மொழி மாதிரிகள் பொய் சொல்வதும், நடிப்பதும் ஏன்?

எல்.எல்.எம்., என பரவலாக குறிப்பிடப்படும் மொழி மாதிரிகள் குறித்த எனது புரிதலும், அறிதலுமானது, இந்த மாதிரிகளில் வியப்பதற்கோ, கொண்டாடுவதற்கோ ஒன்றுமில்லை என்பது தான். மொழி மாதிரிகள் ஒரு வாய்ப்பியல் கிளிப்பிள்ளைகள் எனும் எமிலி பெண்டர் கருத்தையே நானும் முன்மொழிய விரும்புகிறேன். (stochastic parrot) மொழி மாதிரிகளின் ஆக்கத்திறன், பொருள் இல்லா வார்த்தை கோர்வைகளை உருவாக்கித்தள்ளும் தன்மை கொண்டவை என்பதையும் ஆதரிக்கிறேன். (https://www.bullshitgenerator.com/) மொழி மாதிரிகள் அர்த்தமுள்ளதாக தோன்றும், பொருள் இல்லாத தொடர் வாக்கியங்களை அழகாக தயாரிக்கும் திறன் […]

எல்.எல்.எம்., என பரவலாக குறிப்பிடப்படும் மொழி மாதிரிகள் குறித்த எனது புரிதலும், அறிதலுமானது, இந்த மாதிரிகளில் வியப்பதற்க...

Read More »

ஆஸ்க் ஜீவ்ஸ் அளித்த நேரடி பதில்கள்

ஏஐ தேடியந்திர யுகத்தில், ஆஸ்க்ஜீவ்ஸ் சேவையை முன்னோடி தேடியந்திரம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் தேவை இருக்கிறது. ஏனெனில், கேள்வி பதில் அடிப்படையில் தேட வழி செய்த முதல் என்.எல்.பி., தேடியந்திரம் என்பது தவிர, பின்னாளில் ஆஸ்க்.காமாக மாறிய ஆஸ்க் ஜீவ்ஸ் பல முன்னோடி தேடல் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. உதாரணத்திற்கு, ஆஸ்க் ஜீவ்ஸ் அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஆன்சர் (Smart Answers ) வசதியை இப்போது திரும்பி பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. பயனாளிகள் தேடி வரும் பொருள் […]

ஏஐ தேடியந்திர யுகத்தில், ஆஸ்க்ஜீவ்ஸ் சேவையை முன்னோடி தேடியந்திரம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் தேவை இருக்கிறது. ஏ...

Read More »

தேவை மக்கள் நல அல்கோரிதம்

ஜேக் விட்டன் கேட்பது போன்ற அல்கோரிதமை எந்த ஒரு சமூக ஊடக நிறுவனமும் உருவாக்கப் போவதில்லை. உருவாக்க முடியாது என்றில்லை, உருவாக்க கூடாது என அவை நினைக்கலாம் என்பதே காரணம். ஏனெனில் சமூக ஊடக நிறுவனங்கள் ஒவ்வொன்றும், தங்கள் பயனாளிகளை கூண்டு கிளிகளாக்கி தக்க வைத்துக்கொள்ளும் நோக்கிலான அல்கோரிதம்களையே உருவாக்க விரும்புகின்றன. அப்படியிருக்க, பயனாளிகளிக்கு சுதந்திரம் அளிக்கும் மக்கள் நல அல்கோரிதமை அவை ஏன் உருவாக்கப்போகின்றன. பேஸ்புக்கோ, டிக்டாக்கோ அல்லது யூடியூபோ அதன் அல்கோரிதம்கள் எல்லாமே பயனாளிகளுக்கு […]

ஜேக் விட்டன் கேட்பது போன்ற அல்கோரிதமை எந்த ஒரு சமூக ஊடக நிறுவனமும் உருவாக்கப் போவதில்லை. உருவாக்க முடியாது என்றில்லை, உர...

Read More »

அறிவியல் தான் எனது மதம்- ’அடா’வின் முழக்கம்

சார்லெஸ் பாபேஜ் கம்ப்யூட்டர்களின் தந்தை என கருதப்படலாம். ஆனால் அவரது சகாவான அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமாக கருதப்படுகிறார். பாபேஜ் உருவாக்க உத்தேசித்த அனல்டிகல் இஞ்சின் எனப்படும் முன்னோட்ட கம்ப்யூட்டர் இயந்திரத்தின் மூலம் செயல்படுத்தக்கூடிய முதல் அல்கோரிதமை எழுதியவர் என்பதே அடா லவ்லேசின் சிறப்பு. அந்த வகையில் அடா லவ்லேஸ் முன்னோடி கம்ப்யூட்டர் பெண்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். கோடிங் உலகில் பெண்களுக்கான ஊக்கமாகவும், முன்னுதாரணமாகவும் கருதப்படுகிறார். கம்ப்யூட்டர் உலகில் அடா லவ்லேஸ் பங்களிப்பை நினைவு கூறும் […]

சார்லெஸ் பாபேஜ் கம்ப்யூட்டர்களின் தந்தை என கருதப்படலாம். ஆனால் அவரது சகாவான அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமாக கருதப்ப...

Read More »

கூகுள்- பெர்ப்லக்சிடி ஒரு ஒப்பீடு!

கூகுளுக்கு மாற்று என்று சொல்லப்படும் ஏஐ தேடியந்திரம் பெர்ப்ல்க்சிடி தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் சிறிய நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னைப்பொருத்தவரை இந்த நூல் சத்திய சோதனை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதில் நான் பெர்ப்லக்சிட்டி புகழ் பாடப்போவதில்லை. அதற்காக கூகுளுக்கு கொடி பிடிக்கிறேன் என்ற பொருளும் இல்லை. தேடியந்திரமாக கூகுள் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அண்மை ஆண்டுகளாக கூகுளின் தேடல் முடிவுகளில் வெளிப்படையாக தெரியும் வர்த்தக+ விளம்பர […]

கூகுளுக்கு மாற்று என்று சொல்லப்படும் ஏஐ தேடியந்திரம் பெர்ப்ல்க்சிடி தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் சிறிய நூல்...

Read More »