பேஸ்புக்கில் நீங்கள் கண்காணிக்கப்படுவது தெரியுமா?

நீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளி என்றால் ஸ்டாக்ஸ்கேன் இணையதளம் உங்களை லேசாக திகைப்பில் ஆழ்த்தும். பேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு பேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களை பொதுவெளியில் தோன்றும் வித்ததை தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும். ஸ்டாக்ஸ்கேன் தளம் அப்படி என்ன செய்கிறது என்றால், உங்கள் பேஸ்புக் பக்கத்தை வேறு யார் வேண்டுமானாலும் உளவு பார்ப்பது சாத்தியம் என்பதை புரிய வைக்கிறது. என் […]

நீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளி என்றால் ஸ்டாக்ஸ்கேன் இணையதளம் உங்களை லேசாக திகைப்பில் ஆழ்த்தும். பேஸ்புக் பயன்பாடு தொடர்பா...

Read More »

வெற்றி நூலகம்: லிங்க்டுஇன் தொடங்கிய தத்துவ மாணவர்

இணையவாசிகள் முழுக்க முழுக்க தொழில்முறையாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான இடமாக லிங்க்டுஇன் இருக்கிறது. வேலைவாய்ப்புக்குக் காத்திருக்கும் இளம் பட்டதாரிகளும், தங்கள் துறையில் முன்னேறத் துடிக்கும் பணியாளர்களும், வல்லுநர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வலைப்பின்னலாகவும் விளங்குகிறது. நிறுவன விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பிக்கும் பழைய முறைக்குப் பதிலாக, பயனாளிகள் தங்களுக்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் திறமைக்கேற்ற வாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது. தொடர்புகளின் அருமையை உணர்ந்தவர்! பயிற்சி மாணவர்களுக்கு அவர்களுடைய துறையில் வழிகாட்டும் வல்லுநர்களின் அறிமுகம் தேவையா? தற்போதைய வேலையிலிருந்து […]

இணையவாசிகள் முழுக்க முழுக்க தொழில்முறையாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான இடமாக லிங்க்டுஇன் இருக்கிறது. வேலைவாய்ப்ப...

Read More »

ஸ்னேப்சேட் சேவை ஒரு அறிமுகம்!

  பாலிவுட் பிரபலங்களின் ஸ்னேப்சேட் பயனர் பெயர் என்ன தெரியுமா? கேள்வி பதில் இணையதளமான குவோராவில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு பலர் ஆர்வத்துடன் பதில் அளித்துள்ளனர். அதன் படி பார்த்தால் நடிகர் ஹிருத்திக்கின் ஸ்னேப்சேட் பெயர் ஜஸ்ட் ஹிருத்திக் ( justhrithik ), நடிக்கை ஜாக்குலின் பெர்னாண்டசின் ஸ்னேப்சேட் பெயர் ஜாக்குலின் 143 ( jacqueen143) , நடிகை சோனாக்‌ஷி சின்காவின் பெயர் அலிசோனா (-asilsona). ரசிகர்கள், ஸ்னேப்சேட்டில் இவர்களை பின் தொடர விரும்பினால் இந்த பெயரை அடையாளமாக பயன்படுத்திக்கொள்ளலாம். […]

  பாலிவுட் பிரபலங்களின் ஸ்னேப்சேட் பயனர் பெயர் என்ன தெரியுமா? கேள்வி பதில் இணையதளமான குவோராவில் கேட்கப்பட்ட இந்த கே...

Read More »

உங்களுக்காக ஒரு இணையதளம்

இலக்குகளை அடைய உதவும் இணையதளங்களின் வரிசையில் புதிய தளமாக அறிமுகமாகி இருக்கும் டேபுக் தளம், பயனாளிகள் தாங்கள் செய்ய விரும்பும் பணிகளை தொடர்ந்து கடைபிடிப்பதற்கான ஊக்கம் அளிக்கும் வழியாக அமைந்துள்ளது. சுயமுன்னேற்றம் அல்லது மேம்பாட்டில் விருப்பம் உள்ளவர்கள் தாங்கள் செய்ய விரும்பும் செயல்களை குறித்து வைத்துக்கொண்டு அதை மறக்காமல் இருக்க விரும்புவார்கள். இதற்கு உதவும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது டேபுக்.கோ இணையதளம். இந்த தளத்தில் வரிசையாக செய்ய வேண்டிய செயல்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. படிக்க வேண்டிய புத்தகங்கள், […]

இலக்குகளை அடைய உதவும் இணையதளங்களின் வரிசையில் புதிய தளமாக அறிமுகமாகி இருக்கும் டேபுக் தளம், பயனாளிகள் தாங்கள் செய்ய விரு...

Read More »

ஒரு இளம் ஹேக்கரின் கதை!

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர் எனும் திருவிளையாடல் திரைப்பட வசனம் போல, இணைய உலகில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள் மட்டும் அல்ல, பணம் சம்பாதிக்கும் கில்லாடிகள் இருக்கின்றனர் தெரியுமா?. நல்லெண்ண ஹேக்கர்கள் தான் இந்த கில்லாடிகள். இணைய நிறுவனங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களில் மறைந்துள்ள குற்றம் குறைகளை கண்டுபிடித்து சொல்வது தான் இவர்களுடைய வேலை. அதாவது நிறுவன அமைப்புகளில் உள்ள புரோகிராமிங் ஓட்டைகளை (பக்ஸ்) கண்டுபிடித்து சொல்வது. இதற்காக நிறுவனங்கள் இவர்களுக்கு ரொக்கமாக பரிசளித்து ஊக்குவிக்கின்றன. […]

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர் எனும் திருவிளையாடல் திரைப்பட வசனம் போல, இணைய உலகில் குற்றம் கண்டுபிடித்தே பெ...

Read More »