சுவாரஸ்யமான புதிய வழியாக கவர்ஸ்பை தளம் அறிமுகமாகியுள்ளது. டம்ப்ளர் வலைப்பதிவு சேவையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் வாயிலாக புதிய புத்தகங்களை அவற்றின் முகப்பு பக்கங்களாக அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்த புத்தகங்கள் எல்லாம் எப்படி தேர்வு செய்யப்படுகின்றன தெரியுமா? எல்லாமே புத்தக புழுக்கள் பொது இடங்களில் கையில் […]

புதிதாக படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுனர்க...

Read More »

எளிமையான இணைய குறிப்பேடு

இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கென தனியே செயலிகளும் கூட உள்ளன. இருப்பினும், இணையத்தில் குறிப்பெடுக்க உதவும் நோட்பின் தளத்தை அதன் படு எளிமையான தன்மைக்காக முயன்று பார்க்கலாம். நோட்பின் தளத்தை பயன்படுத்து குறிப்புகளை எழுத, சேமிக்க, அதில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ளலாம். இதற்கு முகப்பு பக்கத்தில் மனதி உள்ள எண்ணங்களை டைப் செய்தாலே போதுமானது. முதலில் குறிப்பேட்டிற்கான ஒரு […]

இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கென தனியே செயலிகளும் கூட உள்ளன. இருப்பினும், இணையத்...

Read More »

ஜிப்களை உருவாக்க உதவும் கூகுள் தளம்

அலுப்பூட்டும் தகவல்களையும், தரவுகளையும் சுவாரஸ்யமான அசையும் படங்களாக மாற்றும் வகையிலான இணையதளத்தை தேடியந்திர நிறுவனமான கூகுள் அறிமுகம் செய்துள்ளது. டேட்டாஜிப்மேக்கர் வித் கூகுள் எனும் இந்த இணையதளம் மூலம் பலவகையான புள்ளிவிவரங்கள் சார்ந்த தகவல்களை ஜிவ் வடிவிலான அசையும் சித்திரங்களாக மாற்றித்தருகிறது. வாக்கெடுப்பு விவரங்கள், திரைப்பட ரேட்டிங் பட்டியல், விற்பனை விவரங்கள் போன்ற தகவல்களை இதன் மூலம் ஜிப் வடிவில் உருவகப்படுத்தலாம். பயனாளிகள் தங்கள் வசம் உள்ள தகவல்களை சமர்பித்து, அவற்றை ஒப்பிட வேண்டிய முறையையும் குறிப்பிட்டால் […]

அலுப்பூட்டும் தகவல்களையும், தரவுகளையும் சுவாரஸ்யமான அசையும் படங்களாக மாற்றும் வகையிலான இணையதளத்தை தேடியந்திர நிறுவனமான க...

Read More »

ஐரோப்பாவுக்கு ஒரு இணைய உலா!

  ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரம் மற்றும் உங்கள் வசதி சார்ந்தது. சில நாட்கள் முதல் ஓரிரு வாரங்கள் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளை சுற்றிப்பார்த்து விட்டு வரலாம். ஆனால் அப்போதும் கூட பல நாடுகளை தவறவிட வேண்டியிருக்கும். கால் வைத்த நாடுகளில் கூட, அடையாளத்திற்கு சில இடங்களை பார்க்கலாம் அவ்வளவு தான். ஆனால் இந்த அனுபவமே மறக்க முடியாததாக இருக்கும் என்பது வேறு விஷயம். […]

  ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரம் மற்றும் உங்கள் வசதி...

Read More »

இந்த தளம் இணைய இசை அகராதி

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக […]

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும...

Read More »